நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 02, 2022

நல்லோர் வாழ்க..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஏரல் 
அருணாசல ஸ்வாமிகளின் 
பிறந்த நாள்.. 


திருச்செந்தூருக்கு அருகிலுள்ள 
மேலப்புதுக்குடியில் ராமசாமி நாடாருக்கும் சிவனணைந்த அம்மையாருக்கும் 
1880 அக்டோபர் இரண்டாம் நாள் பிறந்தார்.

 சிறுவயதிலேயே யோக நெறியில்
நின்றதனால் 
கை கூடி வந்த
சித்திகளைக் கொண்டு
நலிந்திருந்த மக்களுக்கு நலம் பல
செய்திருந்தார்..

தனது இறுதி நாளை முன்னதாகவே 
உரைத்து அதன்படி 
  1908 ஜூலை 27
ஆடி அமாவாசை
அன்று இறைவனுடன் 
கலந்தார்..


1906 செப்டம்பர் 5 முதல் 
1908 ஜூலை 27 வரை 
ஏரல் பேரூராட்சியின் தலைவராகப்
பொறுப்பு வகித்ததனால் 
சேர்மன் அருணாசல ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுகின்றார்.


மாற்றாருக்கு மட்டுமே 
மனம் இரங்கிய
மகாத்மா காந்திஜி
பிறந்த நாள் இன்று 
(2 அக்டோபர் 1869)


லால்பகதூர் சாஸ்திரி
இந்நாட்டு மக்கள் மறந்து விட்ட  
தவப்புதல்வர்களுள் இவரும் ஒருவர்..

இவர் ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்தபோது தமிழ் நாட்டில் அரியலூர் மருதையாற்றுப் பாலத்தில் 
(1956 நவம்பர்  23 விடியற்காலை 5:30)
மிக மோசமான விபத்து ஏற்பட்டது.. 

அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று
பதவியைத் துறந்த பண்பாளர்..


ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழையாகவே வளர்ந்து வாழ்ந்து இந்நாட்டின் பிரதமர்  என்று பதவி வகித்தும் கூட கடனாளியாகவே இறந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாள் இன்று 
(2 அக்டோபர் 1904)

முதலமைச்சர் வீடு
என்பதனால் விருது நகர் நகராட்சியினர் அந்த வீட்டுக்குள் அமைத்துத் தந்த தண்ணீர்க் குழாயைப் பிடுங்கிக் கொண்டு போகும்படிச் செய்தவர்.

ஏழைப்பங்காளர் 
கர்ம வீரர் பெருந்தலைவர் 
காமராஜர் அவர்கள்
ஜோதியாகிய நாளும் 
இன்று தான் 
(2 அக்டோபர் 1975)


பாரதத் தாயின் 
தவப்புதல்வர்களை 
நினைவு கூர்ந்து  
நல்லோர் பலரும் மீண்டும் 
பிறந்து வருதற்கு
வேண்டிக் கொள்வோம்..
*
வாழ்க பாரதம்
வளர்க பாரதம்
***

6 கருத்துகள்:

 1. இந்த நாளில் பிறந்த / மறைந்த சிற்ந்தவர்களைப் போற்றுவோம்.  நினைவு கூர்வோம்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. இந்நாளில் பிறந்த, நாட்டு மக்களுக்காக தன்னுயிரையும் பொருட்படுத்தாது அர்ப்பணித்த பெருந்தலைவர்களின் பண்புகளை நினைவு கூர்வோம். அவர்களின் பெருமைகளை எந்நாளும் அனைவரும் மறவாதிருக்கவும் வேண்டுவோம். அனைவருக்கும் நமது வணக்கங்களும் . பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. உயர்ந்த உள்ளங்களைப் பற்றிய நன்நாள் இன்று வாழ்க வையகம்...

  பதிலளிநீக்கு
 4. மகத்தான தலைவர்கள் , பாரத தாயின் தவப்புதல்வர்கள்
  போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றி
  வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
 5. தவப்புதல்வர்களை போற்றி வணங்குவோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..