நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 16, 2022

ஐந்து வீட்டு சுவாமி 6


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உடன்குடி - செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமிகள் 
தரிசனம் தொடர்கின்றது..


இன்று
ஸ்ரீ குதிரை சுவாமி
ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் தரிசனம்


ஸ்ரீ ஆத்தி சுவாமி சந்நிதிக்கு அருகில் அவரது வாகனமாகிய குதிரை பெரிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.. குதிரைக்கு அருகில் வேட்டையும் பவ்யமாக அமர்ந்துள்ளது..

(இங்குள்ள படங்கள் எளியேனால் எடுக்கப் பட்டவை.)


பூஜை வேளைகளில் குதிரை சுவாமிக்கும் எல்லாவித மரியாதைகளுடன் பூஜை நடக்கின்றது..

ஸ்ரீதிருப்புளி ஆழ்வார்..


(இப்பகுதியில் உள்ள படங்கள் கோயிலின் தளத்தில் இருந்து பெறப்பட்டவை.. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..)

நம்மாழ்வார் நாராயண  பக்தர்.. இறை தரிசனம் பெற்றவர் என்பதனால் அவரை இறைவனுக்கு ஒப்பாக வணங்கி வருகின்ற வேளையில் ஸ்ரீ பெரியசாமி  ஆழ்வார் திருநகரிக்குச் சென்று நம்மாழ்வாரைத் தரிசனம் செய்திருக்கின்றனர்.. அப்போது இங்கு வந்து பார்ப்பதற்கு ஆழ்வார் விரும்பியதால் தொட்டில் கட்டி தூக்கி வந்திருக்கின்றனர்..பக்தர்களின் குரலுக்கு ஓடோடி வரும் நிலையில் 
எம்பெருமான் நாராயண மூர்த்தி கருட வாகனத்தின் மீது அமர்ந்த வண்ணம் காட்சியளிக்கின்றார். 


இது வேறு எங்கும் காணக் கிடைக்காத அபூர்வ காட்சியாகும்

அன்றைக்கு ஆழ்வார் தங்கியிருந்த இடத்தில் தான் சந்நிதி அமைந்துள்ளது.. இங்கே விக்ரகம் விளங்குகின்றது.. சந்நிதியில் பீடத்தைச் சுற்றி வந்து வணங்கலாம்..

வெளிப் பக்கம் பழைமையான புளிய
மரமும் உள்ளது..

ஐந்து வீட்டு சுவாமிகள் போற்றி போற்றி..
***

12 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமையாக உள்ளது. ஐந்து வீட்டு சுவாமிகளை தரிசித்து வருகிறோம். இன்றைய குதிரை சாமி படங்களையும், விபரங்களையும் பார்த்து படித்து தெரிந்து கொண்டேன்.

  நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அழகாக உள்ளன. சங்கை கையில் ஏந்தியபடி இருக்கும் பெண்மணிகளின் சிலைகள் அழகாக இருக்கிறது.

  நம்மாழ்வார் இங்கு வந்த விபரத்தையும் படித்து தெரிந்து கொண்டேன். தரிசித்தும் கொண்டேன். அந்தப் படங்களும் நன்றாக உள்ளது.

  கருடவாகன பெருமாள் மிகவும் அழகாக உள்ளார். பார்த்தவுடன் கருட ஸ்லோகம் சொல்லி அவரை மனதாற வணங்கிக் கொண்டேன். அவர்தான் ,விரைந்து வந்து அனைவரையும் நோய் நொடியின்றி காத்தருள வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொண்டேன். அறியாத இந்த கோவிலின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கருடவாகன பெருமாள் மிகவும் அழகாக உள்ளார். பார்த்தவுடன் கருட ஸ்லோகம் சொல்லி அவரை மனதாற வணங்கிக் கொண்டேன்.//

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 2. கருடவாகனத்தில் பறந்து வந்து பகதர்களின் குறைதீர்க்கும் நாராயணமூர்த்தி விக்கிரகம் அருமை.
  விவரங்கள் எல்லாம் அருமை.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கருடவாகனத்தில் பறந்து வந்து பகதர்களின் குறைதீர்க்கும் நாராயணமூர்த்தி விக்கிரகம் அருமை.//

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 3. எளியோனால் எடுக்கப்பட்ட படங்களை எலியால் சொடுக்கி பெரியதாக்கி தரிசித்து கொண்டேன் ஜி.

  வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி...

   நீக்கு
 4. அனைத்துப் படங்களையும் க்ளிக்கி பெரிதாக்கி பார்த்து மகிழ்ந்தேன்.  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி
   ஸ்ரீராம்...

   நீக்கு
 5. படங்கள் அத்தனையும் மிக அழகு. நீங்கள் எடுத்த படங்கள் மிக அருமை, விவரங்களும் சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..