நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 13, 2021

மார்கழி முத்துக்கள் 29

 தமிழமுதம்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை..(400) 
***
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 29 - 30


சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்..

பாக்களால் நேசித்தவள் - வண்ணப் 
பூக்களால் பூஜிக்கின்றாள்..
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை 
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப்பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் 
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே 
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
திருவடிகள் போற்றி!.. 
*


திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே 
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே 
உயரரங்கற்கே கண்ணியுகந் தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே 
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே..
*

தித்திக்கும் திருப்பாசுரம்


தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.. (2344)
-: பேயாழ்வார் :-  

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம் 

திருத்தலம்
தஞ்சையம்பதி 


இறைவன் - ஸ்ரீ பெருவுடையார்   
அம்பிகை - ஸ்ரீ பெரியநாயகி


தல விருட்சம் - வில்வம் 
தீர்த்தம் -  சிவகங்கை, மண்டூக தீர்த்தம்..





தஞ்சை மாநகர் என்றாலே
பெரிய கோயில் தான்..

ஆனாலும்,
தஞ்சபுரீஸ்வரர் கோயிலும்
கொங்கணேஸ்வரர் தலமும்
காலத்தால் முந்தயவை..

கீழ ராஜவீதியில்
ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர்
தெற்கு ராஜவீதியில்
கோட்டை ஸ்ரீ காசிவிஸ்வநாதர்

கோட்டை ஸ்ரீ விஸ்வநாதர்
ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி
ஸ்ரீ பாலாம்பிகை
கௌரி - ஸ்ரீ சங்கர நாராயணர் - லக்ஷ்மி
மேல ராஜவீதியில்
ஸ்ரீ சங்கர நாராயணர்,
ஸ்ரீ கொங்கணேஸ்வரர், 
ஸ்ரீ காசி விஸ்வநாதர்,
ஸ்ரீ நாகநாதர்,

ஸ்ரீ கொங்கணேஸ்வரர்
ஸ்ரீ கொங்கண சித்தர்
வடக்கு ராஜவீதியில்
ஸ்ரீ வெள்ளியங்கிரீஸ்வரர்,
ஸ்ரீ சிவேந்திரர்,
ஸ்ரீ கேசவதீஸ்வரர் 

புறம்பாடியாகிய கீழவாசல் பகுதியில்
ஸ்ரீ வைத்யநாதர், ஸ்ரீ நாகநாதர்,
மகர்நோன்புச் சாவடி
ஸ்ரீ தியாகராஜர்

கரந்தையில்
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர்,
ஸ்ரீ காசி விஸ்வநாதர்,
ஸ்ரீ நாகநாதர், 
ஸ்ரீ சிதானந்தேஸ்வரர்,

வெண்ணாற்றங்கரையில்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்,
ஸ்ரீ தளிகேஸ்வரர் என, 
பத்தொன்பது திருக்கோயில்கள்
விளங்குகின்றன..

புது ஆற்றங்கரையிலுள்ள
சிவா விஷ்ணு ஆலயம்
மங்களபுரத்தில்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் 
இவை தனி..

ஒவ்வொரு கோயிலிலும் 
ஒரு அபூர்வ செய்தி என்பது சிறப்பு..

இந்தக் கோயில்களைப் பற்றி
பல பதிவுகள் எழுதலாம்..
இருப்பினும் காலம் கனியட்டும்..
*




ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம் 


நம சிவாயவே ஞானமும் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நாநவின் றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே..(5/90) 
***


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்
சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே..

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் 
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே..
-: மாணிக்கவாசகர் :-
***
இந்த அளவில்
சிந்திக்கவும் வந்திக்கவும் செய்த
ஈசன் எம்பெருமான் திருவடிகள் போற்றி.. போற்றி!..


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.. 
***
மார்கழி முழுதும் தொடர்ந்து வந்து 
உற்சாகமும் ஊக்கமும் அளித்த
தங்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி...

சில பதிவுகளில் தங்களுடைய
கருத்துரைகளுக்கு 
என்னால் பதிலளிக்க இயலவில்லை...

இணையவேகம் ஒருபுறம் குறைவு..
இருந்தாலும்
அதிகப்படியான வேலை..
 மீதமிருக்கும் குறுகிய நேரத்துக்குள் சமைத்து
சாப்பிட்டு உறங்கி விழித்து
வேலைக்கு ஓடும்படியான சூழ்நிலை...

கணினி இணையத்துடன்
இணைந்து இயங்குவதில்
சற்று பிரச்னை..

மேலும் கணினித் திரையைத்
தொடர்ந்து பார்ப்பதிலும்
பிரச்னை..

அதையெல்லாம் கடந்து தான்
தங்கள் முன்பாக
இவ்வருடத்தின்
மார்கழி முத்துக்கள்..

இன்று போகி..

புன்மைகள் விலகி எங்கும்
நன்மைகள் பெருகட்டும்..


அனைவருக்கும் 
அன்பின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

  1. பெருவுடையாரையும் கொங்கணேஸ்வரரையும் தரிசித்ததில் மகிழ்ச்சி.  நோய்கள் மறைந்து நல்வாழ்வு பெருகி நானிலம் சிறக்க இறைவன் அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      போகியோடு தொல்லைகள் போகட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அனைவருக்கும் தொல்லைகள் விலகி மகிழ்ச்சி திரும்பி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்திடப்பிரார்த்தனைகள். நல்ல பதிவுகள். தொடர்ந்து மார்கழி முழுதுக்கும் கொடுத்தமைக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... தாங்களும் பதிவுகள் தோறும் ஆக்கமும் ஊக்கமும் அளித்திருக்கின்றீர்கள்..

      எல்லாரும் நல்வாழ்வு வாழவேண்டும் - என, இவ்வேளையில் வேண்டிக் கொள்கிறேன்..

      தங்கள் அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. மார்கழி முழுவதும் சிறப்பான பதிவுகளை பகிர்ந்து இறை தரிசனம் கிடைக்கச் செய்த உங்களுக்கு நன்றி. நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..