நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 09, 2022

அன்னாபிஷேகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 23
புதன்கிழமை

இன்றைய பதிவில்
திங்களன்று
பல்வேறு சிவாலயங்களில் 
நிகழ்ந்த அன்னாபிஷேக 
வைபவப்படங்கள்..

அன்றைக்கு 
படங்கள் கிடைத்த நேரத்தில் இணையம் சரிவர இல்லை..  மேலும் மறுநாள் செவ்வாய்க் கிழமைக்கான பதிவும் பட்டியல் இடப்பட்டு விட்டது.. மாற்றி அமைக்கலாம் என்றால் இணையம் உதறிக் கொண்டு நிற்கின்றது..

எனவேதான் சிறு தாமதம்.. 

ஸ்ரீ பெருவுடையார்

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்

திருமாகாளேசர்
தஞ்சை  பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசியில் வடிக்கப்பட்ட அன்னம் கொண்டு, அபிஷேகமும் ஐநூறு கிலோ காய்களால் அலங்காரமும் செய்யப் பட்டதாக நாளிதழ் செய்திகள்..

கீழ்க்காணும் படங்களை வழங்கியவர் 
திரு. அகில்..
அவர் தமக்கு நன்றி..

திருகோடிகா

ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருவலஞ்சுழி

திருமணஞ்சேரி


கஞ்சனூர்
திருமாகாளம்
ஸ்ரீ பயக்ஷயாம்பிகைக்கு
ஐப்பசி பௌர்ணமியில்
நெய்க்குளதரிசனம்

ஸ்ரீ பயஷாம்பிகைகீழ்வரும் படங்களை வழங்கிய
அன்பின் ஸ்ரீராம்..
அவர்களுக்கு நன்றி..

கங்கை கொண்ட சோழபுரம்கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.. 7/94/3
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

 1. படங்கள் யாவும் சிறப்பு. நமச்சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தங்கள் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. படங்கள் எப்போதும்போல் அழகு.

  இயல்பான சிவலிங்கங்களே என்னைக் கவர்ந்தது, திருவலஞ்சுழி போல்.

  திருப்பாவாடை உற்சவப் படமும் ஒன்று இருக்கிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இயல்பான சிவலிங்கங்களே என்னைக் கவர்ந்தது, திருவலஞ்சுழி போல்//

   தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அழகிய தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. சிவபெருமானின் ஐப்பசி மாத அன்னாபிஷேக படங்கள் அனைத்தையும் கண்டு தரிசித்துக் கொண்டேன். ஒவ்வொரு படங்களும் என்னவொரு அழகு...! . அத்தனைப் படங்களும், காணக்காண மனம் குளிர்ந்து நிறைவாக சிவபெருமானின் திவ்ய தரிசனத்தில் ஆழ்ந்துப் போகச் செய்தது. இந்த ஊருக்கெல்லாம் எப்போது சென்று அங்குள்ள இறைவனை மனங்குளிர தரிசித்து இந்த வகையான மன நிறைவை அடைய முடியுமென எனக்குத் தெரியவில்லை. ஆனால் தங்கள் பதிவிலேயே இவ்வகையான பல கோவில்களின் இறைவனாரையும் தரிசிக்க செய்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே. 🙏.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இந்த ஊருக்கெல்லாம் எப்போது சென்று அங்குள்ள இறைவனை மனம் குளிர தரிசித்து.. //

   எனக்கும் இப்படியான எண்ணம் வருவதுண்டு..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு..

   அன்பின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி சீராளன்..

   நீக்கு
  2. காட்சிகள் கட்சி யாகிவிட்டதே 😂

   நீக்கு
  3. கட்சியும் காட்சியும் சாட்சியானதே..

   இன்னும் சொல்லலாம்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. மறைவிலா வலியில் உள்ளம்
  மகிழ்வினைத் தொலைத்த போதும்
  இறையினைப் பாட என்னுள்
  இருந்திடும் ஆசை கோடி
  நிறைவுட னோர்நாள் தன்னில்
  நினைவுகள் இருக்கும் போதில்
  குறைவிலா ஒளியோன் உன்னைக்
  கும்பிட் டெழுது கின்றேன்!


  அருமையான படங்கள் எல்லோருக்கும் இறைபாலிக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூவினில் நிறைவண்ணம்
   காவினில் கலைவண்ணம்
   பாவினில் தமிழ் மயம்
   நாவினில் சிவ மயம்

   வாழ்கவே வாழ்க
   வலியெலாம் மறந்து..

   தங்கள் கவிதைக்கு
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அன்னாபிஷேக படங்கள் எல்லாம் மிக அருமை.
  பகிர்வுக்கு நன்றி.
  சுந்தரர் தேவாரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தங்கள் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..