நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 14, 2022

கார் வண்ணன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 28
 திங்கட்கிழமை

நேற்று Fb ல்
ஓவியர்
திரு. கேசவ் ஜி
அவர்களது கைவண்ணம்
கண்டு வந்த கவிதை
இன்றைய பதிவில்..



கருமுகிலின் வண்ணனுக்கு
கார்குழலில் கோதெடுத்து
காயாம்பூ தனைமுடித்து 
திருவிழிக்கு மைவடித்து
பாதமணித் தனிச் சிலம்பில்
செவ்விதழால் முத்தமிட
காசினியீர் கேளீரோ 
கனவொன்று நான் கண்டேன்!..

கனவதுவும் காட்சியென
கரதலத்தில் கண்ணனம்மா
அந்தமிலா அருமறையான்
அரவணையில் பயின்றது போல்
அன்னைமடி தூங்குகையில்
அகிலம் அதும் உறங்கிடுமோ
ஆரமுதே கண்வளராய்.. 
அருட்கனியே கண்வளராய்!..
**
ஓம் ஹரி ஓம்
***

12 கருத்துகள்:

  1. // அரவணையில் பயின்றது போல் 
    அன்னைமடி  தூங்குகையில் //

    அருமை.  அன்னையின் தலை கோதலில் அவனுறங்க அகிலமும் உறங்கிவிட்டால் அன்னையும் உறங்கி விட மாட்டாளோ...தலைகோதலும் நின்று விடாதோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கேஷவின் ஓவியம் இங்கே தெரியலை. ஆனால் எதுவாக இருக்கும் என யூகம் செய்து கொண்டேன் கவிதை நன்று. பலரும் முகநூலிலேயே கேஷவின் ஓவியத்திற்குக்கவிதை எழுதுகின்றனர். ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு வருவது மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆக்கபூர்வமான போட்டி அல்லவா? சரி, நேரம் ஆச்சு! வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கேஷவின் ஓவியம் இங்கே தெரியலை...//

      ஏனென்று தெரியவில்லையே..

      இந்த ஓவியம் தாயின் மடியில் தனயன் கிடக்க தலை வாரிப் பூச்சூடும் படம்...

      கேசவ் ஜி.. அவர்கள் இப்படி பாட்டு எழுதுமாறு ஒன்றும் சொல்லவில்லை..

      ஆனாலும் மனதுக்குள் ஊற்றெடுத்து வருகின்றது..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா...

      நீக்கு
  3. பாடல் மிக அருமை. கேசவ்ஜியின் ஓவியமும் எப்போதுமே அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களின்
      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அழகான ஓவியத்திற்கு அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகிய படமும் அதற்கேற்ற கவிதையும் மனதை அள்ளுகின்றன. ரசித்தேன்.

    /கேசவ் ஜி.. அவர்கள் இப்படி பாட்டு எழுதுமாறு ஒன்றும் சொல்லவில்லை..
    ஆனாலும் மனதுக்குள் ஊற்றெடுத்து வருகின்றது../

    ஆகா....! இந்த தெய்வீக அருளை இயற்கையாக கண்ணன் தங்களுக்கு தந்திருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். அதனால் உங்களின் அழகான கவிதைகளை ரசிக்கும் பாக்கியமும் எங்களுக்கு கிடைக்கிறது. இறைவனுக்கு நன்றி. அவன் உங்களுக்கு தந்திருக்கும் பெருங்கொடைக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்த தெய்வீக அருளை இயற்கையாக கண்ணன் தங்களுக்கு தந்திருப்பதில்..//


      நான் இன்னும் எளியவன் ஆகின்றேன்.. என்னால் ஆவது யாதொன்றும் இல்லை.. எல்லாம் இறையருளே..

      தங்களது
      அன்பின் வருகையும் விரிவான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..