நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 22, 2025

சிந்தனை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 7
சனிக்கிழமை

இன்றைய
நற்சிந்தனை


படையெலாம் பகடு ஆர ஆளிலும்
பௌவஞ் சூழ்ந்து அர சாளிலும்
கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ
லாது எழுமட நெஞ்சமே
மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து
மருங்கெ லாங்கரும் பாடத்தேன்
புடையெ லாமணம் நாறு சோலைப்
புறம்ப யந்தொழப் போதுமே.. 7/35/6

அறியாமை பொருந்திய மனமே , யானைகள் நிறைந்திருக்க , பல படைகளையும் ஏவல்கொண்டு வெற்றியைப் பெற்று , அவ்வெற்றியாலே கடல் சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆட்சி செய்தாலும் , முடிவில் எல்லாம் , தேரையோடு ஒட்டியிருந்த வால் போல ஆகிவிடும்..

ஆதலால் , 

நீர் மடைகளில்  மலர்ந்திருக்கும் கழுநீர்ப் பூக்களின் நறுமணமும் பல இடங்களிலும் கரும்பை ஆலையில் இட்டுப் பிழிந்து பாகு காய்ச்சுதலால் உண்டாகும் நறு மணமும்  எல்லாப் பக்கங்களிலும்  மலர்ச் சோலைகளின் தேன் மணமும் கமழுகின்றதாகிய    திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம்.. கவலைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது புறப்படுவாயாக.. 



பறவைகளும் தவளைகளும் தான் கானகத்தில்  பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துபவை.

முட்டைகளில் இருந்து தவளைக் குஞ்சுகள் வெளி வருகின்ற போது ஒவ்வொன்றும் சிறு வாலுடன்  தோன்றுகின்றன..

தவளைக் குஞ்சு வளர்கின்ற நிலையில் வால் தானாகவே உதிர்ந்து விடுகின்றது..

இதைத் தான் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் மனித வாழ்க்கையின் செல்வ நிலையோடு ஒப்பிட்டுக் குறிக்கின்றார்...

ஏழாம் நூற்றாண்டில் சிற்றுயிர்கள் அவதானிப்பு இருந்திருக்க - 

வெள்ளையன் தான் நமக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்ததாக இங்கே சில   பிதற்றல்கள்..


சுந்தரர் திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

3 கருத்துகள்:

  1. நமச்சிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கடைசியில் வெள்ளையன் புரட்டுக்கும் ஒரு குட்டு வைத்திருப்பதையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய சுந்தர மூர்த்தி சுவாமியின் நற் சிந்தனை நன்று.
    வெள்ளையனைப் பற்றி கூறியது சிரிப்பை தந்தது.

    ஓம் நமசிவாய.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..