நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 24, 2025

சுழியன்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 10
திங்கட்கிழமை


தஞ்சாவூர் சுழியன் 

தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு 200 கிராம்
அரிசி மாவு 200 கிராம்
கோதுமை மாவு 50 கி
பழுப்பு வெல்லம் 200 கிராம்
ஏலக்காய் 2
தேங்காய் அரை மூடி
கடலெண்ணெய் தேவைக்கு


செய்முறை:

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.. ஏலக்காயைத் தட்டிக் கொள்ளவும்..
பழுப்பு வெல்லத்தை சின்னச் சின்ன துணுக்குகளாக உடைத்துக் கொள்ளவும்.. இதுவே இந்தச் சுழியனுக்குச் சுவை கூட்டுவது..

கடலைப் பருப்பை நன்றாக வேக வைத்து நீரை வடித்து விட்டு ஆறியதும் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்..

இதனுடன்  தேங்காய்த் துருவல், உடைத்த பழுப்பு வெல்லம் ஏலக்காய்த் தூள்  சேர்த்து கிளறிக் கொள்ளவும்... 

இதை அப்படியே சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.. 
இதைப் பூரணம் என்பது வழக்கம்..

அரிசி மாவுடன்
கோதுமை மாவு சிட்டிகை உப்பு மஞ்சள் தூளும் கலந்து,  நீர் விட்டு தளர கரைத்துக் கொள்ளவும். 

இரும்பு வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும்..
எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள  உருண்டைகளை  ஒவ்வொன்றாக கரைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து கவனத்துடன் எண்ணெயில் இட்டு வெந்ததும் எடுக்கவும்..

பாரம்பரிய சுழியனுக்கு - சுழியம், சுகியன் என்ற பெயர்களும் 
சற்றே மாறுபட்ட  செய்முறைகளும் இருக்கின்றன.. 

பூரணம் பிடித்த பின் அதை பழைய தோசை மாவில் தோய்த்து எடுப்பதும் உண்டு..

வழிபாட்டிற்கெனில் தனியாக கரைத்துக் கொள்வது நல்லது..

பாசிப்பருப்பைக் கொண்டு செய்வதும் வழக்கம்..

விநாயக வழிபாட்டில் இது முக்கியத்துவம் பெறுகிறது..

இது எங்களது கைப்பக்குவம்..

நமது நலம் நமது கையில்
**
ஓம்
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. எனக்கு மிகவும் பிடித்த பண்டம்.  மைதா மாவில் சப்பாத்தி போல தேய்த்து அதில் பூரணம் வைத்து பொறித்து எடுப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மைதாவை ஒதுக்கியாயிற்று..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மேலதிக செய்திகளும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு

      நீக்கு
  2. தஞ்சாவூர் சுழியன் நன்றாக இருக்கிறது.

    இதே போன்று பூரணம் செய்து உருண்டை பிடித்து மைதாவில் மஞ்சள் கலந்து தோய்த்து எடுத்து பொரிப்பதை சூசியம் என்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மைதாவை ஒதுக்கி விட்டோம்..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மேலதிக செய்திகளும்
      மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சுசியம் படங்களும், செய்முறை விளக்கங்களும் அருமை. ஆம். இது விநாயகர் பெருமாளுக்கு பிடித்த உணவு. அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். நாங்கள் சரஸ்வதி பூஜைக்கு தவறாது இதைச் செய்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..