நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 19, 2022

ஐந்து வீட்டு சுவாமி 7


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உடன்குடி - செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி தரிசனம் தொடர்கின்றது..

(படங்களுக்கு நன்றி: ஐந்து வீட்டு சுவாமி Fb)இன்று
ஸ்ரீ பெரிய பிராட்டி தரிசனம்


கழுகுமலையில் பிறந்து மீனாட்சியம்மன் அருளால் வளர்ந்து அன்னையின் வழிகாட்டலுடன் இங்கே வந்து சேர்ந்த தும்பையப்பர்  ஜோதியான இடம் தான் செட்டியாபத்து.. 

பிந்நாளில் வைணவ அன்பர் ஒருவரது கனவில தோன்றி - தான் வழிபட்ட அம்மனை தொடர்ந்து வழிபட்டு விளக்கேற்றி வைக்கும்படி  சொல்ல, அந்த அன்பர் நீங்கள் யார்?.. - எனக் கேட்டபோது சங்கு சக்கரம் தாங்கி பிரம்மாண்டமாக காட்சியளித்தார்..

இதனாலேயே சங்கு சக்கரத்துடன் இங்கே பெரிய சுவாமி என பிரதிஷ்டை செய்யப்பட்டார்..
ஸ்ரீ பெரிய சுவாமி (தும்பையப்பர்) வழிபட்ட மீனாட்சி அம்மன் தான் ஸ்ரீ பெரிய பிராட்டி என்று விளங்குகின்றாள்.. 


கோயிலுக்கான விசேஷங்கள் அனைத்தும் பெரிய பிராட்டியின் சந்நிதியில் அனுமதி பெற்ற பின்னரே நடத்தப்படுகின்றன.. 


வேண்டுதல் செய்து வளையல்களைக் கட்டுவது பிரசித்தம்... ஸ்ரீ பெரிய பிராட்டி அம்மனுக்கு பணியாரம் வைத்து பணிவிடை (படையல்) செய்வது விசேஷம்..இது இக்கோயிலில் காலங்காலமாக நடந்து வருகிறது.
*
ஸ்ரீ ஆஞ்சநேயர் தரிசனம்


வெகு வருடங்களுக்கு முன்பாக கோயிலில் எதுவும் கேட்காமல் அன்பர் ஒருவர் ஆஞ்சநேயர் விக்ரகம் ஒன்றினைக் கொண்டு வந்து விட்டார்.. 

அப்போது அனுமதி கிடைக்காததால் அதனை வெளியில் வைத்து விட்டுச் சென்று விட்டார்.. 

பல வருடங்கள் ஆகிய நிலையில்  முறையாக அனுமதி கிடைத்த பின்னரே கோயிலுக்குள்  - ஸ்ரீ பெரிய சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரில் சந்நிதி அமைக்கப்பட்டது.. 

ஸ்ரீ ஆஞ்சநேயரும் எழுந்தருளினார்...
*
ஸ்ரீ பெரிய பிராட்டி துதி


கற்பகத் தருவாய் கருணை தருவாய்
பொற்பதம் பூண்ட பூமகள் உருவாய்
சொற்பதம் சொல்லலா சுருதி வடிவாய்
நற்புகழ் நல்லருள் நாயகி எங்கள்
கண்ணின் மணியாள் காட்சி காட்டும்
விண்ணின் விரவும் விரிசுடர் நாட்டும்
எண்ணிலா எழிலாய் எங்கும் பூட்டும்
எண்ணம் நிற்கும் பெரிய பிராட்டியே
உன்னிடம் தஞ்சம் உளமெல்லாம் நீயே
என்றும் நெஞ்சம் நிறைவாய் நீயே..
*
மேலுற்ற பரவசத்தால் பற்பல பாடல்களை தவத்திரு குமராண்டி ஸ்வாமிகள் என்பவர் இயற்றியிருப்பதாக அறிய முடிகின்றது.. ஆயினும் அவரைப் பற்றிய விவரகள் தெரியவில்லை..

இன்றைய பதிவிலுள்ள படங்கள் திருக் கோயிலின் தளத்தில் இருந்து பெறப்பட்டவை.

அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஐந்து வீட்டு சுவாமிகளே போற்றி..
***

16 கருத்துகள்:

 1. அறியாத தகவல்கள். பெரிய பிராட்டி மீனாக்ஷ்மி அம்மன் தெய்வீக அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. ஐந்து வீட்டு சுவாமி பற்றிய தகவல்களே முற்றிலும் அறியாத ஒன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. தகவல்கள் சிறப்பு தொடர்ந்து வருகிறேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி

   நீக்கு
 4. இக்கோயில் பற்றிய தகவல்கள் சிறப்பு. படங்களும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 5. ஸ்ரீ பெரிய பிராட்டி துதியை பாடி வணங்கி கொண்டேன்.
  எல்லோருக்கும் எல்லா நலங்களையும் பெரிய பிராட்டி அருள வேண்டும்.
  படங்கள், விவரங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // எல்லாருக்கும் எல்லா நலங்களையும் பெரிய பிராட்டி அருள வேண்டும்..//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. ஐந்து வீட்டு சுவாமி கோயில் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. இந்தக் கோவிலைப் பற்றிய ஒவ்வொரு பதிவையும், ஒவ்வொரு தெய்வங்களையும் ரசித்து பக்தியுடன் படிக்கிறேன். ஸ்ரீபெரியபிராட்டியின் துதி பாடி அன்னை மீனாட்சியம்மனை வணங்கிக் கொண்டேன். ஆஞ்சநேயர் தரிசனமும் பெற்றுக் கொண்டேன். அனைவரையும் மீனாட்சி அம்மனும், ஸ்ரீ பெரிய சுவாமியும் ஆஞ்சநேயரும் காத்தருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அனைவரையும் மீனாட்சி அம்மனும், ஸ்ரீ பெரிய சுவாமியும் ஆஞ்சநேயரும் காத்தருள வேண்டும்//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. பெரிய பிராட்டியின் முகம் அழகாக இருக்கின்றது. இக்கோயில் தொடரின் முந்தைய பகுதிகளும் வாசித்த நினைவு வந்தது.

  படங்கள் எல்லாமும் அழகாக இருக்கின்றன.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // படங்கள் எல்லாமும் அழகாக இருக்கின்றன.//

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..