நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 25, 2022

வாழ்க நலம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில் நலந்தரும் நவக்ரஹ காயத்ரி மந்திரங்கள்.
இவை அனைவருக்கும்
தெரிந்தவை தான் எனினும் மீண்டும் ஒருமுறை நினைவில் கொண்டு பிரார்த்தித்துக் கொள்வோம்..
*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்:

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்:

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்:

ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்:

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்:

ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ  மந்தப் ப்ரசோதயாத்:

ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹூ ப்ரசோதயாத்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்:
*

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய  அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலிஎம் பெருமானே.. 1/62
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. சிறப்பு.  என் அப்பா தனது பூஜையில் முன்பெல்லாம் தினமும் சொல்வார்.   அதே போல ஸ்ரீராமஜெயம் எழுதி அனுப்பி காஞ்சி மடத்திலிருந்து வந்திருந்த ராமாயணம் ஒரு வரி ஸ்லோகமாக நூறு சுலோகம் இருக்கும் அதையும் சொல்வார். எங்களையும் சொல்லச் சொல்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      தங்கள் வருகையும் மேலதிக செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவும் படங்களும் அருமை. நவகிரஹ மந்திரங்களை சொல்லி, நவகிரஹங்களை வணங்கி கொண்டேன். நாளும், நவ கோள்களும் நம் அனைவருக்கும், நன்மைகள் தர விடையுடை வீற்றிருக்கும் எம்பெருமான் ஈஸ்வரனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்ம் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க...

      நீக்கு
  3. நவக்ரஹ காய்த்ரிகளை சொல்லி நவகோள்களை வணங்கி கொண்டேன்.

    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலமே வாழ்க...

      நீக்கு
  4. நவகிரஹ மந்திரங்கள் அறிந்தேன்
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. நவகிரஹங்களையும் வணங்குவது நல்லது தானே. அனைவரும் வணங்கித் துதிப்போம். கிரஹங்களினால் ஏற்படும் சிரமங்கள் குறைந்து அனைவரும் மகிழ்ச்சியாக வாழப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலமே வாழ்க...

      நீக்கு
  6. நவகிரஹங்கள் துதி தமிழில் உள்ளது மனப்பாடம் என்பதால் தினமும் அதைச்சொல்வதுண்டு. மிக்க நன்றி சார்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரிய பகவான்

      சீலமாய் வாழச் சீரருள் புரியும்
      ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
      சூரியா போற்றி சுதந்திரா போற்றி
      வீரியா போற்றி வினைகள் களைவாய்

      இப்படியானது எல்லா கிரகங்களுக்கும் உள்ள துதி

      துளசிதரன்

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகையும்மேலதிகக் கருத்தும் மகிழ்ச்சி..

      தாங்கள் சொல்லியிருக்கும் தமிழ் வடிவங்கள் 75 ல் இருந்தே இருப்பதாக நினைக்கின்றேன்..

      இவற்றைப் பற்றி விரிவாகப் பேச வேண்டும்.. பார்க்கலாம்..

      நன்றி.. நலமே வாழ்க...

      நீக்கு
  7. மிக்க நன்றி துரை அண்ணா இங்கு வாசித்துத் தெரிந்து கொண்டேன். இப்ப வருதுன்னு பயமுறுத்தும் கொரோனா வைரலின் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நவக்ரஹ காயத்ரி மந்திரங்கள் பதிவிட்டது நல்லது. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாமே! துளசிதரன் ஜி சொல்லி இருப்பது போல தமிழிலும் இப்படியான மந்திரங்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக செய்தியும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..