நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 10, 2022

யாதவனின் வண்ணம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 24
 வியாழக்கிழமை

இன்றைய பதிவில்
நேற்று Fb ல்
ஓவியர்
திரு. கேசவ் ஜி
அவர்களது கைவண்ணம்
கண்டு வந்த கவிதை..

நன்றி: திரு. கேசவ் ஜி

வேதமுறு பாதங்கள்  கண்டேனே 
மலர்க்கமல செவ்வண்ணம்
நாதமுறு திருக்கரங்கள் கண்டேனே
மாமலரின் தனி வண்ணம்
மாதவனின் மணி வண்ணம் கண்டேனே
மாதுறையும் மலர் வண்ணம்
யாதவனின் மெய் வண்ணம் காணேனே  
அன்றளந்த அடி வண்ணம்!..

ஓம் ஹரி ஓம்
***

12 கருத்துகள்:

 1. அருமை.  அருமையாக எழுதி உள்ளீர்கள்.  இந்த நயம் எனக்கு கைவருவதில்லை.  உங்கள் ஸ்பெஷல் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமை. அருமையாக எழுதி உள்ளீர்கள்//

   உங்கள் கவிதைகளும் அருமை தானே..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை.ஓவியப் படம் மிகவும் கவர்ந்ததென்றால், அதனால் உருவான கவிதை மிக மிக அருமையாக உள்ளது. நம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திய சிறப்பானதொரு கவிதையை தந்த தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.அழகான படம் வரைந்த ஓவியருக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.//

   தங்கள் வருகையும்
   அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நீக்கு
 3. ஓவியத்துக்கு இணையான கவி அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும்
   அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி ..

   நீக்கு
 4. பலரும் எழுதி இருக்காங்க. தம்பியின் கவிதையும் நன்றாக இருக்கிறது. குழந்தை பாவம் எவ்வளவு சமர்த்தாய் அம்மா மடியில் உட்கார்ந்திருக்கான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // குழந்தை பாவம் எவ்வளவு சமர்த்தாய் அம்மா மடியில் உட்கார்ந்திருக்கான்.//

   அழகோ அழகு..

   தங்கள் வருகையும்
   அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 5. படக் கவிதை நீங்கள் எழுதியது நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும்
   அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..