நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 09, 2022

நந்தி கல்யாணம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருமழபாடி திருக்கோயில்

இன்று
பங்குனி 26 (9/4)
சனிக்கிழமை
புனர்பூச நட்சத்திரம்..


திருக்கயிலாய மாமலையின் அதிகார மூர்த்தியாகிய நந்தியம் பெருமானுக்கும் 
சுயம்பிரகாஷினி தேவிக்கும் இன்று
திருக்கல்யாணம்..

மணமகனாக ஸ்ரீ நந்தியம் பெருமான் திகழ வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகை எனும் சுயம்பிரகாஷினி தேவி  மணமகளாக இலங்க
கொள்ளிடக் கரையில் விளங்கும் திருமழபாடி ஸ்ரீ சுந்தராம்பிகை சமேத ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி திருக்கோயிலில் இந்த தெய்வீகத் திருமணம் இன்று மாலை நடைபெறுகின்றது..

திருமணத்திற்கு முதல் நாளாகிய நேற்று சிலாதன முனிவருக்கு திருமகனாக நந்தியம்பெருமானின் திரு அவதார விழா  திரு ஐயாறை அடுத்துள்ள அந்தணக் குறிச்சியில் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது.. அப்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு
செய்விக்கப்பட்டன..
மாலைப் பொழுதில் திருவையாறு கோயிலில் அவருக்கு பட்டாபிஷேகமும் நடைபெற்றது.. 
( நிகழ்வின் படங்கள் - தருமபுரம் ஆதீனத்தார்.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..)
 




இறைவனே முன்நின்று  நடத்தி வைக்கின்ற திருமணம் நந்தியம் பெருமானுடையது..
**

அனைவரும் வருக..
ஐயன் அருள் பெறுக..

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபுக் கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி..
-: காஞ்சிப் புராணம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. நந்தி கல்யாணம் பற்றிய திரைப்படங்களோ, கொண்டாட்டங்களோ பெரிய அளவில் இல்லாதது குறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      நீங்கள் வேறு சொல்லி விட்டீர்கள்.. யாரும் கிளம்பி விடப் போகின்றார்கள்!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கல்யாண தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  3. அருமையான படங்கள்...
    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சிவாய நம..

      நீக்கு
  4. ஜோதி தொலைக்காட்சியில் நேற்று பட்டாபிஷேக விழா பார்த்தேன்.
    போன வருடம் நீங்கள் பதிவு போட்டதை நினைத்து கொண்டேன்.
    படங்கள் எல்லாம் அருமை.
    இன்று திருக்கலயாண விழா காட்டுவார்கள் என்று நினைக்கிறேன். ஜோதி டி.வீயில்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நந்தியம்பதியின் கல்யாண திருக்கோல படங்கள் அனைத்தும் அருமை. அவரின் திருமண விபரங்கள் அனைத்தையும் பக்தியுடன் படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. திருமழபாடி பல முறை சென்றுள்ளேன். ஒரு முறை நந்தியம்பெருமான் திருமணம் கண்டுள்ளேன். வாழ்வில் காண வேண்டிய ஒன்று. உங்கள் பதிவு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான தகவல்கள். நிகழ்வுகள் குறித்த தங்களது தகவல்கள் சிறப்பு. நேரில் சென்று பார்க்க எப்போது வாய்க்குமோ? அவனே அறிவான்.....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..