நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 29, 2022

சஷ்டி 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 12
சனிக்கிழமை
சஷ்டி ஐந்தாம் நாள்


தஞ்சை திருப்புகழ்

தந்தன தானன ... தனதான
தந்தன தானன ... தனதான

அஞ்சன வேல்விழி ... மடமாதர்
அங்கவர் மாயையி .... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ... தடிசேர
விம்பம தாயரு ... ளருளாதோ

நஞ்சமு தாவுணு ... மரனார்தம்
நல்கும ராஉமை ... யருள்பாலா
தஞ்சென வாமடி ... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ... பெருமாளே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
நன்றி: கௌமாரம்


வேல் போன்ற விழிகளில் மை எழுதியபடித் திரியும்  பெண்களின் அழகில் மயக்கம் கொண்டு அலைவேனோ?..

எனது புத்தி மேம்பட்டு  உனது திருவடிகளை யே நினைப்பதற்கு ஒளியாய்த் திகழ்ந்து  திருவருள் புரியக் கூடாதா?..

ஆலகால விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய திருக்குமரனே, 

உமையாள் பெற்றருளிய பாலகனே,

நீயே சரணம்!.. -  என, உளத்தில் கொண்டிருக்கும்  உனது அடியார்கள் வாழ்வதற்காக தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே!..

படங்களுக்கு நன்றி
முருகனடியார்கள் Fb


சேவற்கொடியுடை செல்வா சரணம்
செந்தூர் வேலா சரணம் சரணம் 
தஞ்சையின் தலைவா சரணம் சரணம்
தமிழே அமுதே சரணம் சரணம்
***

12 கருத்துகள்:

 1. முத்தான முத்துக் குமரா..  கந்தையா... காக்கவேண்டும் எங்களை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முத்தான முத்துக் குமரா.. கந்தையா... காக்கவேண்டும் எங்களை.//

   முருகா.. முருகா..

   மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. பதில்கள்
  1. முருகா முருகா சரணம்.. சரணம்..

   மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. முருகப் பெருமானின் அழகிய படங்களை கண்டு மனமுருகி தரிசித்துக் கொண்டேன். அழகான படங்களுக்கு மிக்க நன்றி.

  இன்றைய திருப்புகழ் பாடலும். அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. வேலுடன் சேவற்கொடியையும் தாங்கிடும் வேலவன் அனைவரையும் அன்புடன் காத்தருள வேண்டும். வேலவா சரணம். முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வேலுடன் சேவற்கொடிய தாங்கிடும் வேலவன் அனைவரையும் அன்புடன் காத்தருள வேண்டும்..//

   அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. சேவற்கொடியோன் அனைவரையும் காக்க வேண்டும்.
  படங்கள் அருமை. முருகா சரணம், வடிவேலா சரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகா சரணம், வடிவேலா சரணம்..
   முருகா சரணம், வடிவேலா சரணம்..

   நன்றி.. நன்றி..

   நீக்கு
 5. தஞ்சைத் திருப்புகழை இப்போத் தான் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகா சரணம், வடிவேலா சரணம்..

   நன்றி.. நன்றியக்கா..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..