நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 05, 2023

மலர் 21

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 21
  வியாழக்கிழமை.

தமிழமுதம்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.. 138
*
திவ்யதேச தரிசனம்
திரு வெள்ளியங்குடி


ஸ்ரீ கோல வல்வில் ராமன்
ஸ்ரீ மரகதவல்லி

கதலி
சுக்ல தீர்த்தம்

வாமனனிடம் இழந்த கண் பார்வையை மீண்டும் சுக்ராச்சார்யார் அடைந்த தலம்..


சங்கு சக்கரங்களுடன்
கருடாழ்வார் தரிசனம்

புஜங்கசயனம்
கிழக்கே திருமுக மண்டலம்.
புஷ்கலாவர்த்த விமானம்

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
10 பாசுரங்கள்.
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை பாசுரம் 21
 

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.. 494
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர் 
குணங்களே பிதற்றி நின்றேத்த
அடியவர்க்கருளி அரவணைத் 
துயின்ற  ஆழியான் அமர்ந்துறை கோயில்
கடியுடைக் கமலம் அடியிடை மலர  
கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய
வடிவுடை அன்னம் பெடையொடும் 
சேரும்  வயல் வெள்ளியங்குடி அதுவே.. 1346
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திரு குருகாவூர் வெள்ளடை

ஊர் - குருகாவூர்
கோயில் - வெள்ளடை.


ஸ்ரீ ஸ்வேத ரிஷபேஸ்வரர் 
ஸ்ரீ வெள்ளடை ஈஸ்வரர்
ஸ்ரீ காவியங்கண்ணி

வில்வம் 
பால் கிணறு

குருகு எனப்படும் நாரை வழிபட்ட திருத்தலம்.


திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
**

தேவாரம்
பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.. 7/29/6
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
திருவாசகம்
திருவெம்பாவை
 

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.. 17

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்..18
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. ஓம் நச்சிவாய... ஓம் நமோ நாராயணாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நம சிவாய...
      ஓம் நமோ நாராயணாய..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓம் நமசிவாய வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சிவாய நம..
      வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. இன்றைய தரிசனம் அருமை.
    படங்களும், பாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. பெயரில்லா05 ஜனவரி, 2023 17:36

    இன்றைக்கான மலரின் படங்கள் அருமை! குருகு எனப்படும் நாரை படம் ரொம்ப ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. தரிசித்தோம். படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தரிசனமும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..