நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 9
ஞாயிற்றுக்கிழமை
கோடை மலர்ந்து கொண்டிருக்கின்றது.. இன்முகத்துடன் எதிர் கொள்வோம்....
(இருக்குற பிரச்னைல இவன் வேற!..)
இந்நாட்டின் மெய்ஞானிகள் -
இந்நாட்டிற்குள் கொள்ளையர்கள்
நுழைவதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்பாகவே - கார் காலம், குளிர் காலம், இள வேனில் காலம், முது வேனில் காலம், முன் பனிக் காலம், பின் பனிக் காலம் - என, பருவ காலங்களை வகுத்துத் தந்த வகையில் வேனில் என்ற கோடை வந்து கொண்டிருக்கின்றது...
வரவேற்போம்...
கோடை வெயிலில் தேவையின்றி அலைவது நல்லதல்ல.. சற்றே ஒதுங்கி இருப்பது சாலச் சிறந்தது..
இருப்பினும்,
பகல் பொழுதின் தேவைக்கு ஏற்ப குளிர்ந்த நீர் அருந்தவும்.. அதே சமயத்தில் பொது இடங்களில் அருந்துகின்ற தண்ணீரின் தரத்தை உறுதி செய்து கொள்வது அவசியம்..
தண்ணீர் பாட்டில் வகையறாக்களிடமும் கவனம் தேவை..
கோடை முடியும் வரை டீ காஃபி இவற்றை குறைத்துக் கொள்வதும் நல்லது..
கையில் பண இருப்பைப் பொறுத்து -
இளநீர், தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு சாத்துக்குடி பழச் சாறுகள், நன்னாரி வெட்டி வேர் போன்றவை ஊறிய மூலிகை நீர் இவற்றையும் அருந்தலாம்..
ஷர்பத் போன்ற பானங்களை கண்ட இடங்களிலும் குடிக்க வேண்டாம்...
தண்ணீர் நிறைந்த பழங்கள் காய்களை சற்று அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது..
தயிரில் தண்ணீர் விட்டு உப்பு போட்டு தளர்வாகக் கரைத்து அருந்துவது சிறப்பு.
இரசாயன பழச்சாறுகள்
வண்ணமிகு செயற்கை பானங்களை முடிந்தவரை தவிர்த்து விடவும்..
காரம் மிகுந்த உணவுகளில் இருந்து ஒதுங்கி இருத்தல் நல்லது..
அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களையும் ஊசி மூலமாக இரசாயன வண்ணம் ஏற்றப்பட்ட தர்பூசணிப் பழங்களையும் உணவு பாதுகாப்பு துறையினர் கைப்பற்றிய காட்சிகள் வியாழன்று தொ. கா. செய்தியில் காட்டப்பட்டது...
இப்படியான தண்ணீர் பாட்டில்கள் இரசாயன வண்ணம் ஏற்றப்பட்ட தர்பூசணிப் பழங்கள் இவற்றில் ஆகாதனவற்றைச் செய்து விற்பனை செய்கின்ற விஷமிகளுக்கு காலகதியில் என்ன தண்டனையோ...
நண்பர்கள் கவனமாக இருந்து இப்படியானவற்றைப் புறக்கணிக்க வேண்டியது அவசியம் அவசியம் அவசியம்!..
உஷ்ணத்தால் பாதிப்பு ஏற்பட்டால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்...
கோடையில் வாய்த்த குளிர் நிழல் என்பார்கள்..
இன்றைய சாலைகளில் குளிர் நிழல் எத்தனை பேருக்கு வாய்க்கக் கூடும்?..
ஆயினும்,
கோடையே வருக குளிர்
ஓடையாய் நிறைக..
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
கோடையை வரவேற்போம். (நாம் வரவேற்காவிட்டால் மட்டும் என்ன வராமலா இருக்கப் போகிறது!)
பதிலளிநீக்குஅதானே...
நீக்குவருவது வரட்டும்
வரவேற்போம்...
மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
இப்போதைக்கு தினம் ஒரு இளநீர் குடிக்கிறேன். ஒரு வாரம் குடிப்பேன். ஏனென்றால் ஒரு வாரம் பிஸியோதெரபி. அதற்கு எதிரேயே இளநீர்க்கடை.
பதிலளிநீக்குமுப்பது ரூபாய் இளநீரை ஐம்பது ருபாய் என்று சொல்லி "எங்களுக்காக" 45 ரூபாய்க்கு தருகிறார் கடைக்காரர்! "தினசரி" வாங்குகிறோமாம்!
///முப்பது ரூபாய் இளநீரை ஐம்பது சொல்லி 45 ரூபாய்க்கு ///
நீக்குஇங்கும் இதே மாதிரி மாயாஜாலங்கள் ..
மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
வேனில் கால நீராகாரங்கள், பழங்கள் பற்றிய நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குபடங்கள் பார்க்கவே நன்றாக உள்ளன.
நுங்கு எலுமிச்சை படமும் போட்டிருக்கலாம் கடைக்கு செல்லாது படங்களை பார்த்தே நீர் தாகம் தீர்ந்திருக்கும்.:)
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மேலதிக செய்திகளும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..