நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
திங்கட்கிழமை
அரிசி பருப்பு முதலான தானியங்களையும்
தேர்ந்தெடுத்த காய்களையும் கனிகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றி
ஆதிகாலம் தொட்டு நாம் நன்றாகவே அறிந்திருக்கின்றோம்..
இருப்பினும்
இன்றைய சிந்தனைக்கு..
1.
ரசாயன கலப்பில்லாத
தரமான தானியங்கள் காய்களையே சமைப்பதற்கு தேர்ந்து எடுக்க வேண்டும்..
2.
தேர்ந்து எடுத்த
பொருட்களை உலர்ந்த இடத்தில் பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்வது அவசியம்...
3.
உணவுப் பொருட்கள் சரியானபடி சமைக்கப்பட வேண்டும்..
4.
சமைத்த உணவை குறித்த நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும்..
5.
சிலவகை உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவதில் கவனம் தேவை..
6.
சமைக்கப்படாத பொருட்கள் சமைக்கப்பட்ட உணவு இரண்டையும் ஒருசேர வைப்பதிலும் கவனம் தேவை..
7.
சமைப்பதற்கு முன் கைகளை - பாத்திரங்களை நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும்..
8.
சமையலுக்கு எப்போதும் பாதுகாப்பான நீரையே பயன்படுத்த வேண்டும்..
9.
உணவை - சாப்பிடும் வரை சுத்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்..
10.
சமையலறையை காற்றோட்டமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்வது இன்றியமையாதது..
எல்லாவற்றுக்கும் மேலாக நலம் வேண்டும் எனில்,
தேங்காய், எள், கடலை - முதலான வித்துகளில் இருந்தே எண்ணெயைப் பெறுதல் வேண்டும்..
எண்ணெய் வித்துகளில் இருந்து நேரடியாக
பெறப்படும் எண்ணெய் தான் முதல் தரமானது...
செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கும் அனுபவத்தையும் ஆர்வத்தையும் பெரும்பாலான மக்கள் இழந்து விட்டனர்..
வெளிநாடுகளில் உள்ளதைப் போல
உணவு பாதுகாப்பு விதிமுறைகள் இங்கே இருப்பினும்
- அவற்றைப்
பின்பற்றுவோர் மிக மிகக் குறைவு...
சுகாதாரம் அறியாத ஆட்களால் சமைக்கப்பட்ட வெளி உணவுகளையும்
வணிக வழிக்கென
தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும்
இரசாயனங்களுடன் தயாரிக்கப்பட்ட அவசரகதி - திட திரவ உணவுப் பொருட்களையும்
ஊட்டச்சத்து ஏதுமற்ற மைதா சார்ந்த உணவுப் பொருட்களையும்
இன்றைய வாழ்வியல் சூழலில் முற்றாக ஒதுக்கி விட முடியாது..
இயன்றவரை தவிர்க்க வேண்டும்..
*
நலம்
நமது கையில்
***




சமைத்த உணவை குறித்த நேரத்துக்குள் சாப்பிட்டு //
பதிலளிநீக்குஎங்கே முடிகிறது? அது ஒரு நேரம்.. இது ஒரு நேரமாக ஆகும்
சமயங்களில்! ஆனாலும் முடிந்தவரை இதைக் கடைபிடிக்கிறோம்.
சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டால் சுவை.
முயன்றால் ஆகாததும் உண்டோ...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
பாதுகாப்பான நீர் என்றால் என்ன!! அப்படி இப்போது கிடைக்கிறதா நகரங்களில்?
பதிலளிநீக்குகடைகளின் குடி நீர்த் தொட்டியின் உள்ளே கண்டதுண்டோ...
நீக்குநல்ல குறிப்புகள். கடைப்பிடித்தால் ஆரோக்யம்தான், நல்லதுதான். இந்தக் காலத்துக்கு பெரும்பாலும் ஒத்துவராதவை. சில விஷயங்களை இந்தக் காலத்தில் தவிர்க்கவே முடியாது!!
பதிலளிநீக்குஉண்மை தான்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
நல்ல குறிப்புகள். முயன்றால் தொடர வாய்ப்புண்டு.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
விழிப்பு தரும் பகிர்வு.
பதிலளிநீக்கு"இரசாயனங்களுடன் தயாரிக்கப்பட்ட அவசரகதி - திட திரவ உணவுப் பொருட்களையும்...."
இயன்ற வரை தவிர்க்க வேண்டும்.
நல்ல அறிவுரை .
முடிந்தவரை வெளி உணவை தவிர்த்து விடுவேன்.
வீட்டிலும் எங்கள் தயாரிப்பு மசாலாக்கள்தான்.
முடிந்தவரை வெளி உணவை தவிர்த்து விடுவேன்.
நீக்குநல்லது...
மகிழ்ச்சி..
நன்றியம்மா.