நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 19, 2022

செண்டார் கையன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 3
   சனிக்கிழமை


ஸ்ரீ ஐயப்பனின் மண்டல பூஜை நாட்களின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பதிவு இன்று..
**
சூரபத்மனுக்கு அஞ்சிய தேவேந்திரன் தனது தேவியுடன் வேணுபுரம் எனப்பட்ட மூங்கில் வனத்துக்கு வந்து ஒளிந்திருந்தான்.. 

ஒருநாள் அவனுக்கு திருக்கயிலாயம் சென்று ஈசனைத் தரிசித்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் எண்ணம் வந்தது.. கூடவே இந்த்ராணியை தனித்து விடவும் இயலாது.. கூட அழைத்துச் செல்லவும் முடியாது என்ற இயலாமையும் புரிந்தது.. 

அப்போது அங்கே தோன்றிய நாரதர் தர்மசாஸ்தா எனும் ஸ்ரீ ஹரிஹர புத்திரனைப் பற்றி விளக்கினார்.. 

அதன்படி இந்திரன் ஸ்ரீ ஹரிஹர புத்திரனைப் பணிந்து வணங்கி அவரது பொறுப்பில் இந்த்ராணியை விட்டுச் சென்றான்.. 

அதே வேளையில் தேவேந்திரனைச் சிறைப் பிடிப்பதற்காக வந்த அஜமுகி - சூரபத்மனின் தங்கை - தனித்திருந்த இந்த்ராணியைக் கண்டு அவளைக் கைப்பற்றினாள்..

அப்போது, இந்த்ராணி -

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம் விண்ணோர் ஆதியே ஓலம் செண்டார்
கையனே ஓலம் எங்கள் கடவுளே ஓலம் மெய்யர்
மெய்யனே ஓலம் தொல் சீர்வீரனே ஓலம் ஓலம்!..

- என்று, ஓலக்குரல் எழுப்பியதைக் கேட்ட ஸ்ரீ தர்ம சாஸ்தா தனது படைத் தளபதிகளுள் ஒருவரான ஸ்ரீ மஹாகாள மூர்த்தியை அனுப்பி வைக்கின்றார்.. 

மஹாகாளர் அஜமுகியிடம் நீதியை எடுத்துக் கூறியும் அவள் அதைக் கேட்காமல் வரம்பு மீறி நடந்து இந்த்ராணியின் கூந்தலைப் பற்றி இழுக்கிறாள்..

கோபம் கொண்ட  மஹாகாளர் அஜமுகியின் கையை வெட்டித் தள்ளி விடுகின்றார்..

ஸ்ரீ கந்த புராணம் காட்டும் சம்பவம் இது..

ஸ்ரீ மஹாகாள மூர்த்தி தான் இன்றைய ஐயப்ப வழிபாட்டில் ஸ்ரீ கருப்பசாமி எனும் காவல் நாயகம்..

இன்றைய ஐயப்ப வழிபாடு  சங்க கால தமிழகத்தில் சிறப்புற்றிருந்தது.. சாத்தன் எனும் பெயரில் ஊர்கள் தோறும் கோயில்கள் இருந்தன.. மக்களில் பலருக்கும் சாத்தன் எனும் பெயர் அமைந்திருந்தது..

ஸ்ரீ ஹரிஹர புத்திரனாகிய மஹா சாஸ்தாவிற்கு யானை வாகனம். குதிரையும் கூட வரும்.

செண்டு எனப்பட்ட  சுரிகாயுதம் இவருக்கு உரியது.. இது சாட்டை என்று சொல்லப்படுவது.. 


பூர்ணகலை, பொற்கலை - என , தேவியர் இருவர் இருபுறமும் திகழ்வர்.. பூத கணங்களை அடக்கி அவற்றுக்கு தலைவனாக விளங்குபவர்..

சாஸ்தா எனும் சொல்லின் தமிழ் வடிவமே சாத்தன் என்பது..

சாத்தன் எனில் வலிமையுடையவன் என்றும் பொருள்.. 

அதனால் தான் பெருங் கழுகை அடித்துத் துரத்தும் சின்னஞ்சிறு கரிக்குருவிக்கு ஆனைச் சாத்தன் எனும் பெரிய பெயர் அமைந்தது..


இப்படியான சாத்தன் எனும் பெருமானுக்கு தந்தை ஈசன் என்றும் ஈசனின் தேவியானவள் ஹரி எனும் பெயரையும் உடையவள்  என்றும் அப்பர் ஸ்வாமிகள் தமது திருப் பாடல்களில் பதிவு செய்திருக்கின்றார்..

அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே.. - என்று திரு ஐயாற்றில் பேசுகின்ற அப்பர் ஸ்வாமிகள் -

காவியங்கண்ணள் ஆகி
கடல் வண்ணம் ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே.. - என்று புகழ்கின்றார்..

கடல் வண்ணன் என்பது ஸ்ரீ வைகுந்த வாசனின் திருப் பெயர்களுள் ஒன்று..

பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே .. (4/32)

இறைவன் சாந்த வடிவாக எழுந்தருளும் போது உமா, கோப வடிவினில் காளி, போர்க் கோலத்தில் துர்கா, புருஷத்துவம் கொள்ளும்போது விஷ்ணு என்று சிவபெருமானின் சக்திகளை நான்காகக் கூறுவர் ஆன்றோர்..

பரமேஸ்வரியின் திருப்பெயர்களுள் கோவிந்த ரூபிணி என்பதும் ஒன்று என்பது இறை வழியில் நிற்பவர்க்குப் புரியும்..


ஓம் 
ஹரிஹர புத்ராய
புத்ர லாபாய சத்ரு நாசனாய 
மதகஜ வாகனாய
பிரத்யட்ச சூலாயுதாய
மஹா சாஸ்த்ரே நமோ நம:

ஸ்வாமியே சரணம் ஐயப்பா
***

19 கருத்துகள்:

  1. மிக அருமையான பகிர்வு. அஜமுகி இந்திராணியைக் கைப்பற்றியதும் மஹாகாளன் வந்து காப்பாற்றிய நிகழ்வையும் நான் ராமாயணம் எழுதும்போது குறிப்பிட்டிருப்பேன். நாம் என்னதான் சாத்தனும் சாஸ்தாவும் ஒன்றே என்றாலும் ஏற்காதவர்களே அதிகம். இது குறித்து முன்னர் மின் தமிழ்க்குழுமத்தில் விவாதங்களும் நடைபெற்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீ ஹரிஹர புத்திரன்.. அவரே மக்களின் நலன் கருதி பல்வேறு அம்சங்களில் திகழ்கின்றார்.. இதை உணர்ந்து கொள்ள முடியாதவர்களே குழாயடியில்
      சிவனுக்கும் ஹரிக்கும் பிள்ளை பிறக்குமா?..,
      சாஸ்தா என்பது யார்?.., ஐயப்பனுக்கும் ஐயனாருக்கும் என்ன சம்பந்தம்?.. - என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்..

      போலி அறிவாளிகள் செய்திருக்கின்ற ஆய்வுகள் என்று ஐயப்பன் பெயரால் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்..

      ஐயப்பனை அறிவதற்கு ஐயப்பனுக்குள் மூழ்கினால் அன்றி முடியாது..

      தக்கைகள் தகையுறுவதில்லை.. காலம் முழுதும் மிதந்து கொண்டே இருக்க வேண்டியது தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  2. மிக அருமையான பகிர்வு. அஜமுகி இந்திராணியைக் கைப்பற்றியதும் மஹாகாளன் வந்து காப்பாற்றிய நிகழ்வையும் நான் ராமாயணம் எழுதும்போது குறிப்பிட்டிருப்பேன். நாம் என்னதான் சாத்தனும் சாஸ்தாவும் ஒன்றே என்றாலும் ஏற்காதவர்களே அதிகம். இது குறித்து முன்னர் மின் தமிழ்க்குழுமத்தில் விவாதங்களும் நடைபெற்றன.

    பதிலளிநீக்கு
  3. ஆம்.  இந்த சாத்தியப்பாதான் எங்கள் குலதெய்வம்.  சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. இந்தச் செண்டு பற்றி உவெசா நூலில் வரும். மன்னார்குடி இராஜகோபாலன் கையில் செண்டு உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னார்குடிக்காரனோடு சேர்த்து 3 பேர். ஒருத்தர் வளநகர் என்னும் ஆறுபாதி, இன்னொருத்தர் வடுவூர். எத்தனை தரம் படிச்சிருக்கேன்! எத்தனை தரம் எழுதி இருக்கேன். இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    2. நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களுக்கு சாஸ்தா தான் குலதெய்வம். ஒவ்வொரு வருடமும் "சாஸ்தாப்ரீதி" எனப்படும் வழிபாடு நடத்துவார்கள். ஊரையே அழைத்து அமர்க்களமாக இருக்கும். அதுவும் கல்லிடைக்குறிச்சியில் உள்ள 18 அக்ரஹாராங்களும் சேர்ந்து பண்ணுவது மிகவும் பிரபலம். அதிலே கொடுக்கும் அந்தப் பாயசம்! ஈடு இணை இல்லை என்பார்கள். இந்த சாஸ்தா ப்ரீதி வழிபாடு பற்றியும் சாப்பாடு பற்றியும் நாஞ்சில் நாடனோ, வண்ண நிலவனோ, வண்ண தாசனோ எழுதி ஒரு கதை வந்திருக்கு. எங்கள் ப்ளாகில் கூடப் பகிர்ந்தார்கள் என நம்புகிறேன்.

      நீக்கு
    3. நெல்லை அவர்களின்
      அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
    4. எனக்கு மன்னார்குடியும் வடுவூரும் தான் தெரியும்..

      ஆறுபாதிக்கு சென்றதில்லை..

      நீக்கு
    5. // ஒவ்வொரு வருடமும் "சாஸ்தாப்ரீதி" எனப்படும் வழிபாடு நடத்துவார்கள்..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மேலதிகச் செய்தியும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  5. பதில்கள்
    1. சுவாமியே சரணம் ஐயப்பா..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. சாமி சரணம்..

      அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  7. சாத்தன் வழி பாடு மிக பழமையானது. சிலப்பதிகாரத்திலும் சாத்தன் வழிபாடு உண்டு.
    அருமையான பதிவு.
    எங்கள் குலதெய்வம் பூர்ணகலா, புஷ்கலா உடனுறை களக்கோட்டீஸ்வ்ரர் சாஸ்தா .
    அப்பர் தேவார பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சாத்தன் வழி பாடு மிக பழமையானது. சிலப்பதிகாரத்திலும் சாத்தன் வழிபாடு உண்டு.//

      ஆமாம்.. நானும் படித்திருக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மேலதிகச் செய்தியும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பூரணகலை, புஷ்கலைதான் முன்பு இருந்தது எங்கள் சாஸ்தா கோவிலில். இப்போது பூர்ணகலா, புஷ்கலா என்று வைத்து இருக்கிறார்கள்.
    பூரணை, புஷ்கலை என்ற சகோதரிகள் அய்யனாரை மணம் புரிந்தனர் என்று படித்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. // பூரணகலை, புஷ்கலைதான் முன்பு இருந்தது எங்கள் சாஸ்தா கோவிலில். இப்போது பூர்ணகலா, புஷ்கலா என்று வைத்து இருக்கிறார்கள்.//

    இரண்டு பெயர்களுக்கும் ஒரே பொருள் தான்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..