நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 10, 2025

கதம்ப அடை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 26
திங்கட்கிழமை


கதம்ப அடை

தேவையான பொருட்கள் :

சிறுதானியங்கள் வரகரிசி, குதிரைவாலி, சாமை, தினை – இவற்றில் ஏதாவது இரண்டு.. ஒவ்வொன்றும் 50 கி ஆக 100 கி

புழுங்கல் அரிசி பச்சைப் பயறு துவரம் பருப்பு
கடலைப் பருப்பு ஒவ்வொன்றும் 50 கி ஆக 200 கி

இஞ்சி சிறிய துண்டு
பூண்டு 7 பல்
மிளகு ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
வெங்காயக் குருத்து  3
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கல்உப்பு தேவையான அளவு
மல்லித் தழை  சிறிதளவு
கடலெண்ணெய் தேவைக்கு

செய்முறை :

சிறுதானியங்களையும் அரிசி பருப்புகளையும் இரவு முழுவதும் ஊற வைக்கவும்...

காலையில் வடிகட்டி எடுத்து, அதில  இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அதிகம் தண்ணீர் விடாமல் சற்றே அழுத்தமாக  அரைத்துக் கொள்ளவும்..

இந்த மாவுடன் பூண்டு, வெங்காயக் குருத்து கறிவேப்பிலை மல்லித் தழையை பொடியாக
நறுக்கிக் கலந்து கொள்ளவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கவும்.. அதில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்..  இதற்கு தேங்காய்ச் சட்னி ஏற்றது..

இதோ கதம்ப அடை 

இது சற்று அழுத்தமாக இருக்கின்ற அடை....

விருப்பம் எனில்
அரைத்த மாவுடன்  வெதுவெதுப்பான நீர் கொஞ்சம் சேர்த்து தளர்வாக்கிக் கொண்டு கல்லில்  வார்த்து எடுத்தால் முறுமுறுப்பாக இருக்கும்..


கூடுதல் விருப்பம் எனில், 
அடை  வார்க்கும் கல்லில் சுத்தமான நெய் தடவிக் கொள்ளலாம்..

அன்பின் சமையல்
ஆனந்த சமையல்
**
ஓம் சிவாய நம ஓம்
***

2 கருத்துகள்:

  1. மிளகாய் சேர்க்காத அடை.  எனக்கு காரம் வேணுமே....!  ரொம்ப மிளகு சேர்த்துக் கொண்டாலும் கசப்பு தட்டும்!

    பதிலளிநீக்கு
  2. நாங்கள் அடை வார்க்கும்போது தேங்காய் எண்ணெயில் வார்ப்போம்.  வாசனையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..