நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 21, 2013

மார்கழிப் பனியில் - 06

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி 
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 06
 


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் 
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு 
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி 
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை 
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் 
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் 
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம்




ஆலய தரிசனம்


குமார வயலூர்

திருஅண்ணாமலையில் முருகனின் திருவருள் பெற்று உய்வடைந்த அருணகிரி நாதர் - திருப்புகழ் பாட ஆரம்பித்தது இத்திருத்தலத்தில் தான். 

குமார வயலூர் தொன்மையான சிவஸ்தலம். 
இறைவன் - ஆதிநாதர். அம்பிகை  - புராணேஸ்வரி. 

கைத்தலநிறைகனி எனும் திருப்புகழ் இத்திருக்கோயிலில் உள்ள பொய்யா கணபதியின் பேரில் பாடப்பட்டதகும். 

வாரியார் ஸ்வாமிகள் எம்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டது இங்கே தான். வாரியார் ஸ்வாமிகள் இத்திருக் கோயிலுக்குத்  திருப்பணிகள்  செய்துள்ளார்.  

திருக்கோயிலின் எதிரில்  சக்தி தீர்த்தம். தலவிருட்சம் - வன்னி மரம். 

திருக்குளத்தின் அருகிலேயே கருப்பஸ்வாமி கோயில் கொண்டுள்ளார். இவரே இத்திருத்தலத்தின் பிரதான காவல் தெய்வம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.


நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம - வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம - பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம - கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம - அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு - மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக - வயலூரா

ஆத ரம்பயில் ஆரூரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி - லையிலேகி

ஆதி யந்த உலா ஆசுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் - பெருமாளே!..


ஆவினன்குடியையும் வயலூரையும் இணைத்துப் பாடப் பெற்ற திருப்புகழ். 

சிவாய திருச்சிற்றம்பலம்.

20 கருத்துகள்:

  1. வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருந்துகொண்டும் மிகச் சிறப்பாகத்
    தங்களின் வலைத்தளப் பகிர்வினையும் வெளியிட்டமை குறித்து
    என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தாங்கள் அனைவரும் அளிக்கும் உற்சாகம் தான் காரணம்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வயலூர் - பெயருக்கு ஏற்றபடியே இங்கே செல்லும் வழியில் அழகிய வயல்கள்.... அருமையானதோர் கோவில்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. குமார வயலூர் கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மனம் மகிழும் மார்கழி பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. குமார வயலூர் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார் ..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. வயலூர் வள்ளல் அறுமுகனின் சிறப்பினைக்கண்டு ஆனந்தம் கொண்டேன்.

    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. குமார வயலூர் கோயிலின் சிறப்பினை அறிந்தேன் ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. புள்ளும் சிலம்பின காண் .... ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரமும், எங்கள் ஊர் குமார வயலூர் செய்திகளும் மிகவும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மார்கழிப் பணியில் நனைந்தேன்.
    குமார வயலூர் திரு முருகன் திருவருள் பெற்று பாடிய திருப்புகள் பற்றியும் தந்த விடயம் அருமை
    மிக்க நன்றி....! தொடர வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. திருச்சி வயலூர் முருகனோடு, திருமுருக கிருபானந்த வாரியாரின் இறைத் தொண்டினை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளை மறக்கவும் கூடுமோ!..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..