நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 31, 2026

ஸ்ரீ ஐயனார்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 செவ்வாய்க்கிழமை


ஹரிஹர சுதனும்
தர்ம சாஸ்தாவும் ஆகிய 
ஸ்ரீ ஐயனாரின் நட்சத்திரம் பங்குனி உத்திரம்...

நாளை பங்குனி உத்திரம்...

பூதநாத சதானந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:
***

ஞாயிறு, மார்ச் 29, 2026

வாருங்கள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 ஞாயிற்றுக்கிழமை

தஞ்சையின் சிறப்புகள்

(படங்களைப்  பெரிதாக்கி மகிழவும்)




தஞ்சையில் அமைந்துள்ள அருங்காட்சியகங்கள்..

🔹 சோழர் அருங்காட்சியகம் 
( தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம் )
கட்டப்பட்டு வருகின்றது.

🔸 நாட்டுப்புற பண்பாட்டு அருங்காட்சியகம் (தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம்)

🔹 உணவு அருங்காட்சியகம் 
(திருச்சி சாலை)

🔸 இராசராசன் அருங்காட்சியகம் 
(மணி மண்டபம்)

🔹 தஞ்சாவூர் அருங்காட்சியகம் (பழைய நீதிமன்ற சாலை)

🔸 இராயல் அருங்காட்சியகம் (அரண்மனை)

🔹 நடராஜர் அருங்காட்சியகம் 
(அரண்மனை)


மேலே உள்ள குறிப்புகள் தகவலுக்காக மட்டுமே...

தொலைவு  மற்றும் ஏனைய வசதிகள் பற்றித் தெளிவுபடுத்திக் கொள்ளவும்..

 படங்களுக்கு நன்றி
தஞ்சையின் பெருமை

வாழ்க நலம்
***

வெள்ளி, மார்ச் 27, 2026

ஸ்ரீ ராமநவமி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 வெள்ளிக்கிழமை


ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராம ராம ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம  ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம  ஜய ராம ராம

ஸ்ரீ ராம ராம ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம  ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம  ஜய ராம ராம

ஸ்ரீ ராம ராம ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம  ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம  ஜய ராம ராம

ஸ்ரீ ராம ராம ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம  ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம  ஜய ராம ராம

ஸ்ரீ ராம ராம ஜய ராம ராம
ஸ்ரீ ராம ராம  ஜய ராம ராம
***

வியாழன், மார்ச் 26, 2026

தில்லை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 வியாழக்கிழமை 


இன்று 
தேவாரத் திருவமுது

 நன்றி
பன்னிரு திருமுறை

திருநாவுக்கரசர் அருளிச்செய்த
கோயில் திருப்பதிகம்..


காணொளிக்கு நன்றி

சித்தர் வழிபாட்டுக் குழு

ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண் 2

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.. 5/2/1

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.. 2

நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கும் அறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனி னம்பலத்
தாதி யையடி யேன்மறந் துய்வனோ.. 6

காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கைம ணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ.. 9

சிவாய திருச்சிற்றம்பலம்
***

செவ்வாய், மார்ச் 24, 2026

பூமகள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 செவ்வாய்க்கிழமை


எங்கள் பிளாக்கில் -  அஞ்சலை  கதையின் இரண்டாம் பகுதி வெளியான போது மதிப்பிற்குரிய மாதேவி அவர்கள் கதையை வாசிக்க வரவில்லை...

அஞ்சலை - 
 இரண்டாம் பகுதி -  கவிதையை அவர் பொருட்டு சற்றே விரிவாக எழுதியுள்ளேன்..

பச்சை நிறத்தில் உள்ளவை புதியன ஆகும்..

வாழ்க நலம்...

தென்மலையின் சந்தனமே
தேன்வழியும் செண்பகமே
பொன்னி நதிப் பூங்காற்றே
வந்திடம்மா பூ முடிக்க..

பொன்னிறத்துப் பூவரும்பே
நன்னிலத்து செங்கரும்பே
தங்கநிறத் தாமரையே
வந்திடம்மா மை எழுத..
 
முத்து முத்துப் புன்னகையே
முத்தமிழின் இன்சுவையே
நெத்திச் சுட்டி சூடிடவே
வந்திடம்மா வான்மதியே...

மல்லிகையும் பூத்திருக்க
மங்கலங்கள் காத்திருக்க
மஞ்சள் முக நித்திலமே
மருதாணிச் சித்திரமே!.. 

மாமதுரை மங்கலத்தாள்
மங்கை முகம் பார்த்திருக்க
சுந்தரனும் வருவாரே
செல்லத் தமிழ் மொழிவாரே..

வில்லெடுத்த தோளினிலே
வெற்றிமலர்  தான் கொடுக்க
முல்லை மலர் தொடுத்தவளே
பாற்கடலின் ஸ்ரீதேவி..

தேனோடு தினை இருக்க
தெய்வ மலர் பூத்திருக்க
தேடி வந்த முருகனுக்கு
முத்தழகே வள்ளியம்மா..

செந்தமிழின் பூமகளாய்
சீர் கொணர்ந்த குந்தவையே
பொன்னி நதி தேசத்திலே 
 மயில் என்று வந்தவளே..

தெய்வலக்ஷ்மி கோலமெலாம்
அன்னம் உந்தன் தோற்றமம்மா..
நாள் எல்லாம் சிரித்திருக்க
தெய்வம் வந்து காக்குமம்மா!..
**

நலம் வாழ்க
***

திங்கள், மார்ச் 23, 2026

பூசணி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 திங்கட்கிழமை


பூசணிக்காய் 

தரையில்  பச்சைப் பசேல் என, படர்ந்து தழைக்கின்ற கொடி வகைத் தாவரம் இது..

மஞ்சள் மற்றும் வெள்ளை என - நாடு முழுதும் கிடைக்கின்றது..

எனினும், தமிழகத்தின் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தின் செல்வங்களுள் ஒன்று..

ஒரு பூசணிக்காய் பலரது இல்லங்களின் சமையல் பிரச்னைகளைத் தீர்க்கின்றது..

அத்துடன் நோய்க் குறைகளையும் தீர்க்கின்றது...


வெண்பூசணி சமஸ்கிருதத்தில் கூஷ்மாண்டம் எனப்படுகின்றது...

வெண்பூசணி கண் திருஷ்டியைக் கவர்ந்து தீர்க்கின்றது என்பது சமய நம்பிக்கை..

பூசணிக்காய் சத்து மிகுந்த காயாகும்.. 

பூசணிக்காய் - 
கண், தோல் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது,  


இதிலுள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துகள்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன ... 

பூசணிக்காயில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியன இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்து கின்றன..


பூசணியின் விதைகள் மெக்னீசியம், துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்புச்சத்து 
போன்ற தாதுக்களின் இருப்பிடமாகும.. 

இவற்றால் உடலின்  ஆரோக்கியமும்,  தூக்கமும் மேம்படுகின்றன.. 

ஊட்டச்சத்து விவரங்களுக்கு
 நன்றி இணையம்

நீர்ச்சத்து மிகுந்த 
பூசணிக்காய் சிலவகை பாரம்பரிய மருந்து களுக்கு ஒத்து வராது... 

முறையான சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது..

வெண்பூசணியின் சாறு உடல் வெப்பத்தைத் தணிக்கின்றது..

பூசணிக்காய் கூட்டு,
 பூசணிக்காய்சாம்பார், மோர்க்குழம்பு, அவியல், 
பூசணிக்காய் இனிப்பு என்பன தனித்துவமானவை..



பஞ்சாட்சர வடிவில் திகழ்கின்ற 
பூசணிப் பூக்கள் நமது கலாசாரத்தின் சின்னமாகும்...

இந்த வீட்டில் -  கல்யாணத்திற்குத் தயாராக பெண் ஒருத்தி இருக்கின்றாள் என்பதை குறிப்பால் உணர்த்துவது பூசணிப் பூ...

 மார்கழியின் சிறப்புகளில் பூசணிப் பூவும் ஒன்று.. 

பக்குவமான மஞ்சள் பூசணிக் காயைக் கொண்டு அதை மேலும் பக்குவப்படுத்தி அந்தக் காலத்தில் ஏக தந்தி வீணை எனும் இசைக் கருவியைச் செய்தனர்..

அதனை - துந்தனா என்றனர் பாமரர்...

பூசணிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது...

நலம் நமது கையில்

வாழ்க நலம்
***

ஞாயிறு, மார்ச் 22, 2026

வேண்டும் வேண்டும்..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 ஞாயிற்றுக்கிழமை


இன்று
முன்னோர் வகுத்து வைத்த
அனுபவ மொழிகளில் சில..

தண்ணீர்க் குடத்தை மூடி வைத்தல் வேண்டும்..

அஞ்சறைப் பெட்டியை மூடி வைத்தல் வேண்டும்..

உப்பு புளி  இவற்றில் லக்ஷ்மி குபேரன் இருப்பதால் மூடி வைத்தல் வேண்டும்..

சோறு குழம்பு பாத்திரங்களை மூடி வைத்தல் வேண்டும்..

பணம், நகை, துணிமணி இருக்கின்ற பெட்டிகளை  மூடி வைத்தல் வேண்டும்..

ஒதுங்கும் இடத்தை  மூடி வைத்தல் வேண்டும்..

பூஜை மாடம்  பூஜையறை இவற்றையும் மூடி வைத்தல் வேண்டும்..

நலம் வாழ்க
***

வெள்ளி, மார்ச் 20, 2026

சிட்டுக்குருவி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 வெள்ளிக்கிழமை




இன்று
உலக சிட்டுக்குருவி தினம்

சிட்டுக்குருவிகளை
அனைத்துக் கவிஞர்களும்  
பாடி வைத்துள்ளனர்...

விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச்
சிட்டுக் குருவியைப் போல...

- என்பது மகாகவியின் வாக்கு...

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து 
சேர்ந்திடக் கண்டேனே..
செவ்வானம் கடலினிலே 
கலந்திடக் கண்டேனே...
என்றார் கவியரசு...

சிட்டுக் குருவிகள் இன்று நம்மிடையே பரவலாக இல்லை... காரணிகள் பற்பல.. கால சூழ்நிலை இது...

சிட்டுக் குருவிகளை நினைவு  கூர்வோம்..
***
இன்று எமது திருமண நாள்...

ஆயுள் ஆரோக்கிய 
நலங்களுக்கு இறைவன் 
துணை இருப்பானாக...

நலம் வாழ்க..
***

வியாழன், மார்ச் 19, 2026

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 வியாழக்கிழமை


இன்று
சுவாமிமலை திருப்புகழ்

தான தனதன தான தனதன
     தான தனதன ... தனதான


பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய .. குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ... மருகோனே

காலன் எனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ... அருள்வாயே..

ஆதி அயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு .. சிறைமீளா

ஆடு மயிலினி லேறி அமரர்கள்
     சூழ வரவரு ... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவு
    சுவாமி மலைதனி ... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ... பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
***

செவ்வாய், மார்ச் 17, 2026

தேனுபுரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 செவ்வாய்க்கிழமை

கடந்த செவ்வாயன்று
பட்டீஸ்வரம் தரிசனம்


ஸ்ரீ ஞானாம்பிகை சமேத 
தேனுபுரீஸ்வரர்...

காமதேனுவும் 
அதன் மகள் பட்டியும் வழிபட்ட தலம்...

ஸ்ரீராமபிரானும் 
வழிபட்டிருப்பதாக ஐதீகம்..

கோயிலில் எடுக்கப்பட்ட சில படங்கள்...














வித்தியாசமான
பலிபீடம்








 நன்றி இணையம்
 பழையாறையின் சிதிலமடைந்த அரண்மனையில் இருந்து மீட்கப்பட்ட
துர்கை வயிரவர் திருமேனிகள் தான் இக்கோயிலில் விளங்குகின்றன..

 திருப்பணி செய்த கோவிந்த தீட்சிதர் 
அவரது மனைவி ஆகியோரது
திருமேனிகள் இக்கோயிலில் உள்ளன...

திருஞானசம்பந்தருக்கு முத்துப் பந்தல் அருளப்பட்ட தலம்...

அவருக்காக நந்தி விலகியுள்ளது சிறப்பு..

ஓம் நம சிவாய ஓம்
***

திங்கள், மார்ச் 16, 2026

நமது நலம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 திங்கட்கிழமை


அரிசி பருப்பு முதலான தானியங்களையும் 
தேர்ந்தெடுத்த காய்களையும் கனிகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பற்றி 
ஆதிகாலம் தொட்டு நாம் நன்றாகவே அறிந்திருக்கின்றோம்..

இருப்பினும் 
இன்றைய சிந்தனைக்கு..

1.
ரசாயன கலப்பில்லாத
தரமான தானியங்கள் காய்களையே சமைப்பதற்கு தேர்ந்து எடுக்க வேண்டும்..

2.  
தேர்ந்து எடுத்த 
பொருட்களை உலர்ந்த இடத்தில் பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்வது அவசியம்...

3.
உணவுப் பொருட்கள் சரியானபடி சமைக்கப்பட வேண்டும்..


4.  
சமைத்த உணவை குறித்த நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும்..

5.  
சிலவகை உணவுகளை மீண்டும் சூடுபடுத்துவதில் கவனம் தேவை..

6.  
சமைக்கப்படாத பொருட்கள் சமைக்கப்பட்ட உணவு இரண்டையும் ஒருசேர வைப்பதிலும் கவனம் தேவை..

7.  
சமைப்பதற்கு முன் கைகளை -   பாத்திரங்களை நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும்..

8.  
சமையலுக்கு எப்போதும்  பாதுகாப்பான நீரையே பயன்படுத்த வேண்டும்..


9.  
உணவை - சாப்பிடும் வரை  சுத்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்..

10
சமையலறையை காற்றோட்டமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்வது இன்றியமையாதது..

எல்லாவற்றுக்கும் மேலாக நலம் வேண்டும் எனில்,


தேங்காய், எள், கடலை - முதலான வித்துகளில் இருந்தே எண்ணெயைப் பெறுதல் வேண்டும்..

எண்ணெய் வித்துகளில் இருந்து நேரடியாக
பெறப்படும் எண்ணெய் தான் முதல் தரமானது...

செக்கில் ஆட்டி எண்ணெய் எடுக்கும் அனுபவத்தையும் ஆர்வத்தையும் பெரும்பாலான மக்கள் இழந்து விட்டனர்..
 
வெளிநாடுகளில் உள்ளதைப் போல 
உணவு பாதுகாப்பு விதிமுறைகள் இங்கே இருப்பினும் 
 - அவற்றைப்
பின்பற்றுவோர் மிக மிகக் குறைவு... 

சுகாதாரம் அறியாத ஆட்களால் சமைக்கப்பட்ட வெளி உணவுகளையும்

வணிக வழிக்கென 
தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் 

இரசாயனங்களுடன் தயாரிக்கப்பட்ட அவசரகதி - திட திரவ உணவுப் பொருட்களையும்

ஊட்டச்சத்து ஏதுமற்ற மைதா சார்ந்த உணவுப் பொருட்களையும் 

இன்றைய  வாழ்வியல் சூழலில் முற்றாக ஒதுக்கி விட முடியாது..

இயன்றவரை தவிர்க்க வேண்டும்..
*
 நலம் 
நமது கையில்
***

ஞாயிறு, மார்ச் 15, 2026

மகமாயி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 ஞாயிற்றுக்கிழமை



தஞ்சை மாரியம்மன்
பேரில் 
அடியேன் தொடுத்த மாலை


 வழி கேட்டு நிற்பவர்க்கு
விழி காட்டி அருள்பவளே
பழி அஞ்சி வாழ்பவர்க்கு
பால் நிலவாய் திகழ்பவளே..

நிறை கொண்ட மனம் கண்டு
வளர் நலத்தைத் தரும் தாயே
சிறை கொண்ட துயர் மாற்றி
மறு வாழ்வும் தருவாயே...

ஆனபடி அத்தனையும் 
அம்மா நீ அறிவாயே 
ஆயிரங்கண் உடையவளே
அகலத்தை  ஆள்பவளே..

நிறை எது குறை எதுவோ 
நிகழ்ந்ததுவும் விதி வழியே
போனதெலாம் போகட்டும்
நலங்காட்டு விழி வழியே..

பொன்னாட பூவாட 
அனலாடப் புனலாட
வேம்பாட கனியாட 
காற்றாடி வருபவளே..

செந்தூர நெற்றியிலே 
பூங்குழலும் சேர்ந்தாட
சிந்து மணி தானாட
சேர்ந்தாடி வருபவளே..

சிங்கம் உந்தன் வாகனமாம்
அன்னத்துடன் பூ ரதமாம்
தங்கப் பரி மேல் அமரும்
வித்தகியே வாருமம்மா..

வேம்பு எனும் விருட்சத்திலே
விருப்பமுடன் வாழ்பவளே
வழி கேட்டு வருபவர்க்கு
வசந்தம் என வாருமம்மா..

தங்கம் என்னும் குணத்தழகு
தாமரையின் நிறத்தழகு
குங்குமத்துப் பொட்டழகு
மஞ்சள் மதி முகத்தழகு..

தங்க நிறத் தாமரையே
தாள்மலர்கள் சரணமம்மா
தான் உதித்த வடிவழகே
சரணம் சரணம் சரணமம்மா..
*

ஓம் சக்தி ஓம்
***