நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 14, 2023

நலம் வாழ்க

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 30
செவ்வாய்க்கிழமை


நம் நாட்டில்  முக்கிய உணவாக இருந்ததும்  இருப்பதும்  அரிசி..

உடல் உழைப்பே வாழ்க்கையாக இருந்த அந்தக் காலத்தில் உடலுக்கு மாறுபாடு இல்லாததாக இருந்தது அரிசி.. 

இன்றைக்கு அப்படியில்லை.. 

வாழ்க்கையின் தரமும் அரிசியின் தரமும் அடியோடு மாறி விட்டன..

வியர்வை வழிய வழிய உழைத்த மனிதனுக்கு அரிசிச்  சோறு அமிர்தமாக இருந்து உடலையும் உயிரையும் காத்தது..

இன்றைக்கு வெள்ளைச் சட்டை வேலையில் மனிதன் நோயாளியானது தான் மிச்சம்.. 

உயர்ந்த வகை உணவுகள் என்ற பெயரில் வருபவை எதுவும் உடல் நலனுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.. ஊறு விளைவிக்கின்றன.. 

ஒன்றிலிருந்து ஒன்று என உடல் உபாதைகள்..


உடல் நோய்க்கு மருந்து தின்பதிலேயே உருக்குலைந்து போகின்றான் மனிதன்.. 

அதிலும் நீரிழிவு எனும் சர்க்கரை குறைபாட்டை முற்றாகத் தீர்த்துக் கொள்ளும் வகையறியாது திகைத்து நிற்கின்றான்..

இரசாயன உரங்களால் விளைந்த நெல் அரிசிக்கு மாற்றாக - அன்றைக்கு மருத்துவ குணங்களுடன் மக்களுக்கு உறுதுணையாக இருந்த அரிசி வகைகள் 

இன்றைக்கு மீண்டும் சந்தைக்கு வந்தாலும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது..

தற்காலத்தில் நடை முறையில் இருக்கும் பட்டை தீட்டப்பட்ட  அரிசியில் வெறும் கார்போஹேட்ரேட் மட்டும் தான் இருக்கிறது. 

இப்படி அரிசியில்  எந்தவித புரதங்களும் நார்ச் சத்துக்களும் பிற ஊட்டச் சத்துக்களும் கிடையாது  என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் விட இந்த வெள்ளை அரிசியால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கிடுகிடுவென அதிகரிக்கின்றது என்கின்றனர்..

வெள்ளை அரிசியை முதலில் குறைத்துக் கொள்வது அல்லது நிறுத்துவது தான் நல்லது..


அதற்கு மாற்றாக கைக்குத்தல் அரிசி அல்லது சிவப்பு அரிசியை எடுத்துக் கொள்ளலாம்.. 

சிறு தானியங்களையும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்..

பருப்பு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் அரிசி மற்றும் கோதுமையை விட  அதிக புரதத்தைப் பெற முடியும். மறுபுறம் நமது உணவில் கீரை, காய்கறிகளின் அளவு அதிகமாவது அவசியம்.. 

சரி.. 
இவற்றில் மட்டும் இரசாயன உரங்களின் பாதிப்பு இல்லையா?.. - என்றால்,

காய்களைத் தவிர்த்த சில வகைக் கீரைகள்  இரசாயன உரங்களால் கருகி பயனற்றுப் போய் விடும்..

சிறு தானியங்களிலும் இப்படியானவை இருக்கின்றன..

எனவே அப்படியான கீரைகள் காய்கறிகள் சிறு தானியங்களைப் 
பயன்படுத்தலாம்..

கீரைகள் காய்கறிகள் சிறு தானியங்களில் குறைந்த கலோரியும்  நார்ச் சத்துக்களும் அதிகமாக உள்ளன..

மாவு மட்டுமே கொண்ட அரிசி, கோதுமை மற்றும் மைதா இவற்றுக்கு மாற்றாக  ஊட்டச் சத்துக்களுடன் கூடிய கீரை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது..
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மைதா மாவினை ஆதாரமாகக் கொண்ட Bread, Sandwich வகையறாக்களை உண்பதற்கு நிறைய பேர்க்கு மிகவும் பிடிக்கின்றது..  

காலை உணவாக Bread இருப்பது மிகவும் பெருமை..

Bread உடம்புக்கு நல்லது என்ற நினைவுடன் சாப்பிட்டுக் கொண்டிருப்போர்க்கு அதில் எவ்வித ஊட்டச் சத்தும் இல்லை என்பது தெரியுமோ தெரியாதோ.. 

அதுமட்டுமின்றி Bread  ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது..

உண்மையில்,
மைதாவும் செய்யப்படும்
பரோட்டாவும் பெயர் தெரியாத எண்ணெயில் செய்யப்படும் தின்பண்டங்களும் ஆபத்தானவையே!..

சர்க்கரை குறைபாட்டிற்கு
வெள்ளை இனிப்பின் பங்களிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம்..

இன்றைய நாட்களில் புலால் உணவுகளும் ஆபத்தானவையாக மாறியிருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

சென்ற ஆண்டில் - தரமற்ற -  இறைச்சி உணவுகளை உண்டவர்கள் பலரும்  
பாதிக்கப்பட்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானதை யாரும் மறந்திருக்க முடியாது..

இந்நிலையில், தரமற்ற உணவு வகை எதுவானாலும் புறந்தள்ள வேண்டும்..

யோகா தியானம், ஓரளவுக்கு உடலுழைப்பு, எளிய உடற்பயிற்சிகள் 
இவற்றை மேற்கொள்வதோடு

மாவுச்சத்து நிறைந்த அரிசி, கோதுமையை குறைத்து உருளைக் கிழங்கு எண்ணெய், ஜீனி, மைதா மாவு இவற்றையும் நீக்கி விட்டு,


பசுமையான கீரை, காய் வகைகளை ஓரளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டு 

நமக்கான நல்வாழ்வை நாமே வகுத்துக் கொள்வோம்..

வாழ்க நலம்..
***

32 கருத்துகள்:

 1. நல்ல பயனுள்ள பதிவு.
  நெல்லிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால்
  இரத்ததில் உள்ள இனிப்பை சரிசெய்யும் என்பார்கள்.
  தினம் புதிய உணவு சமைத்து சாப்பிட வேண்டும்.
  மைதாவை பயன்படுத்த கூடாது என்பார்கள்.

  நீங்கள் சொல்வது போல யோகா, தியானம், உடல் உழைப்பு, எளிய உடற்பயிற்சி ,நல்லது. படங்கள் நண்ராக இருக்கிறது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// நெல்லிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால்
   இரத்ததில் உள்ள இனிப்பை சரிசெய்யும் என்பார்கள்.///

   உண்மை தான்.. இருப்பினும் பத்திய முறையில் புளிப்பு தவிர்த்து சாப்பிடுபவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனை தேவை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு
 2. சுமையான காய்கறிகளையும் கீரைகளையும் பார்க்கும்போது ஆசையாக இருக்கிறது.  வீட்டின் பக்கத்திலேயே நல்ல கடை அமைந்தால் தினசரி புதுசாக வாங்கி சமைத்து உண்ணலாம்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ இப்படியான வாய்ப்பு இன்றைக்கும் கிராமங்களில் இருப்போர்க்கு கிடைத்திருக்கின்றது..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   வாழ்க நலம்..

   நீக்கு
 3. பசுமையான காய்கறிகளையும் கீரைகளையும் பார்க்கும்போது ஆசையாக இருக்கிறது.  வீட்டின் பக்கத்திலேயே நல்ல கடை அமைந்தால் தினசரி புதுசாக வாங்கி சமைத்து உண்ணலாம்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   வாழ்க நலம்.

   நீக்கு
 4. இந்தக் காலத்தில் வெண்டை, குடைமிளகாய் போன்ற பச்சை காய்கறிகளையே என்ணெயில் வறுத்து சாப்பிடுகிறார்கள் - எங்கள் வீட்டிலும்.  என் அம்மா அதை பாதி வெந்த நிலையில் கறி சமைப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தரமான கடலெண்ணெயில் அளவாக வதக்கிச் சாப்பிடுவதும் நல்லதே..

   அநாமதேயமாக சமையல் எண்ணெய் என்று வருபவை சந்தேகத்துக்கு உரியவை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   வாழ்க நலம்.

   நீக்கு
 5. உடம்புக்கு ஒவ்வாது என்று தெரிந்தாலும் சிலவற்றின் மீது நாக்குக்கு ஆசை வந்து விடுகிறது.  என்ன செய்ய.  எப்போதாவதுதானே என்று சமாதானப்படுத்திக் கொண்டு சாப்பிடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது சாமர்த்தியமாக அணுக வேண்டிய பிரச்னை..

   சமயங்களில் இப்படியும் ஆகி விடுகின்றது..

   அன்பின் வருகைக்கு
   மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. எப்போதுமே பச்சை அரிசியை விட புழுங்கல் அரிசி நாளளது என்பார்கள்.  இப்போது இந்த சாமை, தினை, சிவபப்ரிசி எல்லாம் சொல்கிறார்கள்.  வெள்ளை அரிசி பழகி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புழுங்கல் அரிசி நல்லது தான்.. எதற்கும் ஒரு அளவு..
   அதுதான் முக்கியம்..
   மூன்று வேளையும் அரிசிச் சோறு என்பதால் தற்போது பிரச்சினை

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   வாழ்க நலம்.

   நீக்கு
 7. அரிசி உணவை ஒருவேளை மட்டும் - அதுவும் ரொம்பக் கொஞ்சமாய் - சாப்பிடுகிறேன்.  இரண்டு வேலை டிஃபன்!  ஹோட்டல் போகும் தருணங்கள், விருந்துகள் விதிவிலக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விருந்து உபசரிப்பு என்ற விஷயங்கள் தான் சறுக்கி விடுகின்றன.. கவனமாக இருக்கவும்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   வாழ்க நலம்.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  நல்ல பதிவு.பொருத்தமான படங்களுடன் நல்ல உணவை எப்படி தேர்ந்தெடுப்பது என்று அருமையாக சொல்லி விட்டீர்கள். தங்கள் சொல்படி உணவின் மாறுதல்களால்தான் இத்தனை உபாதைகளும் மனித குலத்துக்கு வந்து விட்டன. அந்தக் காலத்தில் அது அவர்கள் அறியும் வண்ணம் மிகைப்படுத்தி சொல்ல அனேக மருத்துவர்களும் இல்லை, விதவிதமான மருந்துகளும் இல்லை. "உணவே மருந்து" என தாம் உண்ணும் முறைகளை தேர்ந்தெடுத்து உண்டு தத்தம் வாழ்க்கையை வழிப்படுத்தி, நெறியுடன் வாழ்ந்து வந்தார்கள். அந்தக்காலம் போயே போச்சு...! இப்போது எதை குறைத்தால் உடம்பில் இந்த சர்க்கரை குறையும் என சோதிப்பதிலேயே நம் வாழ்க்கை நகர்கிறது.

  பதிவு நன்றாக உள்ளது. நல்ல விரிவாக பயனுள்ள கட்டுரையாக தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. /// இப்போது எதை குறைத்தால் உடம்பில் இந்த சர்க்கரை குறையும் என சோதிப்பதிலேயே நம் வாழ்க்கை நகர்கிறது..//

   உண்மை தான்..
   ஒரு தெளிவுக்கும் வர இயலவில்லை..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   வாழ்க நலம்.

   நீக்கு
 9. அருமையான பதிவு ஜி
  இன்றைய மக்களுக்கு உணவின் முக்கியத்துவம் தெரிவதில்லை,

  நான் முரட்டு மட்டை அரிசிதான் வாங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இன்றைய மக்களுக்கு உணவின் முக்கியத்துவம் தெரிவதில்லை..//

   உண்மை தான்..
   இன்றைக்கு தினமலர் செய்தி.. பொள்ளாச்சி அருகே காகங்களை விஷம் வைத்து க் கொன்று சேகரித்த ஆளைப் பிடித்து அவனிடம் எதற்காக அவை கொல்ல ப்பட்டன.. பிரியாணிக்காகவா என்று காவல்துறை விசாரணை..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி ..

   வாழ்க நலம்.

   நீக்கு
  2. துரை அண்ணா சமீபத்தில் ஈரோட்டில் தேர்தலின் போது நிறைய தெரு நாய்களைக் காணவில்லையாம்....பார்த்தால்.....ஹையோ என்ன சொல்ல.....பாவம்...எல்லாம்..எனக்கு மனம் நொந்துவிட்டது.

   கீதா

   நீக்கு
  3. இரண்டு தினங்கள் முன்பு மதுரை அருகே மயில்களுக்கு விஷம் வைத்து கொத்து, கொத்தாக கொல்லப்பட்டுள்ளது.

   நீக்கு
  4. இந்தக் கொடுமைகளுக்கு முடிவே இல்லை..

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜி ..
   வாழ்க நலம்.

   நீக்கு
  5. @ கீதா..

   ஈரோட்டில் காணாமல் போன தெரு நாய்களின் கதை தெரியாதா?..

   என்னமோ போங்கள்.. எல்லாம் தலையெழுத்து!..

   அன்பின் வருகையும் கருத்தும் நன்றி சகோ..

   வாழ்க நலம்..

   நீக்கு
 10. தகவல்கள் ஒவ்வொன்றும் பயனுள்ளவை ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   வாழ்க நலம்..

   நீக்கு
 11. நல்ல பதிவு, துரை அண்ணா.

  நம் வீட்டில் வெள்ளை அரிசி சமைப்பது, யாரேனும் வீட்டிற்குச் சாப்பிட வந்தால் அதுவும் அவர்களின் விருப்பம் கேட்டுத்தான் செய்வது. அல்லாமல் நம் வீட்டில் சிவப்பரிசி, கவுனி அரிசி மிக நல்லது ஆனால் இங்குக் கிடைப்பதில்லை. இணையம் வழி வாங்கலாம் என்றால் விலை யம்மாடியோவ்..

  சிறுதானியங்கள் பயன்பாடும் அதிகம் நம் வீட்டில். கூடவே காய்கள்தான். கீரை எல்லாம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // சிவப்பரிசி, கவுனி அரிசி மிக நல்லது ஆனால் இங்குக் கிடைப்பதில்லை...///

   இங்கும் அப்படித் தான்..

   தேடிக் கிடைப்பதற்குள்...

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   வாழ்க நலம்..

   நீக்கு
 12. நெல்லிக்கனி அடிக்கடி, அது போல சுண்டைக்காய், மணத்தக்காளி ...வேப்பம் பூ...

  ஆமாம் உடலுழைப்பு., அளவான நல்ல சாப்பாடு ...சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம். கூடவே மனம் அமைதி...

  கீதா

  பதிலளிநீக்கு
 13. சுண்டைக்காய்
  மணத்தக்காளி
  இங்கே தாராளமாகக் கிடைக்கின்றது..

  பார்க்கலாம்...

  அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
  நன்றி சகோ..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 14. இனிய காலை வணக்கம். தகவல்கள் அனைத்தும் சிறப்பு. பாரம்பரிய அரிசி வகைகள் பலவற்றை இழந்து விட்டோம் என்பது வேதனையான உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பாரம்பரிய அரிசி வகைகள் பலவற்றை இழந்து விட்டோம் என்பது வேதனையான உண்மை.//

   ஒரு சில வகைகளே மீட்டெடுக்கப் பட்டுள்ளன..

   அன்பின் வருகையும் கருத்தும் நன்றி வெங்கட்..

   வாழ்க நலம்..

   நீக்கு
 15. நலம் தரும் பகிர்வு .. அனைவரும் அறிந்திருக்க வேண்டியது.
  இவற்றை கடைப்பிடித்து நலமுடன் வாழ்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அனைவரும் அறிந்திருக்க வேண்டியது.
   இவற்றை கடை பிடித்து நலமுடன் வாழ்வோம் //

   அன்பின் வருகையும் கருத்தும் நன்றி ..

   வாழ்க நலம்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..