நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 26, 2022

சஷ்டி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 9
புதன்கிழமை
சஷ்டி இரண்டாம் நாள்


திருக்காளத்தித் திருப்புகழ்

தனத்தா தத்தத் ... தனதான
தனத்தா தத்தத் ... தனதான

சிரத்தா னத்திற் ... பணியாதே
செகத்தோர் பற்றைக் ... குறியாதே

வருத்தா மற்றொப் ... பிலதான
மலர்த்தாள் வைத்தெத் ... தனையாள்வாய்

நிருத்தா கர்த்தத் ... துவநேசா
நினைத்தார் சித்தத் .. துறைவோனே

திருத்தாள் முத்தர்க் ... கருள்வோனே
திருக்கா ளத்திப் ... பெருமாளே.
-: ஸ்ரீ அருணகிரிநாதர் -:
நன்றி : கௌமாரம்


தலை வணங்கி உன்னைப்
பணியாமல் காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த நான்
(இனியும்) இந்த
உலகத்தின் பந்தபாசங்களில்
மனதைச் செலுத்தி
வருந்தாமல்  இருக்கும்படிக்கு

தமக்கு நிகர் வேறு 
இல்லாதவனே..

எத்தித் திரிந்த என்னையும்
உனது அருகில்  சேர்த்துக் கொண்டு உனது திருவடி மலர்களை சிந்தை செய்வதற்கு அருள்வாயாக..

ஈசனைப் போல நடனம் ஆட வல்லவனே,
(திருச்செந்தூரில் அருணகிரி நாதருக்குத் நடனத் திருகாட்சி நல்கினன் திருக்குமரன்)
எல்லாவற்றிலும் கர்த்தனாக
விளங்கும் நேசனே,

உன்னை நினைப்பவர் தம் நெஞ்சத்தில் உறைபவனே,

முக்தராகிய ஞானியர்க்கு திருவடித் தாமரைகளைத்
தந்து அருள்பவனே 

திருக்காளத்தி மாமலையில் 
உறைகின்ற பெருமாளே..

காணொளி: 
கந்த சஷ்டி காப்பு அணிவித்தல்..
நன்றி - கௌமார மடாலயம்.
சிரவை ஆதீனம்


முருகா சரணம்
அழகா சரணம்
முத்துக் குமரா 
சரணம் சரணம்..
***

13 கருத்துகள்:

 1. குமரனே போற்றி போற்றி ஓம்... முருகா சரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகா.. முருகா..

   தங்கள் அன்பின் வருகைக்கும்
   கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாளான இன்று முருகனை காணொளியில் கண்குளிர கண்டு தரிசனம் செய்து கொண்டேன். பாடல், விளக்கம் அனைத்தும் நன்றாக உள்ளது.

  /உன்னை நினைப்பவர் தம் நெஞ்சத்தில் உறைபவனே,/

  மெய் சிலிர்க்கும் வரிகள். அப்படி உள்ளமதில் நிறைந்திருக்கும் முருகனை தினமும் பணிவோம். முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மெய் சிலிர்க்கும் வரிகள். அப்படி உள்ளமதில் நிறைந்திருக்கும் முருகனை தினமும் பணிவோம்..//

   தங்கள் அன்பின் வருகைக்கும்
   கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. முருகா சரணம்.

   தங்கள் அன்பின் வருகைக்கும்
   கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 4. திருக்காளத்தி திரிப்புகழ் படித்து முருகனை வேண்டி கொண்டேன்.
  காணொளி அருமை.கெளமார மடம் போய் இருக்கிறோம். மாமாவின் பிறந்த நாளுக்கு .(மாமனார்) மாமாவின் 100 வது பிறந்த நாளுக்கு , மற்றும் மாமாவின் படத்திறப்பு விழாவிற்கு எல்லாம் மடத்து தலைவர் வந்து இருக்கிறார்கள். அவர்கள்தான் முருகனுக்கு காப்பு கட்டுகிறார்கள்.

  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. // மாமாவின் 100 வது பிறந்த நாளுக்கு , மற்றும் மாமாவின் படத்திறப்பு விழாவிற்கு எல்லாம் மடத்து தலைவர் வந்து இருக்கிறார்கள்.//

   தங்களைப் போன்ற சிவ குடும்பத்தாருடன் நானும் ஒருவனாகி விட்டேன்..

   தங்கள் அன்பின் வருகைக்கும்
   கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. திருக்காளத்தியில் குமரனா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காளத்தி மலையில் சிவ ஆலயம் தான்.. அருணகிரி ஸ்வாமிகள் சந்நிதி முருகப்பெருமானைப் பாடிய பாடல் இது..

   தங்கள் அன்பின் வருகைக்கும்
   கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. கௌமார மடம் எல்லாம் போகக் கொடுத்து வைக்கலை. இங்கே பார்த்துத் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..