நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 10, 2021

மார்கழி முத்துக்கள் 26

 தமிழமுதம்

எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..(392) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 26


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே 
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே 
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்...
*

தித்திக்கும் திருப்பாசுரம்


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கண்டேன்
என்னாழி வண்ணன் பாலின்று..(2282)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருவலிதாயம் 
(தற்காலத்தில் பாடி எனும் பெயர்)


இறைவன் - ஸ்ரீ வலிதாய நாயகன்
அம்பிகை - ஸ்ரீ ஜகதாம்பிகை


தலவிருட்சம் - பாதிரி
தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்

தேவகுருவாகிய பிரகஸ்பதியின்
மகனாகிய பரத்வாஜர் வழிபட்ட திருத்தலம்

அவருக்கு ஏற்பட்ட சாபம் நீங்குதற்காக
வலியன் எனப்படும்
கரிக்குருவியாக வடிவம் கொண்டு
சிவபூஜை செய்தார் என்பது தலபுராணம்..

வள்ளி தேவயானையுடன் திருமுருகன்
ஸ்ரீ தேவகுரு பிரகஸ்பதி - வியாழன்

பரத்வாஜரைத் தொடர்ந்து
அவரது தந்தையாகிய பிரகஸ்பதியும்
இங்கே சிவ வழிபாடு செய்தமையால்
குரு ஸ்தலம் என விளங்குகின்றது.. 

ஸ்ரீ ராமபிரான், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்
வணங்கிய திருத்தலம்..

ஸ்ரீ காலபைரவர்

இதய நோய் உடையவர்கள் வழிபாடு செய்ய
நலம் விளைகின்றது என்பது
பக்தர்களின் நம்பிக்கை...

சென்னையில் அம்பத்தூருக்கு அருகில்
அமைந்துள்ளது பாடி..
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

ஒற்றை யேறதுடை யான் நடமாடியோர் பூதப் படைசூழப்
புற்றில்நாகம்அரை யார்த்துழல்கின்ற எம்பெம்மான் மடவாளோடு
உற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும் வலிதாயம்
பற்றிவாழும்அது வேசரணாவது பாடும் அடியார்க்கே..(1/3) 
***


ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து
தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழியெமக்குந் தந்தருளும்
தேனார் மலர்க் கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

  1. நலமே விளையட்டும்.  நானிலம் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. திருப்பாவை பாடலும், பாசுரங்களும் அருமை. அழகான ஸ்ரீமன் நாராயணன் தரிசனம் கண்டு கொண்டேன். இரு படங்களும் மிக அழகாக இருக்கின்றன.

    பாடியில் கோவில் கொண்டுள்ள சிவனாரின் புராணங்களையும் பற்றி அறிந்து கொண்டேன். சென்னையிருக்கும் போது அம்பத்தூர் செல்லும் வழியில் இந்த ஊரின் பெயர் கேள்விபட்டிருக்கிறேன். இங்குள்ள சிறப்பான சிவஸ்தலத்தை இன்று அறிய செய்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. அழகான அருமையான தரிசனம். அம்பத்தூரிலேயே பல வருஷங்கள் இருந்தும் இந்தக் கோயிலுக்குப் போகும்போது பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பரிகாரத்தலம்னு சொல்லி அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகுப் பல முறை போய் வந்தாச்சு. இங்கிருக்கும் கல்யாணப் பிள்ளையாருக்கு மாலை மாற்றி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பார்கள். நான்கு வாரங்கள் முடிப்பதற்குள் எங்க பையருக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. அங்கே உள்ள கால பைரவருக்கும் தேய்பிறை அஷ்டமியில் பிரார்த்தனைகள் நிறைவேற்றி இருக்கோம். வீட்டில் இருந்து வண்டியிலேயே போயிடுவோம். இங்கேயும் முகப்பேர் சந்தான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கும் பல முறை போயிருக்கோம். பெருமாளை வைகுண்ட ஏகாதசி அன்று வெகு எளிதாகப் பார்க்கலாம். ஒரு முறை பெருமாளுக்கு முழுத் தளிகை ஏற்பாடு செய்து நிறைவேற்றினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      விரிவான செய்திகளுடன் கருத்துரை..

      இத்திருக்கோயிலைத் தரிசனம் செய்வதற்கு எப்போது கூடி வருமோ தெரியிவில்லை..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  4. சிறப்பான பதிவு. எங்கும் நலமே நிறைந்திருக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..