நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 15, 2023

பங்குனி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
புதன்கிழமை
பங்குனி மாதப்பிறப்பு

இவ்வருடத்தின் நிறைவான மாதம் பங்குனி..

சுப முகூர்த்தங்கள் கூடி வரும் பங்குனி மாதம் மிகவும் சிறப்பானது.. 


ஒரு வில், ஒரு சொல், ஒரு வில் - எனக் காட்டிய ஸ்ரீராமனின் திரு அவதாரம் பங்குனியில் தான்..


ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம் பங்குனி உத்தரத்தில் தான்..

பங்குனியில் பிறந்ததால் தான் அர்ச்சுனனுக்கு பால்குணன் என்றொரு பெயர்..


தஞ்சை மாவட்டத்தின் தொன்மையான விழாவாகிய ஸ்ரீ நந்தி திருக்கல்யாணம் இம்மாத புனர்பூச நன்னாளில் தான்..

காவடி பால்குடம் பாதயாத்திரை - என,
எண்ணற்ற பக்தர்கள் விரதம் இருந்து முருகப் பெருமானை பழனியில் தரிசிப்பதும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திரப் பெருவிழாவில் தான்.    

ஸ்ரீ ராஜமாதங்கி
பங்குனி மாத அமாவாசையை அடுத்து வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள்
ஸ்ரீராஜ மாதங்கியை
நாயகியாகக் கொண்டு
வசந்த நவராத்திரியும் காரடையான் நோன்பும் பங்குனியை மேலும் சிறப்பாக்குகிறன..


சிவபெருமான் – பார்வதி திருக்கல்யாணமும், 


முருகன் – தெய்வயானை திருக்கல்யாணமும் உத்திரத்தில் தான் நடைபெற்றன..


திருஅரங்கத்தில் சேர்த்தி வைபவம் நிகழ்வது உத்திரத்தில் தான்..


காரைக்கால் அம்மையார் குருபூஜையும் பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் தான்.. 

மாசி மகோத்ஸவங்களைத் தொடர்ந்து பற்பல கோயில்களிலும் பங்குனிப் பெருவிழாக்கள் நடப்பதும் குதிப்பிடத்தக்கது..

விருதுநகர் மாரியம்மன் பங்குனிப் பொங்கல் விழா என்பது தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற திருவிழா
விருதுநகரில் பிறந்தவர்கள் எங்கே வாழ்ந்தாலும் ஊருக்கு வந்து இத்திருவிழாவில் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது..


வசந்த ருதுவின் தொடக்கமான பங்குனி தொட்டு அனைவரது வாழ்விலும் புதியதாக வசந்தம் மலரட்டும்..

வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

 1. சிறப்பான மாதம். சிறப்பான நாட்கள். நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. வடுவூர் ராமர் அழகு. பல்குனி. பால்குனி என் வந்துள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. பங்குனி மாதம் சிறப்புகள் பகிர்வு அருமை.
  பங்குனி மாதம் கோவில்களுக்கு போய் வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.
  வசந்தகாலம் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. //வசந்தகாலம் அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்.//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. பதில்கள்
  1. ஓம் சிவாய நம..

   மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   வாழ்க நலம்..

   நீக்கு
 5. பங்குனி மாதத்தின் சிறப்பு குறித்த பதிவு நன்று. அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காத்து அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி வெங்கட்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. பங்குனியின் சிறப்புகள் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 7. பங்குனியின் சிறப்புகள் பற்றிய தொகுப்பு நன்று.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 8. பங்குனியின் சிறப்புகள்...அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 9. பங்குனியின் சிறப்புகள் பற்றி நல்ல பகிர்வு.

  இங்கு பங்குனி திங்களில் அம்மனுக்கு பொங்கலும் குளிர்த்தியும் செய்வார்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..