நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 2
ஞாயிற்றுக்கிழமை
நுண்ணூட்ட விவரங்கள்
நன்றி
விக்கி, இந்தியன் எக்ஸ்பிரஸ்
இன்று சூரியகாந்தி யைப் பற்றிய சிறு குறிப்புகள்..
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் E துத்தநாகம் மற்றும் செலினியம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது..
சூரியகாந்தி விதைகளில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள LDL கொழுப்பு அளவைக் குறைக்கின்றது.
சூரியகாந்தி விதையில் உள்ள வைட்டமின் B6 மனநிலை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகின்றது..
இது மூளையில் செரடோனின் எனும் ஹார்மோன் சுரப்பதற்குத் துணையாகின்றது...
சூரியகாந்தி விதைகள் இரத்த சர்க்கரையின் அளவைக் குறைப்பதனால் நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது...
சூரியகாந்தி விதைகளில் வலுவான ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் புற்றுநோய் அபாயமும் குறைகின்றது..
சூரியகாந்தி விதைகளில்
மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.. சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளன..
சூரியகாந்தி விதைகளில் கலோரிகள் அதிகம்.. 100 கிராம் விதைகள் 585 கலோரி வரை சக்தியை அளிக்கின்றன..
சூரியகாந்தி எண்ணெய் சற்றே விலை அதிகம்.. எனினும், உடல் நலம் பேணுவதில் விலை தடையில்லை..
நமது கையில்
நமது ஆரோக்கியம்
*
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
அருமையான, உபயோகமான விவரங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சூரியகாந்தி விதைகளைப்பற்றிய நல்ல தகவல்கள். பயனுள்ள பதிவு. நானும் படித்தறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்பான தகவல்கள் ஜி நன்றி.
பதிலளிநீக்குநல்ல தகவல். நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்குசூரிய காந்தி விதைகள் நல்ல தகவல்கள்.
பதிலளிநீக்கு