நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 07, 2022

ஸ்ரீ குந்தாளம்மன்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தஞ்சை மாநகரின் வடக்கு எல்லையில் காவல் நாயகியாக வீற்றிருப்பவள் கோடியம்மன்..

அவளோடு இணைந்தவளாக இன்னுமொரு சக்தி  குந்தாளம்மன்..

கோடியம்மனின் கோயிலுக்கு நேர் மேற்கே வடக்கு முகமாகத் திகழ்கின்றாள்.. வயல் வெளிக்குள் இருக்கின்றது இவளது சந்நிதி ..

பல காலம் கோயில் பழுதுற்றிருந்த நிலையில் மூல சக்தியை வேறொரு சிலா ரூபத்தில் ஆகர்ஷணம் செய்து ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர், ஸ்ரீ வீர நரசிம்ம ஸ்வாமி கோயில்களுக்கு அருகில் பழைமையான மண்டபம் ஒன்றில் நிலை நிறுத்தப்பட்ட பின்னும் பின்னமடைந்திருந்த மூலத் திருமேனிக்கு அவ்வப்போது விளக்கேற்றப்பட்டு வழிபடப் பெற்றது..  

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருவுளம் கிடைத்தது - ஆலயத்தைத் திருப்பணி செய்யும்படிக்கு!.. 
அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப் பெற்று பங்குனி 23 (6/4) புதன் கிழமையாகிய நேற்று திருக்குட முழுக்கு சிறப்புடன் நடைபெற்றது...

மூன்று நாட்களாக யாக பூஜைகள் நடந்தாலும் செவ்வாய்க் கிழமை அஷ்ட பந்தனம் சாத்தும் நாளன்று தான் நாங்கள் சென்றோம்.. அஷ்ட பந்தன மருந்து இடித்தலிலும் மூலஸ்தானத்திற்குள் அம்பிகையை தொட்டு வணங்குதலிலும் பெரும் பேறு கிட்டியது.. 

புனருத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக நிகழ்வுகளை இயன்றவரை காட்சிப்படுத்தி பதிவில் தந்திருக்கின்றேன்..




























நல்லவருக்கு என்றும் என்றென்றும் துணை இருக்கும்படிக்கு
ஸ்ரீ குந்தாளம்மனை வேண்டிக் கொள்வோம்!..


கொஞ்சும் முகம் காட்டி வரும்
குந்தாளம்மா தாயே..
நெஞ்சகத்தில் இருந்திடவே
வந்திடம்மா நீயே..
அஞ்சும் மனம் ஆதரித்து
அருகிருக்கும் தாயே..
பஞ்சம் பிணி தீர்த்தருளும்
பைரவியும் நீயே!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

7 கருத்துகள்:

  1. குந்தாளம்ம்மா அனைவருக்கும் நல்லது செய்யட்டும்.
    மருந்து இடித்தல், அம்பிகையை தொட்டு வணங்குதல் பாக்கியம் கிடைத்தது மகிழ்ச்சி.

    படங்கள் எல்லாம் நேரில் கலந்து கொண்டது போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. திருவிழா படங்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன்!..

      நீக்கு
  3. கும்பாபிஷேஹத்தின் யாகசாலைப்படங்கள் அருமை. இந்தக் கோயில்கள் எல்லாம் தெரியாதவை. எப்படியோ அம்பிகை தன் இருப்பிடத்துக்கே மீண்டும் வந்துவிட்டாள். அம்பிகையின் அருள் அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அம்பாள் புதிய சிலாரூபத்தில் வெளிப்பட்டிருக்கின்றாள்..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. குந்தாளம்மன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.... படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..