நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 17
திங்கட்கிழமை
தக்காளி மிளகு சூப்..
தக்காளிப்பழங்கள் இரண்டு
சின்ன வெங்காயம் 3
பூண்டு 3 பல்
மிளகுப் பொடி 1⁄2 tsp
சீரகப் பொடி 1⁄2 tsp
சோள மாவு 1⁄2 tsp
வெண்ணெய் தேவைக்கு
மல்லித் தழை சிறிதளவு
கல் உப்பு தேவைக்கு
செய்முறை
தனியானதொரு பாத்திரத்தில் தக்காளிப் பழங்களை போட்டு மூழ்கும் அளவுக்கு கொதி நீரை ஊற்றி
சில நிமிடங்கள் கழித்து -
தோலை உரித்துக் கொள்ளவும்..
வெங்காயம் பூண்டு சுத்தம் செய்து தோல் நீக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி - தோலுரித்த தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை கிண்ணம் ஒன்றில் தனியாக வைக்கவும்..
50 ml தண்ணீரில் சோளமாவைக் கரைத்துக் கொள்ளவும்..
உத்தேசமாக 500 ml
நீரை அடுப்பில் ஏற்றி அரைத்து வைத்திருக்கின்ற
தக்காளி விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
சோள மாவு கரைத்த
கலவையைக் கொதிக்கின்ற விழுதுடன் கலக்கவும்.
உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும். வெண்ணெயையும்
சேர்க்கவும்.
நன்கு கொதித்ததும் மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைக்கவும்..
மூன்று பேருக்கானது இது..
வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
மழை குளிருக்கு இதமான தக்காளி சூப் என்றாலும் எல்லா நாளும்
உடலுக்கு நலமளிப்பது..
நமது நலம்
நமது கையில்
ஃ
ஓம் நம சிவாய
**
நானும் அவ்வப்போது இப்படி செய்வதுண்டு. வெண்ணெய் மட்டும் வீட்டில் இருக்காது!
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
தக்காளி சூப் நல்ல செய்முறை .சூப்பராக இருக்கும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
நல்ல குறிப்புகள் துரை அண்ணா..
பதிலளிநீக்குதக்காளி சூப் செய்வதுண்டு அண்ணா. ஆனால் சோளமாவு கரைத்துச் சேர்ப்பதில்லை.
திருநீற்றுப் பச்சிலையையும் சேர்த்துச் செய்வதுண்டு. சில நிமிடங்கள் ஆவியில் வைத்தால் தோல் உரிந்துவிடும் இல்லையா? அப்படிச் செய்கிறேன்.
கீதா
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் மேலதிக
விவரமும்
மகிழ்ச்சி..
நன்றி சகோ
சிறப்பான ரெசிப்பி ஜி
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஜி