நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 01, 2021

மார்கழி முத்துக்கள் 17

 தமிழமுதம்


பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற..(095) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 17


அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் 
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே 
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த 
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா 
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்...
  *
தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ கலியுக வரதராஜப் பெருமாள்
அரியலூர்
மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை - மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்..(2232)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருமறைக்காடு


இறைவன் - ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்  
அம்பிகை - ஸ்ரீ யாழைப் பழித்த மொழியாள்

தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - மணிகர்ணிகை

அகத்திய மாமுனிவருக்கு
அம்மையப்பன் - தமது
திருமணக் கோலம்
காட்டியருளிய தலம் ..

மணி கர்ணிகை தீர்த்தம்
ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும்
ஒன்றாகத் தங்கியிருந்த திருத்தலம்..

ஸ்ரீ துர்கா - திருமறைக்காடு

இங்குதான் பன்னெடுங்கலமாக 
பூட்டிக் கிடந்த கோயில் கதவுகளை
திருப்பதிகம் கொண்டு அப்பர் பெருமான் திறக்கவும்
ஞானசம்பந்த மூர்த்தி அக்கதவுகளை
அடைக்கவும் ஆயிற்று..

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே..(6/23)
*

தஞ்சை
ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில்
திரு ஆதிரை நாளன்று
அருள்மிகு ஆடல்வல்லான்
அம்பிகையுடன் எழுந்தருளிய
திருக்காட்சி..






நம சிவாயவே ஞானமும் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நாநவின்றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே..
-: திருநாவுக்கரசர் :-
***
அன்பின் இனிய 
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் துரை அண்ணன்.

    சுவாமி வெளியே வரும்போது, கோபுரத்துடன் சேர்த்து முழுமையாக எடுத்த படம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா..
      தங்களுக்கு நல்வரவு..

      தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    படங்கள் அருமை. அண்ணனும், தம்பியும் தம் சுற்றம் சூழ நம்மை காத்தருளட்டும். நடராஜ தரிசனங்கள் சிறப்பாக இருந்தது. பாடல்கள், பதிகங்கள் என வளமையுடன் நல்லதொரு தரிசனம் செய்ய வைத்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. அன்பின் இனிய நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  3. பதில்கள்
    1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  5. இன்றைய படங்கள் மிக அழகு - குறிப்பாக தஞ்சை படங்கள்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா ...

    இனிய தரிசனம் ...ஸ்ரீ யாழைப் பழித்த மொழியாள் அழகிய திருநாமம் அறிந்துக் கொண்டேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.. அன்பின் இனிய நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  7. நேற்றே வர நினைச்சு முடியலை. திருமறைக்காடு போனதே இல்லை. இன்றைய தரிசனத்திற்கு நன்றி. தஞ்சை ராஜராஜேஸ்வரத்தின் ஆடல்வல்லானின் அழகும் சொல்ல முடியாதவை. அற்புதமான படப் பகிர்வுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..