நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
சனிக்கிழமை
திரு
வையாற்றில் காவிரி பூசப்
படித்துறையில் போட்டோ, வீடியோ எடுப்பது தடை செய்யப் பட்டுள்ளதாக அங்கே அறிவிப்பு உள்ளது.. எதிர் வெயிலில் எனது பார்வைக்கு அது புலனாக வில்லை.. என் மகன் என்னிடம் சொல்லிய பிறகு காவிரியைப் படங்கள் எடுக்கவில்லை..
ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் கிழக்கு கோபுர வாசல் இருந்தாலும் தெற்கு ராஜ கோபுரம் வழியாக நுழைவதே மரபு..
ஏனெனில் சிவனடியார்களை யம பயத்தில் இருந்து மீட்பதற்காக தண்டி எனும் துவார பாலகர் சிவாம்சத்துடன் நிற்பது தெற்கு வாசலில் தான்.. அதனாலேயே துவார பாலகரின் முன்பாக நந்நியும் எழுந்தருளியுள்ளார்..
ஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளிய போது இங்கே நிகழ்ந்து கொண்டிருந்த நாட்டியக் கலை நிகழ்வுகளைத் திருப்பதிகத்தில் பாடி - பதிவு செய்திருக்கின்றார்..
சிவ தரிசனம் காண்பதற்காக திருக்கயிலாய மாமலைக்குச் சென்ற திருநாவுக்கரசர் ஈசனின் ஆணைப்படி அங்கே மானசரோருவ தீர்த்தத்தில் மூழ்கி ஐயாற்றின் சூரிய தீர்த்தத்தில் எழுந்தார்..
ஈசனும் அம்பிகையும் சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபமாக பல்லுயிர்த் திரள்களில் தரிசனம் நல்கினர்..
இதனையே,
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்..
- என்று, பாடியருளினார்..
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
திருக் கண்டியூர் வீரட்டத்தில் வழிபட்ட பின்னர் திரு ஐயாற்றுக்கு வந்த போது கடக்க முடியாத படிக்குக் காவிரியில் வெள்ளப் பெருக்கு..
" ஆண்டருளும் ஐயாறப்பர் தம் செவிகளுக்கு!.. " - என்று உதவி கேட்டு சப்தமிட்டார் சுந்தரர்..
அப்போது தெற்கு வாசல் பிள்ளையாரும் சுந்தரருக்காக பெருங்குரல் எழுப்பினார்.. இதனால் ஓலமிட்ட பிள்ளையார் என்று அவருக்குப் பெயரானது..
ஈசன் அருளால் காவிரின் வெள்ளப் பெருக்கின் இடையே வழிநடைத் தடம் உண்டாக - சுந்தரரும் அதன் வழி நடந்து சிவ தரிசனம் செய்ததாக ஐதீகம்..
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..