நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 20, 2023

காட்டுக்குயில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 6
  திங்கட்கிழமை


அன்பும்
அர்ப்பணிப்பும்
விநாயகருக்கு
உகந்தவை..


கருங்குயில் பாட்டும் திருச்செவி  கேட்கும்
கரிமுகம் கண்மலர்ந் தருளுடன் வாழ்த்தும்
ஔவைத் தமிழை தந்தது ஐங்கரம்
அன்புடன் வாழிய நற்றமிழ் குஞ்சரம்..

வாழ்த்திட வாழ்ந்திட வரந்தரும் தமிழே..
தமிழின் மற்றைப் பெயரும் அமிழ்தே!..
காலங்கள் தோறும் வளர்ந்தது தமிழே
வாழ்வில் வாழ்வாய் மலர்ந்ததும் தமிழே.. 

அன்பும் தமிழே அழகும் தமிழே
அறிவும் தமிழே அறிவதும் தமிழே
ஐங்கரன் அடியினை தமிழுடன் போற்றி
தகவுடன் வாழ்வோம் திருவிளக் கேற்றி..

தமிழே வாழ்க தாய்மொழி வாழ்க..
தவமே வாழ்க சிவமே வாழ்க..
கரியே வாழ்க கணபதி வாழ்க..
காலடி பணிந்தோர் யாவரும் வாழ்க..
**
காணொளியாளருக்கு
நன்றி..
நல்வாழ்த்துகள்..

வாழ்க வளமுடன்
ஓம் கம் கணபதயே நம:
***

16 கருத்துகள்:

 1. நல்ல கவிதை. காணொளி என்ன சொல்கிறது என்று அப்புறம் மொபைலில் கேட்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேளுங்கள்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலும், 'அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே' பாடலும் நினைவுக்கு வருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம், துரை அண்ணா எழுதியிருக்கும் பாடல் அமுதே தமிழே அழகிய மொழியே பாடல் ராகத்தில் பொருந்துகிறது....அதே ராகத்தில் பாட முடிகிறது.

   கீதா

   நீக்கு

  2. ஸ்ரீராம்..
   அந்தப் பாடல்கள் கேட்டிருக்கின்றேன்.. ஆனாலும் எழுதும் போது இவை நினைவுக்கு வரவில்லை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
  3. @ கீதா...
   //அமுதே தமிழே அழகிய மொழியே பாடல் ராகத்தில் பொருந்துகிறது...அதே ராகத்தில் பாட முடிகிறது.//

   அப்போது அவசரத்தில் எழுதியது தான்..

   இப்போது தான் மறுபடியும் படிக்கின்றேன்..
   எனக்கே ஆச்சர்யம்!..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. காணொளி பாடல் மிக அருமை. நன்றாக பாடுகிறார். அன்பும் அர்ப்பணிப்பும் தெரிகிறது பாடலில்.

  உங்கள் கவிதை மிக அருமை. வாழ்த்திட வாழ்த்திட வரந்தரும் தமிழ் என்பது உணமை .உங்களுக்கு கவிதை மழை கொட்டுகிறது.

  வாழ்த்துக்கள். கணபதி அருள் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வாழ்த்துக்கள். கணபதி அருள் கிடைக்கட்டும்.//

   அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. பதில்கள்
  1. தமிழே போற்றி..

   மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..
   நலம் வாழ்க..

   நீக்கு
 5. கவிதையும், காணொளியும் நன்று.

  பதிலளிநீக்கு
 6. அருமையான கவிதை, துரை அண்ணா,

  காணொளியில் அந்தப் பையன் அருமையாகப் பாடுகிறார். குறிப்பாக அத்தனை பெயர்களையும் அடுக்கடுக்காகப் பிழை இல்லாமல் தடுமாறாமல் சொல்கிறார்!!!

  தமிழ் வாழ்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு மிகவும் ஆச்சரியம்...

   இப்படியெல்லாம் சொல்வதற்கு எனக்கு இயலாது..

   அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 7. 'கணபதி காலடி பணிந்தோர் அனைவரும் வாழ்க! '
  அவன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு

 8. தாங்கள் இங்கே பழைய பதிவுகளையும் படித்து கருத்து எழுதியிருக்கின்றீர்கள்..

  எல்லாவற்றுக்கும் ஒவ்வொன்றாக பதில் கூறுகின்றேன்..

  அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
  நன்றி ..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..