நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 29, 2023

பீட்ரூட்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 15
 புதன் கிழமை

இணையத்தில் இருந்து செய்தித் தொகுப்பு..
படங்கள் : விக்கி
 நன்றி


பீட்ரூட்..

இதுவும் கேரட்டைப் போல வேரடிக் கிழங்கு வகையாகும்..

இனிப்புச் சுவை உடைய இதனை அக்காரக் கிழங்கு எனவும் நிறத்தைக் கொண்டு செங்கிழங்கு எனவும் சொல்கின்றது விக்கி..

பீட்ரூட்டில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை  நிறைந்துள்ளன.

பீட்ரூட் இரத்தத்தை சுத்தம் செய்து  இரத்த சோகையைப் போக்குவதுடன் பற்பல நன்மைகளையும்  வழங்குகின்றது.

உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும்  பார்வை திறனை அதிகரிக்கிறது.


இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கின்றது..

பீட்ரூட் சாறு அருந்துவதால் சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்தமாகின்றன..

ஆகவே பலருக்கும் இது ஏற்றதாக இருக்கின்றது..

ஆயினும், 
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு பீட்ரூட்  ஏற்றதா.. இல்லையா ? என்பதில் குழப்பம். 


சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு பீட்ரூட் நல்லது என்றே பற்பல தரவுகளிலும் காணப்படுகின்றது..

இதில் இனிப்புச்சுவை இருந்தாலும், சர்க்கரை குறைபாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

பீட்ரூட் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை  சீராக்குகின்றது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், இது, ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது.  உடலுக்கு சக்தியைத் தருகின்றது. இதனால் உடலில் பலவீனம் ஏற்படாது. 

பீட்ரூட்டை கழுவி விட்டு துண்டுகளாக்கிச்  சாப்பிடுவதால், அல்லது அதன் சாற்றை குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் உணவுக்கு முன் பீட்ரூட்டைத் துருவி உண்ணலாம்.. . இதனால் இயற்கையான சர்க்கரை கிடைப்பது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும். 

மேலும்,
சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுகள் நீங்குவதற்கும்   பீட்ரூட் சாறு சிறந்தது.. 

சாப்பாட்டிற்கு முன் பீட்ரூட் சாறு அருந்துவதன் மூலம், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கின்றது, சர்க்கரையின் குறைபாடும் நீங்குகின்றது. இது உணவை ஜீரணிக்கும் ஆற்றலை தந்து, செரிமான மண்டலத்தைப் பலப்படுத்துகின்றது..

சர்க்கரை குறைபாட்டினால், பலருக்கு உயர் ரத்த அழுத்தம், உடல் சோர்வு, சிறுநீரக கோளாறு போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன..


இத்தகைய சூழ்நிலையில் பீட்ரூட் சாப்பிடுவது நன்மை பயக்கும். இதனை சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை குறைவினால் ஏற்படும் மற்ற கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

எனவே, பீட்ரூட்டை  அளவு அறிந்து பயன்படுத்துதல் நல்லது.. 

 நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

18 கருத்துகள்:

  1. பிடிக்கும் என்று சொல்ல முடியாது.  பிடிக்காது என்றும் சொல்ல முடியாது.அதன் கவற்சிகளுள் ஒன்று அதன் நிறம்.  அதுவே சமயங்களில் ஒரு மாதிரியாயும் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறத்தில் என்ன இருக்கின்றது?...

      பீட்ரூட் சாறு அடிக்கடி குடித்து வருகின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க.

      நீக்கு
  2. எனக்குப் பிடித்தமானது பீட்ரூட். இங்கு விலை மலிவு..20ரூ. இன்னும் வாங்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கிப் பயனடையுங்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      நலம் வாழ்க.

      நீக்கு
  3. பீட் ரூட் பயன்கள், படங்கள் எல்லாம் அருமை. எல்லாம் அளவாக எடுத்து கொண்டால் நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அளவு ஆலோசனை அதிமுக்கியம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க.

      நீக்கு
  4. பயனுள்ள பதிவு ஜி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நலம் வாழ்க.

      நீக்கு
  5. இனிப்பானவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனை தேவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனை தேவை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நலம் வாழ்க.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கடந்த நாட்களாக காய்கறிகளின் சிறப்பை உணர்த்திய தங்கள் பதிவனைத்தும் அருமையாக உள்ளது. பீட்ரூட். இரத்த விருத்தி உண்டாக்கும் என்று முன்பு எப்பவாவது வாங்கி பொரியல், கூட்டு என செய்திருக்கிறோம் . அந்த கலர் சிறிது அச்சமூட்டினாலும், எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. இப்போது சுகருக்கு கூடாது என்பதினால், வாங்குவதே இல்லை. எதை உண்பது, எதை தவிர்ப்பது எனத்தெரியாமலே நாட்கள் நகர்கின்றன. தாங்கள் விபரமாக தரும் பதிவுகள் நன்மை தரும்படி இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நாட்களுக்குப் பின் தங்களது வருகை..

      இரத்த விருத்தி உண்டாக்கும் என்பது உண்மை.. மருத்துவரின் ஆலோசனை தேவை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க.

      நீக்கு
  7. நல்ல பகிர்வு. பீற்றூட் எங்கள் வீட்டு சமையலில் இடையிடையே இடம் பிடிக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தில் இரண்டு நாள் சாப்பிட்டாலும் நல்லதே..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க.

      நீக்கு
  8. பீட் ரூட் ரொம்ப பிடிக்கும். வீட்டில் அடிக்கடி சமைப்பதுண்டு. நல்ல தகவல்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க.

      நீக்கு
  9. எங்கள் காடரர் வாரம் 3 நாட்கள் பீட்ரூட் தான். பீட்ரூட் கறி, கூட்டு ஒரு நாள், ரசம் ஒரு நாள் என. கறி, கூட்டு வேண்டாம்னு சொல்லிடுவோம். ரசம் கட்டாயம் தேவை. அதனால் வாங்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது பீட்ரூட் அதிகமாக சேர்த்துக் கொள்கிறேன்...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..