நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 28, 2021

தைப் பூசத் திருநாள்

  

இன்று 
தைப் பூசத்திருநாள்..


தமிழ் கூறும் நல்லோர்தம்
வழிபாட்டுக்குரிய
நன்னாட்களில்
தைப்பூசமும் ஒன்று..

தொன்மை வாய்ந்த
தைப்பூச வைபவத்தினை
ஞானசம்பந்தப்பெருமான்
தமது திருவாக்கினால்
திருமயிலைத் திருப்பதிகத்தில்
குறித்தருளியுள்ளார்..

திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
தைப் பூச நன்னாளின்
மங்கல நீராடலைப் பற்றிப்
பாடியருள்கின்றார்..

ஸ்ரீ பெருவுடையார்
தஞ்சை

ஸ்ரீ சந்திரசேகரர் மனோன்மணி
உவரி

சிவாலயங்களிலும்
குமர கோட்டங்களிலும்
சிறப்பான வழிபாடுகள்..

திரு அரங்கத்திலும்
தைத்தேரோட்டம் சிறப்பு..இந்நாளில்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
என வேண்டிக் கொள்வோம்..
***

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார்வயற் பொழில் செங்
கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே!..
-: அருணகிரிநாதர் :-


கீழுள்ள
காணொளியில்
மலேஷிய நாட்டின்
பத்துமலை
ஸ்ரீ முத்துக்குமரனின்
தீப ஆராதனையைத்
தரிசிக்கலாம்..


அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி!..
***

இந்நன்னாளைப்
பொது விடுமுறை என
அறிவித்த
தமிழக அரசிற்கு
நன்றி..

வெற்றிவேல் முருகனுக்கு
அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு
அரோஹரா..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

 1. தீப ஒளியில் ஜொலிக்கும் திருமுருகன்...  தரிசனம் கண்டேன்.  நன்றி. 

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  படங்களும், பதிவும் அருமை. காலை நேரத்தில் இன்று தங்கள் பதிவில் அருமையான இறை தரிசனங்களை கண்டு மனம் மகிழ்ந்தேன். முருகப் பெருமான் இந்த நன்னாளில் நம் அனைவரின் வாழ்விலும் நல்லொளி தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  எனக்கு சில நாட்களாக இணையம் பிரச்சனை தந்து விட்டது. அதனால்தான் தொடர்ந்து எல்லோர் பதிவுகளுக்கும் வர இயலவில்லை. காணொளி நெட் வொர்க் சரியாக வந்ததும் பிறகு கண்டு தரிசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. தீப ஆராதனையில் முருகனின் தரிசனம் கண்டேன் .படங்கள், காணொளி எல்லாம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 4. அழகிய தரிசனம் நன்று ஜி

  பதிலளிநீக்கு
 5. அழகன் முருகனின் அழகான படங்கள் ஐயா...
  சிறப்பு.

  பதிலளிநீக்கு
 6. நல்ல இறை தரிசனங்கள் கிடைத்தன. இன்றைய தினம் சிதம்பரத்திலும் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேஹம், ஆராதனைகள் நடைபெறும். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் இன்று தான் ஆடவல்லானின் ஆனந்தத் திருநடனத்தைக் கண்டு ரசித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 7. தைப்பூசம் என்றாலே பழனிக்கு காவடிகூட்டம் அதிகம் இவ்வருடம் கொர்னா தடைபோட்டுவிட்டதே!

  பதிலளிநீக்கு
 8. தைப்பூச இடுகை அருமை..... நேற்றுதான் வானவில்லைப் போன்ற நிறத்தில் படிகள் அமைத்துள்ள பத்துமலை முருகன் கோவில் பற்றி ஒரு காணொளி பார்த்தேன். நான் சிங்கப்பூருக்கு ப்ராஜக்ட் சம்பந்தமாகப் போயிருந்தபோது அங்கிருந்த சீனர்கள் 'தப்பூசம்' என்று சொல்லி பெருமைப்பட்டது நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு