நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 24, 2022

திருவலஞ்சுழி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
அனைவருக்கும்
அன்பின் இனிய
தீப ஆவளித் திருநாள்
நல்வாழ்த்துகள்..

ஸ்ரீ வெள்ளை விநாயகர்

திருத்தலம்
திருவலஞ்சுழி

இறைவன்
ஸ்ரீ வலஞ்சுழிநாதர்
அம்பிகை
ஸ்ரீ பிரகந்நாயகி

தீர்த்தம்
காவிரி, அரசலாறு
ஜடாமகுட தீர்த்தம்

தலவிருட்சம்
வில்வம்

திருஞானசம்பந்தரும்
அப்பர் பெருமானும்
வழிபட்டு பதிகம்
பாடியுள்ளனர்..

ஒரு சமயம் சிவ பூஜை செய்வதற்காக பாதாளத்தில் இருந்து பூமியைத் துளைத்துக் கொண்டு மேலே எழுந்து வந்தான் ஆதிசேஷன்..  

அந்தத் துளை - பிலத்தினுள் விழுந்து மறைந்து போனாள் காவிரி.. சோழ நாடும் வறண்டு பொலிவிழந்து  நின்றது.. 

மன்னன் செய்வதறியாது திகைக்க - ஊர் செழிக்க உத்தமர் ஒருவர் பிலத்தினுள் 
வீழ்வார் எனில் காவிரி மீண்டு வருவாள்- என, அசரீரி வந்தது.. 

தான் விழுவதென முனைந்த மன்னனைத் தடுத்து நிறுத்திவிட்டு கொட்டையூர் குடிலில் இருந்த ஹேரண்ட முனிவர் தானே  - பிலம் எனும் பெருந்துளையினுள் குதித்தார்..

தன்னைத் தானே இந்த மண்ணுக்கு என, அர்ப்பணித்தார்.. 

அது கண்டு மகிழ்ந்த இறைவன் காவிரித் தென்கரைத் தலமாக
பூம்புகாருக்கு அருகில் உள்ள வலம்புரத்தில் ஹேரண்ட முனிவரை மீட்டெடுத்துக் கொடுத்தருளினான்..

தலமுறைத் தொகுப்பிலும் திருவலஞ்சுழிக்கு அடுத்த திருத்தலம் திருவலம்புரம்..

ஸ்ரீ ஹேரண்ட முனிவருக்கு இக்கோயிலிலும் கொட்டையூரிலும் திருவலம்புரத்திலும் சந்நிதிகள் உள்ளன..

இக்கோயிலில் தான் அரிதினும் அரிதான ஸ்வேத விநாயகர் திருமேனி அமைந்துள்ளது..

பாற்கடலை கடைவதற்கு முன் விநாயக வழிபாடு செய்வதற்கு மறந்த பாவம் தீரும் பொருட்டு தேவேந்திரன் பாற்கடல் நுரையால் திருமேனி ஒன்றினை வடிவமைத்து வழிபட்டான்..

கணபதியும் மகிழ்ந்து அதில் சாந்நித்யம் கொண்டருளி இன்றும் நல்லருள் புரிகின்றார்..

சில தினங்களுக்கு முன் இத்திருக்கோயிலில் சப்தகன்னியர் வழிபாடு நடந்தது.. 

இன்றைய பதிவில் வைபவத்தின் காட்சிகள்..
படங்களுக்கு நன்றி : அகில்.


என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே.. 2/106/1
-: திருஞானசம்பந்தர் :-

தேடுவார் பிரமன் திருமாலவர்
ஆடுபாதம் அவரும் அறிகிலார்
மாடவீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடுவான் உறுகின்றதென் சிந்தையே.. 
5/66/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

 1. படங்களும், விவரங்களும் சிறப்பு. நான் சென்றிருக்கிறேன், இந்தத் தலத்துக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய பதிவு அருமை. தெய்வீக படங்கள் நன்றாக உள்ளது. இன்றைய நன்னாளில் ஸ்ரீ விநாயக பெருமானை தரிசிக்க செய்தமைக்கு மிக்க நன்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. தரிசனம் நன்று
  தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 4. அருமையான கோவில், சிறந்த பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அறுபதுகளில் முதல்முறையாகத் திருவலஞ்சுழிக்கு என் கடைசி மாமாவின் கல்யாணத்திற்காகப் போனோம். அப்போது இருந்த ஊரையும் பின்னால் பார்த்ததையும் நினைத்தால் ஊரின் அழகே மாசுபட்டுப் போயிருப்பது தெரிந்தது. என்ன செய்ய முடியும்? காலம் செய்த கோலம். பிள்ளையாரை நிறையவே பார்த்திருக்கேன். திருவலம்புரம்போனதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்ற திருப்பணியின் போது சில மண்டபங்களை கை விட்டு விட்டார்கள்.

   இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 6. பல முறை பார்த்து தரிசனம் செய்த கோயில்.இன்று தரிசனம் செய்து கொண்டேன். சப்தகன்னியர் வழி பாடு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..