நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 06, 2022

புதுசு கண்ணா!..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சோழ வம்சத்தினர்
சிவநேசச் செல்வர்களாக 
வாழ்ந்தவர்கள்..

ஆலயத் திருப்பணி அவர்களது 
உயிரினில் கலந்தது..

திரைக்கு வந்திருக்கும் நவீன திரைப்படத்தில் என்னென்ன மாற்றங்களோ..

நல்ல வேளை..
பழைய கதையில் படுத்த படுக்கையாகக் கிடந்த சுந்தர சோழர் ஈழத்துக் கடற்கரையில் குத்தாட்டம் போடவில்லை..

சரித்திர காலத்துக்குச் சற்றும் பொருந்தாத 
இசையும் பாடல்களும் என்ற கருத்துக்களும்
பரவலாக வந்திருக்கின்றன..

சரி.. எது எப்படி இருந்தால் என்ன?..

என் பிள்ளைகளுக்கா கல்கி அவர்களது பொன்னியின் செல்வன் முழுக் கதையும் என்னிடம் உள்ளது.. அது போதும்!.

இந்நிலையில்,
தஞ்சாவூரில் அப்படி..
பலயாரை(பழையாறை) யில் இப்படி என்று, 
குழாயடியில் ஏகப்பட்ட விரிவுரைகள் விளக்க உரைகள்!..

ஒரு நாள் மழையில் ஊர்க் குப்பைகள் மிதந்து வருவதைப் போலவும் ஓடுதற்கு வழியில்லாது தேங்கிக் கிடந்த கழிவு நீர் வாசலுக்கு வருவதைப் போலவும் பற்பல கருத்துகள்..
 
ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது... 
- என்று ஏதேதோ உளறுகின்றது ஒரு பிறவி.. 

அந்த கால கட்டத்தில் ஹிந்து என்ற சொல் இருந்ததில்லை.. 

சைவ வைணவ சமயங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு இந்நாட்டின் அரசியல் அமைப்பு கொடுத்திருக்கும் பெயர் தான் ஹிந்து என்பதை அறியாதிருக்கும் மூடர்கள் பலர்..

இனி, அடுத்ததாக ராஜ ராஜேஸ்வரம் என்று, ராஜராஜ சோழனால் பெயர் சூட்டப்பட்ட - பெரிய கோயிலை எழுப்பியவன் அவனே அல்ல!.. - என்று கூவிக் கொண்டு யாரும் வரக்கூடும்!..

குழாயடியின் பக்கம் சென்றால் அங்கே, 
அருல்மொளி வர்மண், நன்டினி, பலவேட்டுராயர் - என்றெல்லாம் - சகிக்க முடியவில்லை..

எல்லாம் காலத்தின் கொடுமை...

இணையத்தில் சேகரிக்கப்பட்ட
படங்கள் இன்றைய பதிவில்!..

பொன்னியின் செல்வன் 
என்றும் நம்முடன்!..








செம்பியன் மாதேவியார்


அநிருத்த பிரம்மராயர்



மணிமேகலை - வந்தியத்தேவன்

மந்தாகினி தேவி

பொன்னியின் செல்வன்










பூங்குழலியின் கனவு








சிற்றப்பனுக்கு மணிமுடி

Fb ல் இருந்து
பெறப்பட்ட
 காணொளியைக் 
காணுங்கள்..


நவீன - கேழ்வார்க்குடியான் பதற்றத்தில் எழுப்பும் கூக்குரலுக்கு ஏனைய மொழிகளில் நாராயணா என்று அர்த்தம் போலிருக்கின்றது..

ஆனாலும்,
நவீனத்தில் நாயக நன் மணிகள் நெற்றியில் வெள்ளைப் பொடியுடன் இருப்பது போல காட்டப்படுகின்றதே!..

ஓ.. அதக் கேக்றீங்களா.. அதுக்கு ஏதாவது ஏடாகூடமா பதில் வந்தாலும் வரலாம்!..
**
வாழ்க கல்கி  
வாழ்க வந்தியத்தேவன்
வாழ்க குந்தவை
வாழ்க அருள்மொழி
***

8 கருத்துகள்:

  1. சில நாட்களாக எங்கெங்கும் பொன்னியின் செல்வன் பற்றிதான் ஒரே கூச்சல்! காணொளி கேட்டேன்.  நேற்று படமே பார்த்து விட்டேன்.  

    பதிலளிநீக்கு
  2. படங்களின் தொகுப்பு அருமை ஜி. காணொளி கண்டேன்.

    தமிழில் மட்டும் ஐயய்யோ மற்ற மொழிகளில் நாராயணா சொல்ல காரணம்.

    டப்பிங் பேசும் டயலாக் பேப்பரில் பிரிண்டிங் மிஸ்டேக் நடந்து விட்டது சாரி...

    பதிலளிநீக்கு
  3. இதெல்லாம் எங்கு போய் முடியுமோ... முருகா...

    பதிலளிநீக்கு
  4. பொன்னியின் செல்வன் படங்கள் தொகுப்பு அருமை.
    பொன்னியின் செல்வன் இன்று பார்க்கிறான் பேரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை பொன்னியின் செல்வன் நாவலின் படங்கள் மிக நன்றாக உள்ளது. நானும் இன்னமும் படம் பார்க்கவில்லை. பெயர் மாற்றங்கள் சகிக்க இயலவில்லை. படம் பார்க்கலாமா வேண்டாமா என தோன்றுவது சரிதான் போலும்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. படம் பார்க்கவில்லை துரை அண்ணா ஆனால் நீங்கள் பதிந்திருக்கும் படங்கள் மனதை ஈர்க்கின்றன இதமாக இருக்கின்றன.

    பாடல்கள் கேட்டேன்...இசை வரலாற்று படத்திற்கு உள்ளது போல் இல்லை மேற்கத்திய இசையாகத்தான் இருக்கிறது. படத்தில் எப்படிப் பொருந்திப் போகிறது என்பது படம் பார்த்தால்தான் தெரியும்.

    காணொளி கண்டேன்...நல்ல பாயின்ட்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தமிழர்களுக்கு எல்லாம் "நாராயணா" "ஓம் நமசிவாயா" என்றெல்லாம் சொல்லிப் பழக்கமே கிடையாதல்லவா? அதான் யமனுடைய மனைவியை அழைக்கின்றனர் "ஐயய்யோ!" என உரத்த குரலில். :(

    பதிலளிநீக்கு
  8. பொன்னியின் செல்வன் படங்கள் கண்டேன் . அழகிய தொகுப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..