நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 9
வெள்ளிக்கிழமை
இன்றொரு திருப்புகழ்
திருத்தலம் கனகசபை
தில்லை திருச்சிற்றம்பலம்
தனதனன தனன தந்தத் ... தனதானா
தனதனன தனன தந்தத் ... தனதானா
இருவினையின் மதிம யங்கித் ... திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் ... றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட் ... டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே..
தெரிதமிழை யுதவு சங்கப் ... புலவோனே
சிவனருளு முருக செம்பொற் ... கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க் ... கெளியோனே
கனகசபை மருவு கந்தப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
(நன்றி : கௌமாரம்)
நல்வினை, தீவினை என்ற இரண்டினால்
எனது அறிவு மயங்கி அலையாமலும்
ஏழு நரகங்களிலும் உழலக் கூடிய நெஞ்சத்துடன் நான் திரியாமலும்
பரம குருவாகிய உனது அருளை நினைவில் வைத்து,
ஞானத்தெளிவு பெறுவதற்கு (ஏதுவாக)
உனது தரிசனத்தை எனக்கு நீ என்றைக்கு அருள்வாய்!..
அனைவரும் தமிழைத் தெரிந்து கொண்டு மகிழும்படிக்கு ஆராய்ந்து உதவுதற்காக சங்கத்தில் புலவனாக வந்தவனே..
சிவமூர்த்தி பெற்றருளிய முருகப் பெருமானே..
செம்பொன்னால் ஆன வீரக் கழல்களை அணிந்தவனே..
கருணையுடன் வாழ்வினை அனுசரிக்கும் அன்பர் தமக்கு எளியவனே..
கனகசபையில் வீற்றிருக்கும்
கந்தப் பெருமாளே!..
முருகா சரணம்
சரணம் சரணம்..
***
முருகா சரணம்.
பதிலளிநீக்குமுருகா சரணம்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நீங்கள் பகிர்ந்த அருமையான படங்களில் அழகான முருகனை கண்டு தரிசித்து கொண்டேன். திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் அருமை.
/பரம குருவாகிய உனது அருளை நினைவில் வைத்து,
ஞானத்தெளிவு பெறுவதற்கு (ஏதுவாக)
உனது தரிசனத்தை எனக்கு நீ என்றைக்கு அருள்வாய்!.. /
உண்மை.. நானும் அந்நாளுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
முருகா சரணம். இறைவன் அனைவரையும் தன் நல்லருளால் காத்திட வேண்டிக் கொள்கிறேன். பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இறைவன் அனைவரையும் தன் நல்லருளால் காத்திட வேண்டிக் கொள்கிறேன்..//
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..
முருகா சரணம்..
முருகா சரணம்...
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குமுருக தரிசனம் நன்று.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குமுருகனின் படமும், திருப்புகழும் விளக்கமும் அருமை.
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்கு//Geetha Sambasivam "கனகசபை” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
பதிலளிநீக்குமுருகன் அருள் அனைவருக்கும் குறைவின்றி கிடைத்திடப் பிரார்த்தனைகள். திருப்புகழ் பகிர்வுக்கும் விளக்கத்துக்கும் மிக்க நன்றி.// என்ன கொடுமை இது முருகா? என்னோட கருத்தை மட்டும் தினம் தினம் ஒளித்து வைக்கிறாயே? தேடிப்பிடிச்சுக் கொண்டு வந்து சேர்த்திருக்கேன். :(
காலையில் டாக்டரைப் பார்க்கச் சென்று விட்டேன்... மதியம் கொஞ்சம் உறக்கம்.. இனிமேல் கவனித்துக் கொள்கிறேன்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
கார்த்திகை வெள்ளி நாளில் முருகன் திருப்புகழ் பாடி இன்புற்றோம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதிருப்புகழ் பாடலும், விளக்கமும் அருமை.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவாழ்க நலம்..