நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 09, 2025

விருட்சங்கள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 25
 ஞாயிற்றுக்கிழமை

மரங்கள் இறைவனின் வரங்கள்..

மரங்கள்
பறவைகளுக்கு உணவு அளிப்பதுடன அவற்றுக்கு உறைவிடமாகவும் இருப்பவை..

ஆதியில் மனிதனுக்கும் உணவு அளித்து அவனுக்கு அடைக்கலமாகவும் உறைவிடமாகவும் இருநதவை மரங்களே...

அந்த  நன்றியை இன்றும் நினைவில் வைத்து மரியாதை கொண்டிருப்பது நமது ஹிந்து சமயம் மட்டுமே.. 

ஹிந்து சமயத்தில் மரங்களும் வணங்கத் தக்கவையே. 


நல்ல ஹிந்து குடும்பத்திற்கு அரசு, அத்தி, ஆல், மா, மருதம், வில்வம், வேம்பு, வன்னி, கொன்றை, நெல்லி, நாவல் - மரங்கள் எல்லாம் தெய்வ வடிவங்கள்...  

அரச மரத்தை வலம் செய்து பிரம்மா, மகாவிஷ்ணு, சிவ பெருமான் ஆகிய மூவரையும் வலம் செய்ததாக பேருவகை
கொள்வது ஹிந்து சமுதாயமே..

ஹிந்துக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை மரங்கள்.. அவற்றுக்கு  காரணமின்றி ஒரு நாளும் துன்பம் செய்யப்பட மாட்டாது..

இந்த பாரத மண்ணில் கல்வி தழைத்ததே மரங்களின் நிழலில் தான்..

அரச மரத்தடியில் இருந்தே ஞானமும் கல்வியும் பிறந்தன....

திறந்து கிடந்த இந்நாட்டுக்குள் வணிகம் என்ற போர்வையுடன் நுழைந்த கொள்ளையர்களால் இவை எல்லாம் இழிவு செய்யப்பட்டன...
 அழிக்கப்பட்டன..

உனர்வுகள் எல்லாம் மழுங்கடிக்கப்பட்டன.. எல்லாம் மறக்கடிக்கப்பட்டன..

கருவுறுவதில் பெண்களுக்கு சிக்கல் இருப்பின் அவர்களை அரச மரத்தைச் சுற்றி வரச் சொல்வது வழக்கம்..

காரணம்
மிகுதியான உயிர்வளியினை
(ஆக்ஸிஜன்) வெளியிடுவது அரச மரம் தான்..

நினைவுப் பேழையினுள் இருப்பவைகளுடன் இணையத் தகவல் திரட்டு.. 
இன்றைய பதிவு - நன்றி விக்கி..


அரசு :
தலவிருட்சம் -
திருவாவடுதுறை
அரச மரத்தின் நுண்ணலைகள்  கருப்பைக் கோளாறுகளைப் போக்கும் தன்மையுடையது என்கின்றது நவீன விஞ்ஞானம்..

அரச மரம்  வெளியிடுகின்ற காற்றில், பெண்களின் மாதச் சுழற்சி சீராகின்றது..

மேலும் கர்ப்பப்பை சம்பந்தமான சுரப்பிகள் நலமடைகின்றன - என்கின்றனர் அறிவியலாளர்கள்..

இதைப்போலவே மரங்கள் அனைத்தும் மருத்துவ குணங்களை உடையவை என்றாலும் பதிவில் சொல்லப்பட்ட விருட்சங்களின் நலங்கள் மட்டும் ஓரிரு வரிகளில்..

ஆல் :
தலவிருட்சம் -
திரு ஆலங்காடு
ஆறாத புண்ணுக்கு ஆலம் விழுது அருமருந்து.. தோலில் எரிச்சல், ரத்தக்கசிவு,  நீரிழிவு, புண், சிரங்கு இவற்றுக்கு ஆலம் பட்டைக் கஷாயம் சிறந்தது.. சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..

அத்தி :
தலவிருட்சம் -
திரு ஒற்றியூர்
அடிக்கடி சோர்வு அடைவோருக்கு அருமருந்து..
சித்த மருத்துவரின் ஆலோசனையின்படி அத்தி மரத்தின் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் உடல் நலம் மேம்படும்.. அத்திப் பழங்கள் இரத்த விருத்திக்கு சிறந்தவை..


மா :
தலவிருட்சம் -
திருக்கச்சி ஏகம்பம்
வேம்பினைப் போலவே அருங்குணங்கள் பலவற்றைக் கொண்டதாகும்.. 

மாந்தளிர்கள் இரத்த சர்க்கரையைக் குறைக்க வல்லவை.. சித்த மருத்துவர் ஆலோசனையின்படி மா மரத்தின் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நீரிழிவு  நீங்கும்..

மருதம் :
தலவிருட்சம் -
திரு இடைமருதூர்
மருத மரப் பட்டையின் கஷாயம்
ரத்த நாளங்களின் இறுக்கத்தை தளர்வாக்குகின்றது.. இதனால் ரத்த ஓட்டம் எளிதாகி இதய நலம்  மேம்படுகின்றது.. சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..

வில்வம் :
தலவிருட்சம் -
திரு ஐயாறு
வில்வ இலையில் வைட்டமின் C  நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது... வில்வ மரத்தின் பட்டை வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு முதலியவற்றை உடனே நீக்கும்.. சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..


வேம்பு :
தலவிருட்சம் -
புள்ளிருக்கு வேளூர்
இம்மண்ணின் மகத்தான மரம் இது..  சிறந்த கிருமி நாசினி.. இந்த மரத்தை நம்மிடம் காட்டியே வெளி நாட்டு நிறுவனங்கள் பொருள் ஈட்டுகின்றன... அந்தக் காலத்தில் வீட்டில் மகப்பேறு நிகழ்ந்தால் வீடெங்கும் கிருமி நாசினியான வேப்பிலைக் கொத்துகளைக் கட்டி வைத்திருப்பார்கள்..

அம்மை நோய்க்கு வேப்பிலை தான் அருமருந்து.. பித்தளை அண்டாவில் நீர் நிறைத்து அதில் வேப்பிலை மஞ்சள் தூள் போட்டு வெயிலில் சில மணி நேரம் வைத்திருந்து உச்சிப் பொழுதில் குளித்தால் அதுவே மிகச் சிறந்த கிருமி நாசினி... 

இன்றைக்கு இரசாயன திரவங்கள் தான்  குழந்தைக்குப் பாதுகாப்பு என்கின்றார்கள்.. எல்லாம் கலி காலக் கொடுமை..

வன்னி :
தலவிருட்சம் - தஞ்சை
வன்னி இலைகளை  நீர் விட்டு அரைத்து ஆறாத புண்களின்
மீது பூசினால்  விரைவில் குணமாகின்றன.. பொதுவாக சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து.  பட்டையைப் பொடி செய்து கஷாயம் வைத்து அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்குகின்றன..

வன்னி மரப் பட்டையின் கஷாயம் கொண்டு வாய் கொப்பளித்தால்  பல்வலி, ஈறு வீக்கம் குணமாகும். சித்த மருத்துவரின் ஆலோசனை அவசியம்..
 

கொன்றை
:
தலவிருட்சம் - திருவெண்காடு
கொன்றை மரத்தின் பட்டைகளை
கஷயாமாக்கிக் குடித்தால்  நீரிழிவு மற்றும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.  இலையை  அரைத்துச் சாறெடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி படர்தாமரை உள்ள இடத்தில் பூசினால் அது சில நாட்களில் மறைந்து விடும்... சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..


நெல்லி
:
தலவிருட்சம் - திருநெல்லிக்கா
சித்தர்கள் கொண்டாடுகின்ற
காயகல்ப மருந்துகளில் இதுவும் ஒன்று.. 

நெல்லி மரக் கிளையின் துண்டுகள் சிலவற்றை 
உப்பு நீர் கிணற்றில் போட்டு வைக்க மூன்று நாட்களில்
உப்பின் கடுமை குறைந்து விடும்.
காயகல்ப மருந்துகளுக்கு சித்த மருத்துவரை அணுகவும்.

நாவல் :
தலவிருட்சம் - திரு ஆனைக்கா
நாவல் மரப் பட்டைகளை இடித்து சலித்து கஷாயம் வைத்துக் குடிக்க நீரிழிவு கட்டுக்குள் வரும்.. 
சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..
மாதாந்திர சுழற்சி காலம்  சீராகும்.. வேறு பல நன்மைகளையும் கொண்டது நாவல்... 

வேத காலத்தில் இந்த புண்ணிய தேசத்திற்கு 
ஜம்பு த்வீபம் என்பது பெயர்.. 

நாவலந்தீவு, நாவலந்தண் பொழில் -  என்றெல்லாம் தமிழில் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன..

தேவாரத்தில் இருந்து இதோ ஒரு திருப்பாடல்..

நாவலம் பெருந்
  தீவினில் வாழ்பவர்
மேவி வந்து
  வணங்கி வினையொடு
பாவ மாயின
  பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு
  நாகேச் சரவரே..  5/52/2 
-: திருநாவுக்கரசர் :-

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

2 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு. பயன் என்பதைவிட ஆரம்பத்தில் சொல்லப் பட்டிருக்கும் விவரங்கள் என்னைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  2. இந்துக்களின் வாழ்க்கையில் வணக்கத்துக்குரிய மரங்களின் சிறப்புக்கள் பற்றி விரிவாக தந்துள்ளீர்கள்.

    மரங்களைப் போற்றிக் காப்போம் நலன் பெறுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..