நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 21, 2023

கண்ணாடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 7
செவ்வாய்க்கிழமை

கல்வியின்
தரத்தைக்
கண்ணாடியாகக்
காட்டுகின்ற காணொளி..

காணொளியாளருக்கு
நன்றி..


சிந்தாது சிதறாது
சீர்கொண்ட தேசத்தில்
தீப்பட்ட வானரம்
உதறிய முட்டையாய்
சிதறியே போனது
கல்வி - கல்வி
கல்லடி பட்ட 
கண்ணாடி ஆனது..


கலையாத கல்வியும்
பிழையாகிப் போனது
விலையான கல்வியும்
விபரீதம் ஆனது..
விளையாத கதிர்போல
பதராகிப் போனது
 களையாகிக் கனவாகி
 கருகித்தான் போனது..

இளமையில் கல் என்ரான
இளமையே கல்லானது
காலையிலே படி என்றான்
இருள் ஒன்றே இருப்பானது
தாய்மொழியும் அறியாத
தற்குறிகள் தன் கையில்
தாய் நிலமும் வீழுமோ
தன்னிலையில் தாழுமோ!..

வகையறியா இருள் வந்து 
வாழ்வு தனில் சூழுமோ..
**

இறைவா கல்விதனைக்
காப்பாற்று!..
***

7 கருத்துகள்:

 1. தாய்மொழியும் அறியாத தற்குறிகள் வரியில் அரசியல் வாசனை அடிக்கிறதே....!  காணொளி பின்னர் கமெண்ட் வெளியானதும் மொபைலில் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல் எல்லாம் இல்லை..

   அன்றாட நிகழ்வே இந்தப் பதிவில்!..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   தமிழ் வாழ்க..

   நீக்கு
 2. காணொளி தமிழ் படிக்க தெரியாத மாணவர்களிடம் கடிதம் படிக்க சொன்னால் ! தமிழ் பேசுகிறார்கள் என்று மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.

  விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
  வேளைதோறும் கற்று வருவதால் படியும்!//
  பாரதிதாசன் சொன்னார்.
  ஆனால் இன்று பணம் கொடுத்தால்தான் தரமான பள்ளி என்று சிலர் நினைப்பதால் இது மாதிரி பள்ளிகள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் ஆங்கிலம் மட்டுமே பேச சொல்கிறார்கள்.


  பதிலளிநீக்கு
 3. இன்றைய அவல நிலையை கவிதை வரிகள் பிரதிபலிக்கிறது, காணொளியும் ஒத்து ஊதுகிறது அருமை ஜி

  பதிலளிநீக்கு
 4. கவிதையும் காணொளியும் கொண்டோம்.
  தாய் மொழி படிக்கத் தெரியாத நிலை. காலத்தின் கொடுமை .

  பதிலளிநீக்கு
 5. கவிதை வரிகள் அருமை. இன்றைய கல்வி நிலை காணொளியில் சொன்னது போல் உண்மைதான் என்றாலும் இக்காணொளி இதைச் சொல்வதற்காக எடுக்கப்பட்ட காணொளி என்றே தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..