நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 30, 2022

வாழ்க சீர்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று 
கார்த்திகை 14
  புதன் கிழமை

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தமது இல்லத்தில் பூஜை செய்யும் போது இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பதிகம் பாடுகின்ற அருமையான காணொளி..


ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்!..
-: கந்தபுராணம் :-

முருகா.. முருகா..
***

18 கருத்துகள்:

 1. சீர்காழி கோவிந்தராஜன் இல்லத்துக்கு திருமுருக கிருபானந்த வாரியார் வருகை தந்து பூஜை செய்தபோது என்று புரிந்து கொள்கிறேன். உடன் நிற்பது இளம் சிவசிதம்பரம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. சில நாட்கள் முன்னர் இந்த வீடியோவை எபி குழுவில் கூடப் பகிர்ந்திருந்தேன். நேற்றுத் தான் டெலீட் செய்தேன் அருமையான வீடியோ. சீர்காழியின் வெண்கலக்குரல் காதுகளிலேயே ஒலிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வெண்கலக்குரல் காதுகளிலேயே ஒலிக்கும்.//

   உண்மை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி. நன்றியக்கா..

   நீக்கு
 3. காணாமல் போகாம இருக்கணும்.

  பதிலளிநீக்கு
 4. காணொளி மிகவும் அருமை ஜி

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. முருகனின் அழகு மிகும் படமும், காணொளியும், பார்த்து, கேட்டுக் கொண்டேன். காணொளி பாடல் நன்றாக உன்னது. கம்பீரமான சீர்காழி அவர்களின் குரல் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கம்பீரமான சீர்காழி அவர்களின் குரல்//

   ஈடு இணை இல்லாத கம்பீரம்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. காணொளியை மிக மிக ரசித்தேன். என்ன ஒரு குரல்!!! மனதில் இன்னும் ரீங்காரமிடுகுறது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 7. மீண்டும் பக்தி மழையில் .கண்முடி கேட்க்க,,,,,,,அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனையோ வருடங்கள் கழித்து தங்கள் வருகை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. சீர்காழியின் குரலில் அருமையான பக்திப் பாடல்.
  எனது பெற்றோர்கள் இப்பொழுது இல்லை முன்னர் கிருபானந்த வாரியார் அவர்களை தரிசித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.சீர்காழியின் பக்திப்பாடல்களும் அவர்களுக்குப் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னர் கிருபானந்த வாரியார் அவர்களை தரிசித்து மகிழ்ந்திருக்கிறார்கள்
   //
   அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நீக்கு