நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 02, 2021

மார்கழி முத்துக்கள் 18

 தமிழமுதம்

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று..(100) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 18


உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் 
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் 
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
*

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீ கூடல் அழகர்
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பொழியா நீர்மையால் வென்றி
அடலாழி கொண்ட அறிவனே இன்பக்
கடலாழி நீயருளிக் காண்..(2236)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம் 

திருத்தலம்
திருஆலவாய் 


இறைவன்
ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர்
அருள்திரு சொக்கநாதப்பெருமான் 


அம்பிகை
ஸ்ரீ மீனாக்ஷி
அருள்தரு அங்கயற்கண்ணி 

தல விருட்சம் - கடம்பு
தீர்த்தம் - பொற்றாமரை, வைகை


அம்மையப்பனின்
திருமணத் தலங்களுள்
முதலாவதான திருத்தலம்..

ஈசன் எம்பெருமான்
கால் மாறி ஆடியருளிய 
புத்தர்லம்..


பஞ்ச சபைகளுள்
வெள்ளியம்பலம்..

அறுபத்து நான்கு திருவிளையாடல்கள்
நிகழ்த்தப் பெற்ற திருத்தலம்..
*

ஸ்ரீ ஞானசம்பந்தப்பெருமான் அருளிய
திருக்கடைக்காப்பு


மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே..(3/120)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோடு ஆடித்
திளைத்தானைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே..(6/19)
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

 1. ஆகா, இன்னிக்கு அம்மூரு உம்மாச்சிங்க. எத்தனை முறை போயிருப்போம். நினைச்சப்போப் போயிட்டு வந்திருக்கோம். இப்போ நினைப்பு மட்டுமே. அழகான தரிசனத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நல்வரவு..
   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 2. அப்பாடி..  நானும் கூட தரிசித்திருக்கும் தலபதிகள்!  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  இன்றைய இறை தரிசனங்களை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். ஆலவாய் அழகர் சொக்கநாதர், மீனாட்சி தரிசனம் சிறப்பாக இருந்தது. கூடவே கூடல் அழகரின் தரிசனமும் கண்களுக்கும்,மனதுக்கும் வி(ம)ருந்து. திருப்பாவை பாடல்களும், தேவாரமும் அருமை. இன்றைய பக்திப் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருப்பாவையும் தேவாரமும்
   தெய்வத்தமிழ் .. நன்றி எல்லாம் நவிலவும் ஆகுமோ நம்மால்!..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. இனிய தரிசனம் இங்கு கண்ட போது நேரில் சென்று தரிசித்த நினைவுகள் வருகின்றன ..


  அற்புத காட்சிகள் ..

  பதிலளிநீக்கு