நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 12, 2022

குடும்பம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 26
 சனிக்கிழமை


மேற்கத்திய நாடுகளில் வருவதற்கு ஆளில்லாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழிபாட்டு இடங்கள் இழுத்து மூடப்பட்டு - மது அருந்தும் இடங்களாக, இரவு கேளிக்கை விடுதிகளாக மாறி இருக்கின்றன... என்றொரு செய்தியை இணைய தளத்தில் படித்தேன்..

இதற்கு அவர்கள் கண்டு பிடித்திருக்கும் காரணம் கூட்டுக் குடும்ப முறை ஒழிந்தது.. நல்லொழுக்கம் அழிந்தது.. உறவு முறைகள் அற்றுப் போயின - என்பது தானாம்..

இங்கே, நம் நாட்டின் நல்லொழுக்கம்
மேலை நாகரிகத்தால் தாக்கப்பட்டு குற்றுயிராகக் கிடக்கின்றது ..  இப்போது தான் சீர்கேடுகள் ஒவ்வொன்றாக அரங்கேறிக்  கொண்டிருக்கின்றன..

இதெல்லாம்
ஐரோப்பிய ஆங்கிலேயக்  கோமாளிகள்  - நாகரிகம் என்ற பேரில் இந்த  மண்ணுக்குக் கற்றுக் கொடுத்தது..

அன்றைக்கு அவர்கள் நம் நாட்டில் அடித்து வைத்த ஆப்பு இன்றைக்கு அவர்கள் பக்கமாகத் திரும்பியிருக்கின்றது..

குல தெய்வ வழிபாடு, குடும்ப கௌரவம், கூட்டுக் குடும்ப நிர்வாகம் -  இவற்றை அழிப்பதையே  லட்சியமாக்கி நிறைவேற்றியும் இருக்கின்றார்கள்..

டமிலனுக்கு (தமிழனுக்கு) தெய்வம் இல்லை.. மதம் இல்லை.. 

மதத்தை நம்புகிறவன் மடப் பயல்..
குல தெய்வத்தைக் கும்பிடுபவன் கிறுக்குப் பயல் என்றெல்லாம் ஏகப்பட்ட  சத்தங்கள்.. 

வெள்ளக்காரனப் பாரு..
அரபிக்காரனப் பாரு!.. அவன் எல்லாம் குல தெய்வம் கும்பிட்டுக்கிட்டா இருக்கான்?..
என்கிற அறிவுரைகள் வேறு..

குல தெய்வம் - என, அன்றொரு திரைப்படம் வந்தது.. 

இன்றொரு திரைப்படத்துக்கு அப்படியான பெயரை அறிவிப்பு செய்தாலே போதும்.. 

ஆ... ஊ... என்று,
ஆசனத்தில் அமிலம் பட்டது போல அலறிக் கொண்டு -
அந்தப் பக்கத்தில் இருந்தும் இந்தப் பக்கத்தில் இருந்தும் நடுநிலை எடுப்புச் சோறு ஆயிரக் கணக்கில் வருவார்கள்..

குல தெய்வ வழிபாடு என்பது என்ன?.. 



குடும்பம் என்பது
அந்தந்தச் சமூகங்களின் வாழ்வியல் அடையாளம்..

அது இல்லறத்தானுக்கு மட்டுமே உரியது..

குல தெய்வ வழிபாடு அழிந்து போனால் என்ன ஆகும்?..


பங்காளி எனப்படும் தந்தை வழியும் தெரியாது..
தாயாதி எனப்படும் தாய் வழியும் புரியாது..

மோகம்..ன்னு வந்து விட்டா முகவரியே தேவையில்லே!.. - என்கிற தகர டப்பா பாட்டுடன் - பல ஆண்டுகளுக்கு முன்பு  திரைப்படம் ஒன்று வந்தது..

ஆமாம் வந்தது.. அதனால் என்ன?.

முகவரி இற்றுப் போகும் போது எதிர் பாலினத்தின் உறவு முறையும் அற்றுப் போகும்..

சரி.. அதனால்?..

அக்கா யாரு - தங்கச்சி யாருன்னு தெரியாது..

யாருடனும் ஆடலாம்..
யாருடனும் கூடலாம்!..
எல்லாமே ஐரோப்பிய ஆங்கிலேயனின் நடைமுறை ..

பழகுவோம்.. விலகுவோம்!..
இதுதான் இப்போது..

பழகுவோம் - இன்றைய தலைமுறைக்கு இதன் அர்த்தமே வேறு..

இதன் விளைவு -
காய்ந்து போன சுள்ளியில் வைக்கப்பட்ட தீ -
காட்டை அழித்தது போலத் தான்..

தந்தை தாய்  தெரியாமல்
தங்கை தமக்கை புரியாமல்
அண்ணன் தம்பி அறியாமல் அன்பு காட்ட ஆளில்லை என்றால் -

அனாதைகளாக வாழ்வதா வாழ்க்கை?!..

ஆங்கிலேய ஐரோப்பியன் மாதிரி - 

" ஹாய்.. How are you!.. " - என்று கேட்டு விட்டால் அதுதான் அன்பு என்று நினைத்துக் கொள்கின்றார்கள் ..

அதுவா அன்பு?..



மனம் நெகிழ்ந்து பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும்
மனம் கலங்கிச் சிந்தும் கண்ணீர்த் துளிகளும் தான் அன்பு..

அத்தகைய  -
அன்பின் வேர்கள் அறுந்து உறவு முறைகள் அழிந்து போனதாலேயே மேற்கத்திய நாகரிகத்தில் இடி இறங்கி இருக்கிறது..


தமிழகத்தில் மட்டும் என்ன?..



ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசினரால் முன்னெடுக்கப்பட்ட  சிறு குடும்பத் திட்டத்தினால்
மிகுந்த கலாச்சாரமுடைய உறவு முறைகள் அழிந்து கொண்டிருக்கின்றன.. ஏறக்குறைய அழிக்கப்பட்டு விட்டன..

அதட்டுவதற்கும் அடிப்பதற்கும் பெரியப்பா சித்தப்பா இல்லாமல் போனார்கள்.. 

கண்டிக்கும் மாமியும் கண்காணிக்கும்  அத்தையும் காணாமல் போனார்கள்..

அள்ளாத அமுதமாய் ஆச்சியும் தாத்தாவும் அழிந்தே போனார்கள்..


சிறு குடும்பம் சீரான வாழ்வு என்றார்கள்..
சிறு குடும்பம் இருக்கின்றது.
சீரான வாழ்வு இல்லையே.. ஏன்?.. 

நாம் இருவர் நமக்கு இருவர் என்றார்கள்.

இன்றைக்கு வீட்டுக்கு வீடு  ஒற்றைப் பனை மரம் தான்... 

இதுவா வீடு.. 
இதுவா குடும்பம்?..

குடும்பம் என்பது சமஸ்கிருதத்தில்..  

வீடு என்பது நிறைவு.. நிறைவு என்பதற்குத் தமிழில் பல அர்த்தங்கள்.. 

நிறைவாக இருப்பது தான் வீடு.. அந்த மாதிரி ஒரு வீடு உண்டா நாட்டில்?..


வீடு என்பது குடியிருக்கும் இடம் மட்டுமல்ல..
இறைவனது திருவடி.. 
முக்திப் பேறு..

திரைச்சித்திரம்: பாமா விஜயம்
பாடல்: கவியரசர்
இசை: மெல்லிசை மன்னர்
பாடியவர்கள்
P. சுசிலா, L.R.ஈஸ்வரி
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி


சிந்திப்போம் சிந்திப்போம்..
சந்ததியை வாழ வைப்போம்..

வாழ்க நலம்!..
***

20 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.  நல்ல கருத்துகளை சொல்லி இருக்கிறீர்கள்.  இந்த ஆதங்கம் இருப்பவர்கள் நிறையபேர் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலை.  வீணர்களின் பேச்சு ஓங்கி ஒலிக்கும் காலம் இது.  உரைத்துப் பேசுவதாலேயே உண்மையாகி விடும் என்று நினைப்பவர்கள் பெருகி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வீணர்களின் பேச்சு ஓங்கி ஒலிக்கும் காலம் இது.. //

      உண்மை தான்..

      ஆனாலும்,
      உரத்துப் பேசுவதாலேயே உண்மையாகி விடுமோ என்று அச்சமாக இருக்கின்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. உங்கள் நியாயமான ஆதங்கத்தை பாதியை படங்களே சொல்லி விடுகின்றன.  அருமையான படங்களைத் தெரிவு செய்து பன்னீராய் தெளித்துள்ளீர்கள்.  ஏக்கம்தான் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. ஒரு பக்கம் ஒரு மதத்தார் கட்டுப்பாடு கட்டுப்பாடு என்று அளவுடன் பெற்றுக்கொள்ள இன்னொருபக்கம் மாற்று மதத்தவர்கள் சிலர் கட்டுப்பாடுகளை மதிக்காமல் அறுதி பெரும்பான்மை பெறப் போராடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் நம் நாட்டின் சாபக்கேடுகள்..

      யாருடைய தவறோ தெரியவில்லை..

      தங்கள் அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. அருமையான விளக்கம் ஜி.

    இன்று "நாமே குழந்தை நமக்கேன் குழந்தை" என்ற தத்துவத்தை சொல்லி விட்டனர்.

    ஆணும், பெண்ணும் விடுதிகளில் தங்கலாம் என்று நீதியரசர்கள் சொல்லி விட்டனர்.

    திருமணத்திற்கு முன்பு சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்ன குஷ்புவை காண இன்றும் கூட்டம் கூடுகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆணும், பெண்ணும் சேர்ந்து விடுதிகளில் தங்கலாம் என்று நீதியரசர்கள் சொல்லி விட்டனர்...//

      ரொம்பவும் நல்லது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. ஆணி அடித்தாற் போன்ற அருமையான வார்த்தைகளைக் கொண்டு கூட்டு குடும்பத்தின் நன்மைகளை மனதில் இருத்தும் வண்ணம் ஓவியமாக்கி, பதிவெனும் சட்டத்திற்குள் அடக்கித்தந்த விதத்தை கண்டு மகிழ்வடைகிறேன்.

    /அதட்டுவதற்கும் அடிப்பதற்கும் பெரியப்பா சித்தப்பா இல்லாமல் போனார்கள்..

    கண்டிக்கும் மாமியும் கண்காணிக்கும் அத்தையும் காணாமல் போனார்கள்..

    அள்ளாத அமுதமாய் ஆச்சியும் தாத்தாவும் அழிந்தே போனார்கள்../

    உண்மை. உண்மை. ஆனால், இப்போதுள்ள இன்றைய கால நிலை இவர்கள் அனைவரும் அருகருகே இருந்தாலும், இத்தகைய உறவுகளுடன் இணக்கமாக இருந்து சேர்ந்து வாழ விரும்புவதில்லை. காரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தானே விதைத்தெழுந்து முளைத்து நிற்கும் சுயநலப்பயிர்கள்.

    கூட்டு குடும்பத்தின் சிறப்புகளை, மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள் ஒவ்வொன்றும் பதிவுக்கு தோளாடு தோள் சேர்தாற்போல் துணை நின்று நட்பின் பெருமையை பறைசாற்றுகின்றன. நல்லதொரு அன்பான, பண்பான பதிவுக்கு மனம் நிறைந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தானே முளைத்தெழுந்து நிற்கும் சுயநலப் பயிர்கள்..//

      தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அனைத்தும் மாறும் காலமும் வரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் வரட்டும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  7. என் மனதில் பொங்கிக் கொண்டிருந்த விஷயங்கள். அருமையாக அழகாகச் சொல்லி விட்டீர்கள். செவிடன் காதில் ஊதும் சங்கைப் போல் ஆகாமல் இருந்தால் நல்லது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருத்து டப்பாவில் இருந்தது..

      மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  8. பதிவும் பாடல் பகிர்வும் அருமை.
    மீண்டும் நாடகங்களில் கூட்டு குடும்பம் அன்பு, பாசம் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.
    பக்கத்து வீட்டுககாரர்களையும் உறவு முறை வைத்து தான் அழைப்போம். இப்போதும் சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள்.

    உறவுகளை தேடி , உறவுதான் பலம் என்ற காலம் வரும்.
    மேலை நாடுகளில் முதியவர்களை மதிக்கும் பிள்ளைகளை பார்த்தேன். மகன், மகள் ஊரில். முதியவர்களுக்கு அரசு உதவி தொகை கொடுக்கிறது. பேரன் பேத்திகளுடன் மகிழ்வாய் கடைத்தெரு, ஓட்டல் என்று அவர்களை பார்த்து இருக்கிறேன்.
    வெளி நாட்டில் முன்னோர் வழிபாடு உண்டு. ஹாலோவின் தினம் முன்னோர் வழிபாடுதான். நம் பக்கம் கல்லரை திருநாள் என்று அவர்கள் முன்னோர்களை வணங்கி வருகிறார்கள்.
    நல்லதை பகிர்வோம், அல்லது தானாக மறையும்.
    படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உறவுகளைத் தேடி , உறவுதான் பலம் என்ற காலம் வரும்..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ோவியங்கள், அழகிய பதிவுக்கு அழகு சேர்க்கின்றன (மறைந்த ஓவியர் இளையராஜா, குடிம்ப, கூட்டுக் குடும்ப, நம் பாரம்பர்யங்களை ஓவியப்படுத்தியவர்). பதிவு மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஓவியங்கள், அழகிய பதிவுக்கு அழகு சேர்க்கின்றன.. //

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  10. //Geetha Sambasivam "குடும்பம்” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    என் மனதில் பொங்கிக் கொண்டிருந்த விஷயங்கள். அருமையாக அழகாகச் சொல்லி விட்டீர்கள். செவிடன் காதில் ஊதும் சங்கைப் போல் ஆகாமல் இருந்தால் நல்லது..// ட்ராஷில் இருந்த கருத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து போட்டிருக்கேன். என்னடா, நமக்கு மட்டும் பதிலே இல்லையேனு பார்த்தால் இங்கே கருத்தே காணாமல் போயிருக்கு! :( மறுபடி ப்ளாகர் தன் வேலையை ஆரம்பிச்சிருக்குப் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா.. நீங்கள் வந்து ஏதும் சொல்ல வில்லையே.. என்றிருந்தேன்..

      இப்போது ஆறுதலாக இருக்கிறது...

      ஆனாலும்,
      // செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல் ஆகாமல் இருந்தால் நல்லது..//

      அப்படித்தான் ஆகும் போல் இருக்கின்றது..

      முறையாக தமிழ்க் கல்வி பயின்று விட்டாலே போதும்.. எல்லாம் சரியாகி விடும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..