நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 19
திங்கட்கிழமை
வழக்கத்தில் இருந்து மறைந்து. கொண்டிருக்கின்ற அருமையான தின்பண்டம் - கடலை உருண்டை...
இன்று நாம் - நமது கைகளாலேயே
நமது வீட்டில்
எளிமையான வேர்க்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி என்று இந்தப் பதிவின் வழி பார்க்கலாம்..
வறுத்த வேர்க்கடலை அரை கிலோ (தோலை நீக்கி விடவும்)
உருண்டை வெல்லம் கால் கிலோ
ஏலக்காய் பொடி சிறிது
பளிச் என்றிருக்கும் வெல்லத்தை விட பழுப்பு நிற உருண்டை வெல்லம் நல்லது..
உருண்டை வெல்லத்தை உடைத்து சமச்சீராக தூளாக்கிக் கொள்ளவும்..
வறுத்த வேர்க்கடலையை
சிற்றரவையில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தெடுத்த மாவை சுத்தமான தாம்பாளத்தில் கொட்டி வெல்லத் தூளையும் சேர்த்து -
இத்துடன் நாலு தேக்கரண்டி பசு நெய் விட்டுக் கிளறி உருண்டைகளாக உருட்டி சுத்தமான பாத்திரத்தில் வைத்திருந்து பிள்ளைகளுக்குக் கொடுக்கவும்..
அதெல்லாம் முடியாது. இப்போதே தின்றாக வேண்டும் என்று ஆவல் பிறந்தால் அரை மூடி தேங்காயைத் துருவி மாவில் போட்டுக் கிளறி தின்று விடலாம்..
அமிர்தத்திற்கு அமிர்தம்!..
ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!..
அரைக் கிலோ வேர்க் கடலைக்கு இருபது உருண்டைகள் கிடைக்கும்..
வேர்க் கடலைக்குப் பதிலாக வரகரிசியை மிதமான சூட்டில் சிவக்க வறுத்து அரைத்து மாவாக்கியும் இதேபோல
செய்யலாம்..
தினை மாவிலும் செய்யலாம்..
நமது நலம்
நமது கையில்..
ஃஃ
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
வெல்லப்பாகு பிடிக்க வேண்டாமா? அப்படியேவா உருட்டுவது? ஒட்டுமா?
பதிலளிநீக்குவெல்லப்பாகு தயார் செய்யவில்லை என்றால், பேசாம முழு வறுத்த தோலுடன் கூடிய வேர்க்கடலை மற்றும் வெல்லத்துடன் சாப்பிட்டுவிடலாம். வேலை மிச்சம்
நீக்குஎதற்கு வம்பு என்று எந்தக் கிழமையும் குறிப்பிடாமல் வெறும் 'கிழமை' என்று மட்டும் விட்டு விட்டீர்களோ!
பதிலளிநீக்குசூப்பர் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பதிலளிநீக்குஇப்போதும் கடைகளுக்குச் செல்லும்போது அடிக்கடி கடலை உருண்டை, கடலை மிட்டாய் வாங்குவது வழக்கம். குறிப்பாக கோவில்பட்டி கடலைமிட்டாய்.
பதிலளிநீக்குகடலை உருண்டை நல்ல செய்முறை. அரைத்து செய்ததில்லை.
பதிலளிநீக்குவெல்லப்பாகு ஊற்றி கிளறுவதுண்டு.
கடலை உருண்டை எனக்கு மிகவும் பிடித்த பண்டங்களில் ஒன்று.
பதிலளிநீக்குவேர்க்கடலை உருண்டை நாங்களும் செய்வோம்.
பதிலளிநீக்குமுதலில் எல்லாம் வெல்லப்பாகு வைத்து, கடலையை வறுத்துப் போட்டு உருட்டியதுண்டு. அதன் பின் பாகு வைக்கலைனா இப்படிக வறுத்த கடலைகளைப் பொடித்துக் கொண்டு வெல்லம் (சுத்தமாக இருந்தால்) பொடியைக் கலந்து கொஞ்சம் நெய் விட்டு உருட்டிவிடுவதுண்டு. வேலை எளிதாச்சு
பதிலளிநீக்குபாட்டி என்னோடுதான் இருந்தார் அவருடைய இறுதி மூச்சு வரை அவருக்கு வேர்க்கடலை உருண்டை ரொம்பப் பிடிக்கும். சில சமயம் இப்படிச் செய்ய முடியலனா பாட்டியே சொல்லிவிடுவார். வறுத்த வேர்க்கடலையும் வெல்லமும் ஒரு கிண்ணத்துல போட்டுக் கொடுத்துடு. நான் சாப்பிட்டுக்கறேன் உனக்கும் வேலை மிச்சம் என்பார். அப்பதான் தெரிந்தது அட! "ஹார்லிக்ஸ்' விளம்பரத்துல வராப்ல அப்படியே சாப்டிடலாம் என்று. அதன் பின் எப்பவாச்சும் நான் சாப்பிட்டதுண்டு ஆனா இப்பலாம் இனிப்புக்கு பெரிய தடா!
எனக்கு ரொம்பப் பிடிக்கும் . ஆனா சாப்பிட முடியாது!
கீதா