நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 01, 2019

கீழ்வேளூர் 4

கீவளூர் என்று தற்காலத்தில் வழங்கப்படும்
கீழ்வேளூர் ஸ்ரீ வாருலாவிய வனமுலை நாயகி உடனாகிய
ஸ்ரீ அட்சய லிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருக்கின்றோம்....

திருஆரூரில் இருந்து நாகை செல்லும் வழித்தடத்தில் உள்ளது....

கீழ் வேளூரைக் கடந்து தான் சிக்கல் திருக்கோயில்...
விரைவுப் பேருந்துகளைத் தவிர்த்து அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்கின்றன..

தஞ்சை - நாகை இருப்புப்பாதைத் தடம் இவ்வூர் வழியே செல்கிறது...

விரைவு ரயில்களைத் தவிர்த்து
ஏனைய பயணியர் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன...


விமானத்தில் ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி 
சிவபூஜை செய்கின்ற ஆஞ்சநேயர்  
ஸ்ரீ யக்ஞ புருஷன்  
இலந்தையின் கீழ் சந்நிதி
வடக்கு பிரகாரத்திலிருந்து ராஜகோபுரங்கள்

மேலே காணும் கோபுரத்தின் இரண்டாம் நிலையில்
பிள்ளைத்தாய்ச்சி அம்மன் வடிவமைக்கப் பெற்றிருக்கின்றாள்..

மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கோயிலில்
ஸ்வாமி சந்நிதிக்குச் செல்லும் வழியில் தூண் ஒன்றில்
பிள்ளைத் தாய்ச்சிக்கு சிற்பம் உள்ளது...

அந்த சிற்பத்திற்கு நாமே நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யலாம்..

அந்த அபிஷேக எண்ணெய்யை கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் தடவினால் - சுகப்பிரசவம் என்பது நம்பிக்கை...

ஆனால் இங்கு அவ்வாறு முடியாது...

கீழிருந்தபடியே கோபுரத்தை அண்ணாந்து நோக்கி
வணங்கிக் கொள்ள வேண்டியது தான்!...


ஸ்ரீ குபேரன் .. (நன்றி - FB)
மஹாலக்ஷ்மி  - இங்கு இலந்தை மரமாக விளங்குவதனால் -
வடதிசை அதிபதியான குபேரன் இத்தலத்தில் நித்ய வாசம் செய்கின்றான்!.. (இது போதாதா... நமக்கு!..)

ஸ்ரீ வீதி விடங்கர்.. ( நன்றி - FB) 
சப்த விடங்கத் தலங்களுள் கீழ்வேளூர் இல்லை... எனினும்
கீழ்வேளூர் திருக்கோயிலில் ஸ்ரீ விடங்கர் சந்நிதி அமைந்துள்ளது...

ஸ்ரீ பத்ரி விநாயகர் ( நன்றி - FB) 
திருக்கோயிலில் - ஸ்ரீ விநாயகப் பெருமான்
பத்ரி விநாயகர் என்று விளங்குகின்றார்...

மேற்கிலிருந்து ராஜகோபுரத்தின் தோற்றம்  
வண்ணமயமான சுதை சிற்பங்கள்  
ஸ்ரீ கேடிலியப்பர் (நன்றி - FB ) 
தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கு அன்றருள் செய்தானை
உடுத்தானைப் புலியதளோடு அக்கும் பாம்பும்
உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடிய அத்தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூர் ஆளுங்கோவைக்
கேடிலியை நாடும் அவர் கேடிலாரே..(6/67)
-: அப்பர் பெருமான் :-

முற்பிறப்பினை உணர்த்தும் திருக்கோயிலை வலம் வந்து
கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்கி நிற்கின்றோம்...

அளவிடற்கரிய கருணையுடன் அஞ்சு வட்டத்து அம்மை
காத்தருள்கின்றாள்!..

வாருலாவிய வனமுலையாளும் அட்சயலிங்கேஸ்வரரும்
நாளும் நாளும் நல்லருள் பொழிகின்றார்கள்!...

தலைக்கு மேல் கைகள் குவிகின்றன..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

17 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  அழகிய படங்கள். அந்த கோபுரம் மிக அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 2. ஸ்ரீ யக்ஞ புருஷன்?

  கொஞ்சம் விவரம் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   யாக வேள்விகளுக்கு அதிபதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

   அக்னி தேவனுக்கு இரண்டு தலைகள்..

   இந்த மூர்த்தி சிரசில் அக்னி ஜுவாலைகளுடன்
   யாகத்தில் ஆகுதி சமர்ப்பிக்கும் சட்டுவத்துடன் காணப்படுவதால் யாகதேவன் - யக்ஞ மூர்த்தி என்று அனுமானித்தேன்...

   அங்கே கோயிலில் படம் எடுக்கும் போது ஏதும் தோன்றவில்லை...

   நேற்று பதிவைத் தயார் செய்தபோது தான் இந்தப் படத்தைக் கண்டு ஆச்சர்யம்.. அப்போது மனதில் எழுந்தவைதான் இந்தக் கருத்து..

   தஞ்சை பெரியகோயிலின் மடப்பள்ளிக்குள் (அக்னி மூலையில்)
   இரு தலைகளுடன் அக்னி தேவன் பிரதிஷ்டை உள்ளதாகக் கூறுவர்..

   எனது கருத்து சரியா தவறா என்பதையும்
   மேலும் விவரங்களையும் கீதா அக்கா அவர்கள் தான் கூற வேண்டும்...

   (கடவுளே காப்பாத்துங்க!..)

   நீக்கு
  2. யாக பலனை ஏற்கத் தகுந்தவரை யக்ஞ புருஷன் என்பார்கள். இது ஒவ்வொரு யாகம்/யக்ஞத்திலும் மாறுபடும். இது பற்றி மஹாபாரதத்தில் கூட வரும். ஒரு சிலர் யாகத்துக்குத் தலைமை தாங்குபவர்களை யக்ஞ புருஷன் என்கின்றனர். இது குறித்து மேல் அதிக விபரம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.

   நீக்கு
  3. அக்னி தேவன் எல்லா ஆஹுதிகளையும் நேரடியாகப் பெறுவதால் அவன் யக்ஞ புருஷன் இல்லை என்றே நினைக்கிறேன். ஆஹுதி சமர்ப்பிப்பவர் யக்ஞ புருஷனாக இருப்பது சாத்தியமே!

   நீக்கு
  4. //பகவானுக்குத்தான் யக்ஞ புருஷன்னு பேர். யாகம், யக்ஞங்களுக்கு யார் சங்கல்பம் செய்யறாளோ அவர் யஜமானன். ய்க்ஞ பத்னீ.
   செஞ்சு வெக்கறவர் அத்வர்யு.
   யக்ஞம் பொதுவான பெயர்.
   எங்கே நாலு பேர் ரித்விக்குகள் வரிசையா ஓ ஸ்ராவயா, அஸ்து ச்ரௌஷட், யஜ, வௌஷட்ன்னு சொல்லி ஹோமம் செய்யறாளோ அது யாகம்.
   ஸ்வாஹா சொல்லி செய்யறது எல்லாம் ஹோமம்.

   க்ருஷ்ணன் சிசுபாலன் சமாசாரம் வேற. ராஜசூய யாகம் முடிஞ்சு ஒரு பெரியவருக்கு முதல் பூஜை செய்யணும்ன்னு ஒரு விதி. அதுக்கு க்ருஷ்ணனை வரித்தார்கள். சிசு அப்ஜக்ட் பண்ணினான். பீஷ்மர் எல்லாரும் ஒத்துக்கறா; நீ யார்டா ன்னு சொல்லப்போக சிசு அவர திட்ட ஆரம்பிச்சுட்டான். க்ருஷ்ணன் அவனை கொன்னுட்டார்.//

   மேற்கண்ட விளக்கம் நம்ம தி.வா. தம்பி அனுப்பி வைச்சார். அதை இங்கே பகிர்ந்துக்கறேன்.

   நீக்கு
 3. படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
  ஸ்ரீ கேடிலியப்பரை தரிசனம் செய்து கொண்டேன்.
  பத்ரி விநாயகர் மிக அழகாய் இருக்கிறார்.
  பகிர்வுக்கு நன்றி.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 4. சிவபூஜை செய்யும் ஆஞ்சநேயர், யக்ஞபுருஷன் படங்கள் மிக அருமை.

  ஸ்ரீ வாருலாவிய வனமுலை நாயகி - நல்ல தமிழ்ப்பெயர்.

  பதிலளிநீக்கு
 5. இன்றைய தரிசனமும் நலம்.

  பதிலளிநீக்கு
 6. யாக புருஷன், பிள்ளைத்தாச்சிக்கு சிலை போன்ற புது விஷயங்களோடும், அழகான படங்களோடும் அருமையான பதிவு. மாத சிவராத்திரியும், சோம வாரமுமான இன்று உங்கள் தயவால் சிவ தரிசனம், நன்றி.

  பதிலளிநீக்கு
 7. துரை அண்ணா அந்த கோபுரம் வண்ண மயமாக மனதைக் கவர்கிறது.

  எல்லாப்படங்களுமே அழகு.மேலிருந்து இரண்டாவது படமும் என்னவோ கார்மேகம் நடுவில் சன்னதி விமானம் இருப்பது போல் தோன்றுகிறது.

  விவரங்களும் அறிய முடிகிறது

  கீதா

  பதிலளிநீக்கு
 8. அழகான பெயர்களுடன் கூடிய ஈசன், அம்பிகை! கோபுரத்தில் நரசிம்ம தரிசனம் அருமை. அதே போல் பிள்ளைத் தாய்ச்சி அம்மனும். மதுரையில் ஸ்வாமி சந்நிதியில் பிரகாரத்தில் உள்ள பிள்ளைத்தாய்ச்சி அம்மனுக்கு எங்களுக்காகச் சென்று எண்ணெய் தேய்த்துப் பிரார்த்தித்துக் கொண்டு வந்தார் கோமதி அரசு அவர்கள் 2016 ஆம் ஆண்டில்! அப்போது ரொம்பவே கலக்கமான மனோநிலையுடன் இருந்தோம். அனைவரின் பிரார்த்தனைகளுமே காப்பாற்றின.

  பதிலளிநீக்கு
 9. படங்களும் விவரணங்களும் அருமை. தரிசனமும் கிடைத்தது. கோபுரம் படம் அம்சமாக இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு