நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஐந்து வீட்டு சுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐந்து வீட்டு சுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 20, 2022

ஐந்து வீட்டு சுவாமி 8


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உடன்குடி - செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி தரிசனம் தொடர்கின்றது..

ஐந்து வீட்டு சுவாமிகள் என்றாலும் இங்கேயுள்ள சந்நிதிகள் எட்டு..

இங்கே பிரதானமாக சொல்லப்படும் மந்திரமும் எட்டெழுத்து..

மூன்று பதிவு என நினைத்த என்னை கூடுதலாக ஐந்து  எழுத வைத்ததும் எட்டெழுத்து.. 

ஐந்து வீட்டு சுவாமிகள் வலைத்தளம்,  Fb இவை இரண்டும் தகவல் தொகுப்பிற்கு உறுதுணையாக இருந்தன..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

முதல் இரண்டு படங்களும் தஞ்சையம்பதி..

மற்ற படங்கள்: ஐந்து வீட்டு சுவாமி Fb








புளிய மரம்
ஜாதி வேறுபாடுகள் மலிந்திருந்த அந்த காலகட்டத்தில ஐந்து வீட்டுக் கோயிலில் சுவாமிகளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டார் ஏழை ஒருவர்.. 

அந்தப் பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுத்த போது, அதனைப் பெற்றுக் கொள்வதற்கு எவரும் முன் வரவில்லை. 

காரணம், அவர்  துப்புரவுத் தொழிலாளி என்பதே..

வருத்தத்துடன் அழுது புலம்பித் தவித்த அந்த ஏழை சோர்வடைந்து கோயில் வாசலிலேயே தூங்கி விட்டார்.  

அவரது கனவில் தோன்றிய பெரிய சுவாமிகள் - 

"இந்தப் பிரசாதத்தை இங்கே எங்காவது புதைத்து வைத்து விட்டு அடுத்த வருடம் வந்து திறந்து பார்!.. "- 

எனக் கூறி மறைந்தார்.

புளிய மரத்தின் அருகில் நாக வடிவங்கள்

திடுக்கிட்டு விழித்த  தொழிலாளி கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில்  இருந்த புளிய மரத்தின் கீழ்  வாழை இலையை வைத்து பிரசாதத்தை மூடி, அதைப் பானையோடு புதைத்து வைத்தார்..


மறுவருடம் கோயிலுக்கு வந்த அவர் பெரிய சுவாமியை வணங்கி விட்டு, புதைத்து வைத்திருந்த அந்த பானையைத் தோண்டி எடுக்க, 

அந்தப் பிரசாதமானது அப்பொழுதுதான்  சமைத்ததைப் போல ஆவி பறக்க இருந்தது. அங்கு இருந்தவர்கள் இதைப் பார்த்ததும் திகைத்துப் போயினர்..  

அந்தத் தொழிலாளியின் பக்தியையும் பிரசாதத்தின் மகிமையையும் புரிந்து கொண்டனர்..

அந்தப் பிரசாதத்தைத் தங்களுக்கும் தந்தருள வேண்டுமென்று அனைவரும் தண்டனிட்டு நின்றனர்.. கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர். 

ஏழைத் தொழிலாளிக்கு இறைவன் அளித்த நல்லருள் இது - என்று அந்த நாளில் இருந்து  இக் கோயிலில் ஜாதி பேதம் என்று எவரும் மனதாலும் பார்ப்பதில்லை.

பனையறுப்பு பொங்கல்


ஒவ்வொரு ஆண்டும் தை முதல் தேதி அன்று அந்த வருடத்தின் முதல் பனை அறுவடை செய்யப்படுகிறது, 

அன்று செட்டியாபத்து மக்கள் ஊர் கூடி முதலில் அறுவடை செய்த பனை ஓலையை பெரிய சுவாமி சந்நிதியின் முன் வாழை மரம் கட்டுவது போலக் கட்டி 
வைக்கின்றனர்..

மக்கள் கூடி வணங்கி தங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும்படி வேண்டிக் கொள்கிறார்கள். 

மேலும், அன்று கோயிலில் பொங்கல் வைத்ததும் பொங்கல் வைக்கப்பட்டதை ஊருக்கு அறிவிக்கிறார்கள். அதன் பிறகு தான் ஊரில் அனைவரும் பொங்கல் பானை வைக்கின்றார்கள். 

கோயிலில் பொங்கல் வைப்பதற்கு முன் ஊரில் யாரும் பொங்கல் வைப்பதில்லை..

ஸ்ரீ பெரிய பிராட்டி அம்மன்
ஐந்து வீட்டு சுவாமிகள் தரிசனத்திற்கு எந்த சூழ்நிலையிலும் பெண்கள் வரலாம்.. எந்த ஒரு தடையும் இல்லை..

இக்கோயிலில்
கர்ப்பிணிப் பெண்களின்  குழந்தைக்கும் சேர்த்து இரட்டைப் பிரசாதம் என்பது சிறப்பு..

ஸ்ரீ பெரிய சுவாமி
பழிகள் கொலைகள் செய்தாலும் பாவம் 
அதிகம் நினைத்தாலும்
விழிகண் குருடு கால் கைகள் முடக்கம் 
இருந்தால் மனம் உருகி
அழியாதிருக்கும் எட்டெழுத்தை அன்பாய் 
துதித்து வினை தீர்த்து 
தெளிவாய்  மனதில் அருள் புரியும் சிவமாய் 
உதித்த திருமணியே!..

ஸ்ரீ ஆத்தி சுவாமி
அஞ்சும் மூன்றும் எட்டெழுத்து ஹரி ஓம் 
எனும் உயிரெழுத்து
துஞ்சாதிருக்கும் வடவம்பில் தோன்றும் 
சங்கு சக்கரமும்
நெஞ்சில் அடக்கி எட்டெழுத்தை நினைத்தோர் துன்பம் தீர்த்து வைக்கும்
செஞ்சொல் தமிழே தந்தருளும் சிவமாய் 
உதித்த திருமணியே!..
**
இந்த அளவில் ஐந்து வீட்டு சுவாமிகளின் 
தரிசனம் நிறைவு எனக் கொள்வோம்..

ஐந்து வீட்டு சுவாமிகள் நல்லருளால்
நன்மைகள் என்றும் தொடரட்டும்..


ஐந்து வீட்டு 
சுவாமிகளே போற்றி..
***

புதன், அக்டோபர் 19, 2022

ஐந்து வீட்டு சுவாமி 7


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உடன்குடி - செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி தரிசனம் தொடர்கின்றது..

(படங்களுக்கு நன்றி: ஐந்து வீட்டு சுவாமி Fb)







இன்று
ஸ்ரீ பெரிய பிராட்டி தரிசனம்


கழுகுமலையில் பிறந்து மீனாட்சியம்மன் அருளால் வளர்ந்து அன்னையின் வழிகாட்டலுடன் இங்கே வந்து சேர்ந்த தும்பையப்பர்  ஜோதியான இடம் தான் செட்டியாபத்து.. 

பிந்நாளில் வைணவ அன்பர் ஒருவரது கனவில தோன்றி - தான் வழிபட்ட அம்மனை தொடர்ந்து வழிபட்டு விளக்கேற்றி வைக்கும்படி  சொல்ல, அந்த அன்பர் நீங்கள் யார்?.. - எனக் கேட்டபோது சங்கு சக்கரம் தாங்கி பிரம்மாண்டமாக காட்சியளித்தார்..

இதனாலேயே சங்கு சக்கரத்துடன் இங்கே பெரிய சுவாமி என பிரதிஷ்டை செய்யப்பட்டார்..
ஸ்ரீ பெரிய சுவாமி (தும்பையப்பர்) வழிபட்ட மீனாட்சி அம்மன் தான் ஸ்ரீ பெரிய பிராட்டி என்று விளங்குகின்றாள்.. 


கோயிலுக்கான விசேஷங்கள் அனைத்தும் பெரிய பிராட்டியின் சந்நிதியில் அனுமதி பெற்ற பின்னரே நடத்தப்படுகின்றன.. 


வேண்டுதல் செய்து வளையல்களைக் கட்டுவது பிரசித்தம்... ஸ்ரீ பெரிய பிராட்டி அம்மனுக்கு பணியாரம் வைத்து பணிவிடை (படையல்) செய்வது விசேஷம்..



இது இக்கோயிலில் காலங்காலமாக நடந்து வருகிறது.
*
ஸ்ரீ ஆஞ்சநேயர் தரிசனம்


வெகு வருடங்களுக்கு முன்பாக கோயிலில் எதுவும் கேட்காமல் அன்பர் ஒருவர் ஆஞ்சநேயர் விக்ரகம் ஒன்றினைக் கொண்டு வந்து விட்டார்.. 

அப்போது அனுமதி கிடைக்காததால் அதனை வெளியில் வைத்து விட்டுச் சென்று விட்டார்.. 

பல வருடங்கள் ஆகிய நிலையில்  முறையாக அனுமதி கிடைத்த பின்னரே கோயிலுக்குள்  - ஸ்ரீ பெரிய சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரில் சந்நிதி அமைக்கப்பட்டது.. 

ஸ்ரீ ஆஞ்சநேயரும் எழுந்தருளினார்...
*
ஸ்ரீ பெரிய பிராட்டி துதி


கற்பகத் தருவாய் கருணை தருவாய்
பொற்பதம் பூண்ட பூமகள் உருவாய்
சொற்பதம் சொல்லலா சுருதி வடிவாய்
நற்புகழ் நல்லருள் நாயகி எங்கள்
கண்ணின் மணியாள் காட்சி காட்டும்
விண்ணின் விரவும் விரிசுடர் நாட்டும்
எண்ணிலா எழிலாய் எங்கும் பூட்டும்
எண்ணம் நிற்கும் பெரிய பிராட்டியே
உன்னிடம் தஞ்சம் உளமெல்லாம் நீயே
என்றும் நெஞ்சம் நிறைவாய் நீயே..
*
மேலுற்ற பரவசத்தால் பற்பல பாடல்களை தவத்திரு குமராண்டி ஸ்வாமிகள் என்பவர் இயற்றியிருப்பதாக அறிய முடிகின்றது.. ஆயினும் அவரைப் பற்றிய விவரகள் தெரியவில்லை..

இன்றைய பதிவிலுள்ள படங்கள் திருக் கோயிலின் தளத்தில் இருந்து பெறப்பட்டவை.

அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஐந்து வீட்டு சுவாமிகளே போற்றி..
***

ஞாயிறு, அக்டோபர் 16, 2022

ஐந்து வீட்டு சுவாமி 6


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உடன்குடி - செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமிகள் 
தரிசனம் தொடர்கின்றது..






இன்று
ஸ்ரீ குதிரை சுவாமி
ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் தரிசனம்


ஸ்ரீ ஆத்தி சுவாமி சந்நிதிக்கு அருகில் அவரது வாகனமாகிய குதிரை பெரிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.. குதிரைக்கு அருகில் வேட்டையும் பவ்யமாக அமர்ந்துள்ளது..

(இங்குள்ள படங்கள் எளியேனால் எடுக்கப் பட்டவை.)






பூஜை வேளைகளில் குதிரை சுவாமிக்கும் எல்லாவித மரியாதைகளுடன் பூஜை நடக்கின்றது..

ஸ்ரீதிருப்புளி ஆழ்வார்..


(இப்பகுதியில் உள்ள படங்கள் கோயிலின் தளத்தில் இருந்து பெறப்பட்டவை.. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..)

நம்மாழ்வார் நாராயண  பக்தர்.. இறை தரிசனம் பெற்றவர் என்பதனால் அவரை இறைவனுக்கு ஒப்பாக வணங்கி வருகின்ற வேளையில் ஸ்ரீ பெரியசாமி  ஆழ்வார் திருநகரிக்குச் சென்று நம்மாழ்வாரைத் தரிசனம் செய்திருக்கின்றனர்.. அப்போது இங்கு வந்து பார்ப்பதற்கு ஆழ்வார் விரும்பியதால் தொட்டில் கட்டி தூக்கி வந்திருக்கின்றனர்..



பக்தர்களின் குரலுக்கு ஓடோடி வரும் நிலையில் 
எம்பெருமான் நாராயண மூர்த்தி கருட வாகனத்தின் மீது அமர்ந்த வண்ணம் காட்சியளிக்கின்றார். 


இது வேறு எங்கும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சியாகும்

அன்றைக்கு ஆழ்வார் தங்கியிருந்த இடத்தில் தான் சந்நிதி அமைந்துள்ளது.. இங்கே விக்ரகம் விளங்குகின்றது.. சந்நிதியில் பீடத்தைச் சுற்றி வந்து வணங்கலாம்..

வெளிப் பக்கம் பழைமையான புளிய
மரமும் உள்ளது..

ஐந்து வீட்டு சுவாமிகள் போற்றி போற்றி..
***