நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 23, 2022

தீப ஆவளி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
  ஐப்பசி 6
ஞாயிற்றுக்கிழமை
இன்று பின்னிரவு
திங்கட்கிழமை உதயத்திற்கு 
முன்பாக நரக சதுர்த்தி ஸ்நானம்

அனைவருக்கும் அன்பின் இனிய
தீப ஆவளித் திருநாள்
நல்வாழ்த்துகள்..


அன்னையின் கையினால் தான் எனக்கு!.. 

அப்படியானதொரு வரத்தைக் கேட்டு வாங்கியிருந்தான் அதி மேதாவியாகிய - நரகன்..

அவனது தந்தை ஸ்ரீ வராஹர்..
தாய் பூமாதேவி..

காலங்களால் நரகன் நரகாசுரன் என்றானான்..

அவனைப் போட்டுத் தள்ளுவது தான் ஒரே வழி என்றானது..

நரகாசுரனுடன் போர் செய்வதற்கு
ஸ்ரீ கிருஷ்ணன்
புறப்பட்டான்.. 

கண்ணனுக்கு ருக்மணி வெற்றித் திலகமிட்ட நேரத்தில் அந்தப் பக்கமாக ஒதுங்கி நின்றிருந்தாள் சத்யபாமா..

பொறுமையின் சிகரமான அவளுக்கு இதெல்லாம் ஒத்துக் கொள்ளாது.. 

ஸ்ரீ கிருஷ்ணன் அவளை வலிய அழைத்து செங்கரம் பற்றி இழுத்து கருட வாகனத்தில் ஏற்றிக் கொண்டான்..

ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீமதி சத்யபாமாவுடன் மேலெழுந்து பறந்த கருடன் சுற்றிச் சுழன்று போர் முனையில் போய் இறங்கினான்.

போர் முகம்.. 
விழிகளை நெரித்தபடி எதிரில் நோக்கினான் நரகாசுரன்..

ஸ்ரீ வராக மூர்த்தியும் பூமாதேவியும் தான் வந்து நிற்கின்றனர் என்பதை அவன் உணர்ந்தானில்லை..

பற்களைக் கடித்துக் கொண்டு கையில் கிடைத்த ஆயுதங்களை வீசி எறிந்தான்..

அங்குமிங்குமாக அம்பு மழை.. 

ஒரு கட்டத்தில் மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததைப் போல் நடித்தான்.. 

தர்மம் வெல்வதற்கு இதுவும் தேவை தானோ!..



அவ்வளவு தான்.. கோபாவேசமானாள் சத்யபாமா..

தொடுத்த கணையை விடுத்தாள்.. நடந்த நாடகத்தை முடித்தாள்..

தாய் ஆனாலும் மகன் ஆனாலும் நீதி - நீதி தான் என்று வெற்றிக் கொடியைப் பிடித்தாள் !.. 


தீயவனிடமிருந்து விடுபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் தீபங்களை வரிசை வரிசையாக ஏற்றி வைத்து எல்லாம் வல்ல இறைவனை வணங்கினர்.. 

அதுவரையிலும் வறண்டு கிடந்த வாழ்வில் வசந்தம் வீசிட - ஆடை ஆபரணங்களை அணிந்தனர்..  

நல்ல இனிப்புகளை உண்டு மகிழ்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்..

ஆன்றோர்கள் கூறுவர் நரகாசுரனின் வீழ்ச்சி என்பது நம்மை நாமே திருத்திக் கொள்வதே - என்று..

இந்த காலகட்டத்தில் தான் - 

நல்லநாள் என்றால்  - தவறுகளுக்கு எல்லாம் தலையாகிய தவறுகளைச் செய்தல் மது அருந்தி மயங்கிக் கிடத்தல் என்று ஆகி விட்டது..

தீபம் என்பது விளக்கு.
ஆவளி எனில் வரிசை.

காலப்போக்கில்,
தீபங்களின் வரிசை -
தீப ஆவளி என்பது தீபாவளி தீப ஒளி என்றெல்லாம் ஆகி இன்றைக்கு டீப்பாவெலி என்று காதில் கேட்கின்றது..

உள்ளங்கையில் நாமாக வரவழைத்துக் கொண்ட செல்போனுக்குள் ஏகப்பட்ட சத்தங்கள்..

சம்பிரதாயத்துக்கு சம்பந்தமில்லாத நச்சரவுகளிடம் இருந்து!.. 

" டீபாவலி அவனுங்களோடது.. நீங்க எல்லாம் இவனுங்க!.. "

" யாரோடதா இருந்தா என்னடா?.. அவனுங்கிட்ட இருந்து விடுபட்டதை சுதந்திர தினமா கொண்டாட வில்லையா!.. அது மாதிரி எடுத்துக் கொள்ளேன்!.. "

" நான் தீபங்களை ஏற்றி வணங்கி புத்தாடை உடுத்தி இனிப்பினை உண்டு பிறருக்கும் கொடுத்து மகிழ்வதில் உன் கூட்டத்துக்கு என்னடா பிரச்னை?.. "
**
இத்துடன்
இன்றைய பதிவில் அழகான 
இனிமையான நெகிழ்வான பாடல்..
  
அன்னையின் ஆணை 
திரைப்படத்தில் 
இடம் பெற்ற 
இப்பாடலை இயற்றியவர் 
கவிஞர்  திரு. மருதகாசி அவர்கள்

இசை: திரு S.M.சுப்பையா நாயுடு 
அவர்கள்
(ராகம்: சாருகேசி)
   
பாடியிருப்பவர் 
ஸ்ரீமதி P.லீலா அவர்கள்..

காட்சியில் 
ஸ்ரீமதி பண்டரிபாய் அவர்கள்..
(நன்றி: இணையம்)
**

நீயே கதி ஈஸ்வரி எனக்கு
நீயே கதி ஈஸ்வரி 

மாயா உலகிலே
ஓயாத துயராலே
வாடாமலே ஒரு
வழி காட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி ..

ஆதியே அருளே
ஆகமப் பொருளே
அன்புடன் தாராயோ
உன் திருவருளே
ஆவதும் அழிவதும்
யாவும் உன்னாலே
அன்னையே பாராயோ
என்னையும் கண்ணாலே

தீயவர் வாழவும்
நல்லவர் தாழவும்
செய்வதேனோ இது
தருமம் தானோ
செய்வதேனோ இது
தருமம் தானோ..

எனக்கு
நீயே கதி ஈஸ்வரி ..
***

தீயவர் வாழவும்
நல்லவர் தாழவும்
செய்வதேனோ இது
தர்மம் தானோ!..

இதுதான்
தீப ஆவளித் திருநாளின் அடிநாதம்..

நல்லவர்களின் விருப்பம் வேண்டுதல்
இப்பாடலின் சரணத்தில் மிளிர்கின்றன..

சரணம் சரணம்
அன்னையின் திருவடிகளே
சரணம்..

நீதி தழைக்கட்டும்
நேர்மை வெல்லட்டும்..

வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
**

15 கருத்துகள்:

  1. இன்றைய தீபாவளிப் பதிவு அருமை.

    தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவர்களை?

    கலாச்சாரம் கண்முன்னே பறிக்கப்படுவதைப் பார்த்தும் தெரியாத்துபோல நடிப்பவர்களை என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவர்களை?..//

      அது தான்..
      நாம் நமது வேலையைப் பார்ப்போம்..

      அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கலாசாரத்தின் கழுத்தை நெரிக்க கொண்டவர்களும் புறப்பட்டு விட்டனர்.  அவர்களை லட்சியம் செய்யாமல் நம் வேலையை நாம் பார்ப்போம்.  தீப ஆவளி விளக்கம் புதிது.  நானும் தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் என்று சொல்வதும் வழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நானும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் என்று சொல்வதும் வழக்கம்.. //

      தீப ஆவளி விளக்கம் கொடுத்தவர் வாரியார் ஸ்வாமிகள்

      அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..
      மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. தீபாவளி பதிவு நன்றாக இருக்கிறது.
    படங்கள் அருமை.
    பாடல் பகிர்வு பிடித்த பாடல் கேட்டேன். எப்போது கேட்டாலும் மனம் நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்க்கும் .
    தீப ஆவளித் திருநாள் நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எப்போது கேட்டாலும் மனம் நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்க்கும் .//

      உண்மை.. உண்மை..

      அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதிவு அருமை. பாடல் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். கண்களில் கண்ணீர் முட்டும். மீண்டும் கேட்கக் கிடைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கண்களில் கண்ணீர் முட்டும். மீண்டும் கேட்கக் கிடைத்தமைக்கு நன்றி.//

      இந்தப்பாடல் இடம் பெற்றதன் நோக்கத்தைப் பதிவில் சொல்லி இருக்கின்றேன்..

      அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது.
    தீப ஆவளி தொகுப்பு விபரம் நன்றாக உள்ளது. அருள்மிகும் அன்னை பூமா தேவியையும், உலகை எந்நாளும் காத்து ரட்சிக்கும் நாராயணனையும் பக்தியுடன் கண்டு வணங்கிக் கொண்டேன். பகிர்ந்த பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் கேட்டேன். வரிகள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி

    தங்களுக்கும் இனிய தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் கேட்டேன். வரிகள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி..//

      அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..
      மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  7. பாடல் இது வரை கேட்டதில்லை துரை அண்ணா. அருமையான பாடல்...கேட்டு ரசித்தேன்

    தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்! இதுதான் பொருத்தம் என்று தோன்றுகிறது. உங்கள் விளக்கம் அருமை துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான தீபாவளி பதிவு.
    தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..