நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 27, 2022

தேடும் பணி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 11
  ஞாயிற்றுக்கிழமை

வேலையில்லாத எல்லாரும் ஏதோ 
ஒன்றைத் தேடுகின்ற வேலையில்!..


சில மாதங்களுக்கு முன்பு புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் சென்றிருந்தபோது கோயிலில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள்
கீழே உள்ள படங்கள்
புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தில்..நலமே வாழ்க..
***

23 கருத்துகள்:

 1. புன்னைநல்லூர் மாரியம்மனைத் தரிசித்துக்கொண்டேன்.

  பாடகச்சேரி சுவாமிகளைப் பற்றிப் படித்தது நினைவுக்கு வந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் இப்போதுதான் வருகிறேன். முதலில் வந்திருப்பது நெல்லை!

   நீக்கு
  2. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நெல்லை அவர்களுக்கு நன்றி

   நீக்கு
  3. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரகாரம் படம், திருக்குளம் ஆகியவற்றை பெரிது படுத்திப் பார்த்து ரசித்தேன்.  இந்த இடம் வந்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் படங்கள் ஏராளம்.. கோப்புகளில் இருந்து எடுக்க இயலவில்லை..

   மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 3. இது புது பஸ்ஸ்டாண்டா?  திருவள்ளுவர் தியேட்டர் அருகே பழைய பேருந்து நிலையம் இருந்தது.  அப்புறம் அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி வெளியே வந்து இடதுபுறம் திரும்பி வலது புறம் திரும்பினால் கும்பகோணம் சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டினார்கள் என்று நினைவு.  அதுவா இது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேருந்து நிலையத்தின் அமைப்பையே மாற்றி விட்டார்கள்.. முன்பு பேருந்து நிலைய வட்டாரம் சந்தைக் கடை மாதிரி எல்லாருக்கும் உதவியாக இருந்தது.. இப்போது பேருந்து நிலையத்துக்குள் பிரியாணி கடை வந்திருக்கின்றது
   நூறு கடைகளுக்கு மேல் எல்லாவற்றையும் இடித்து விட்டார்கள்.. இதற்காகவே தனி பதிவு தரலாம்.. தருகின்றேன்..

   கால் வலியினால் ஊர் சுற்றுவதற்கு இயலவில்லை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 4. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி...

   நீக்கு
 5. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. தஞ்சைப் பேருந்து நிலையத்தை (இது புதுசா?) அதிகம் பார்த்தது இல்லை. சுமார் 20 வருஷங்களுக்கும் மேலாகக் காரிலேயே பயணம் செய்துவிடுவதால் பேருந்து நிலையங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. புன்னைநல்லூர் மாரியம்மன், பங்காரு காமாட்சி ஆகியோரைத் தரிசிப்பதற்காகவே ஒரு முறை தஞ்சாவூர் சென்றோம். நாலைந்து முறை பெரிய கோயில் போயிருக்கோம் ஒவ்வொரு முறையும் புதுசாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தஞ்சைப் பேருந்து நிலையத்தை (இது புதுசா?) .. //

   பழைய பேருந்து நிலையம் தான்.. புதுப்பித்து
   அமைப்பை மாற்றி
   இருக்கின்றார்கள்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 6. கருத்து இன்னிக்காவது இருக்கானு பார்க்கணும். இல்லைனா இழுத்துட்டு வரணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கருத்து இன்னிக்காவது இருக்கானு பார்க்கணும்..//

   இது தான்... வேறு இல்லை ஒன்றும்..

   மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   நீக்கு
 7. தேடும் பணி சிறப்பு.ஞாயிறு புன்னை நல்லூர் அம்மன் தரிசனம் கிடைத்தது.

  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் படங்கள் அனைத்தும்அழகு!, துரை அண்ணா.

  இதில் சில வேறு கோணங்களில் பார்த்த நினைவு இருக்கிறது. இக்கோயில் பற்றியும், பாடகச்சேரி சுவாமிகள் பற்றியும் நீங்கள் எழுதியிருந்ததும் நினைவுக்கு வருகிறது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இதில் சில வேறு கோணங்களில் பார்த்த நினைவு இருக்கிறது.//

   ஆமாம்.. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் போட்டிருந்தேன்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 9. பிராகாரம் தெப்ப குளம், கோபுரம் சிலைகள் எல்லாம் ரசித்தேன்.

  பிராகாரம் கீழ் இருக்கும் அந்த தாழ்வாரம் போன்று உள்ள படம் முன்பும் பார்த்த நினைவு...அது போல கொடிமரம்...அப்புறம் தஞ்சை பேருந்து நிலைய முகப்புப் படமும்.

  பேருந்து நிலையம் புதுப்பித்தது சுத்தமாக அழகாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பேருந்து நிலையம் புதுப்பித்தது சுத்தமாக அழகாக இருக்கிறது.//

   தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு நன்றி சகோ..

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை.
  புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அம்மனை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன்.

  தஞ்சை புதுப்பிக்கப்பட்ட பேரூந்து நிலைய படங்களும் நன்றாக உள்ளது. அங்கும் ஒரு கோவில் கோபுரத்துடன் உள்ளதே..! தஞ்சை, கும்பகோணம் இங்கெல்லாம் நிறைய கோவில்கள். உண்டென தெரியும். அவ்வளவாக வந்ததில்லை. இப்போது சமீபத்தில் மகனுடன் வரும் போது முதன் முறையாக தெய்வச் செயலால் தஞ்சை பிரகதீஸ்வரர் தரிசனம் கிடைத்தது. மனதுக்கு நன்றாக இருந்தது.

  முன்பு பதினைந்து வருடங்களுக்கு முன் நவகிரஹ கோவிலுக்கு இரண்டு நாட்களில் சென்று தரிசித்து வந்தோம். அப்போது பெரிய கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. மீண்டும் ஒரு முறை நவகிரஹ கோவில்கள், தஞ்சை பெரிய கோவில் இங்கெல்லாம் வருவதற்கு அவனருளை வேண்டி நிற்கிறேன்.

  இப்போது தாங்கள் பகிர்ந்து கொள்ளும் கோவில்களையெல்லாம் படித்து ரசித்து அங்கு சென்று வந்த மாதிரியான உணர்வை பெற்று வருகிறேன். தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலைய படங்களும் நன்றாக உள்ளது. அங்கும் ஒரு கோவில் கோபுரத்துடன் உள்ளதே!..//

   அது பேருந்து நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோயில்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு நன்றி..

   நீக்கு
 11. புன்னை நல்லூர் கேள்விப்பட்டிருக்கிறேன் இப்பொழுதுதான் கண்டேன்.

  அழகிய படங்களுடன்அம்மன் தரிசனம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..