நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 16, 2023

குருவி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 2
வியாழக்கிழமை
 
Fb ல் வந்த 
காணொளி..
நன்றி.. நன்றி..


பறவைகளின் 
அன்புதனைச்
சொல்லுதற்கு
மொழியில்லை
வெல்லுதற்கும்
வழியில்லையே..

பண்பற்ற வாழ்வதுவும்
 பயனற்ற பதராகி
காற்றோடு கலந்தோடும்
பழியன்றி ஏதுமில்லை
இனிதாவதொன்றுமில்லையே..

பாசத்தில் நேசத்தில்
நம்மை விட மேலுண்டு
பரிவுடன் வாழ்வதில்
பண்பாடு நலமுண்டு
பாதகம் ஏதுமில்லையே..


ஓய்ந்து விட்ட பறவைக்கும்
ஊட்டுதற்கு உறவுண்டு
உணர்வற்றுப் போகவில்லை
உயர்வின்றி தாழ்வில்லை
உலகினில் குறையில்லையே..

பசுந்தழையும் பழுத்து விடும்
என்று ஒரு சொல்லுண்டு
உள்ளத்தால் உணர்ந்திங்கு
உயிராக வாழ்ந்து விடுவோம்
 நமக்கொரு பழுதில்லையே..
 **
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
***

17 கருத்துகள்:

 1. நெகிழ வைக்கும் காணொளி.  முன்னரே பார்த்திருக்கிறேன்.  பறவைகளுக்கும் பாசமுண்டு, பண்பும் உண்டு என்று சொல்கிறது.   பறவாபிமானம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நெகிழ வைக்கும் காணொளி. முன்னரே பார்த்திருக்கிறேன். //

   நான் இப்போது தான் பார்க்கின்றேன்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. காணொளி நெகிழ்வு. உங்கள் கவிதையும் அருமை.
  பறவைகளின் அன்பு கண்டு மெய் சிலிக்கிறது.
  நான் நினைத்து கொள்வேன் எவ்வளவு காலம் இந்த பறவைகள் தங்கள் உணவுக்காக பறந்து செல்லும் என்று. இறைவன் எல்லா உயிர்களுக்கும் உணவு அளிக்க அன்பு உயிர்களை படைத்து இருக்கிறான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. //பறவைகளின் அன்பு கண்டு மெய் சிலிக்கிறது.//


   உண்மை தான்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. காணொளி மனதை கலங்க வைக்கிறது. பறவைகளுக்கென்று பிரித்து வைத்த அறிவிலும், அது நல்லதையே நினைக்க வைத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அதன் செயல் மனதை நெகிழ வைத்து விட்டது.

  காணொளிக்கேற்ற தங்கள் கவிதை அற்புதமாக உள்ளது. இதுவும் இறைவன் உங்களுக்கு அளித்த மிகப் பெரிய வரம். இறைவனுக்கு நன்றி. பகிர்வுக்கு உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பறவைகளுக் கென்று பிரித்து வைத்த அறிவிலும், அது நல்லதையே நினைக்க வைத்த இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.//

   இறைவனுக்கு நன்றி..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. இனிய காலை வணக்கம். நெகிழ வைக்கும் காணொளி. இப்படியான சில காணொளிகள் முன்னரும் பார்த்து வியந்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. முதல்முதலில் இப்படிப்பட்ட நிகழ்வைக் கேள்விப்படறேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் தான்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. மிகவும் ரசித்த பதிவு. உங்கள் கவிதை அருமை, துரை அண்ணா. அதே சமயம் காணொளி மனதை நெகிழ வைத்துவிட்டது. முன்னரே பார்த்திருக்கிறேன் பல காணொளிகள் வியக்க வைத்திருக்கின்றன. உயிரினங்களில் ஒன்றுக்கொன்று உதவியுடன் இருப்பதைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இப்போது தான் பார்க்கிறேன்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 7. முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நபர்களுக்கு இதை காண்பிக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியும் திருந்த மாட்டார்கள்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி தனபாலன்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 8. இது எனக்கும் வந்ததே! பார்த்து ரசித்தேன். உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தானே. பறவைகளுக்கென முதியோர் இல்லமும் கிடையாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றியக்கா..

   நலம் வாழ்க..

   நீக்கு
 9. என்ன கரிசனம் மனம் நெகிழ்கிறது. இது அன்றோ மனித நேயம். ஆறறிவு மனிதர்கள் கற்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..