நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 19, 2013

மார்கழிப் பனியில் - 04

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 04


ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல் 
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி 
ஊழி முதல்வன் உருவம் போல் கறுத்துப் 
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில் 
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து 
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல் 
வாழ உலகினின் பெய்திடாய் நாங்களும் 
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்

திருச்சிராப்பள்ளி


இன்று திருச்சி அழைக்கப்படும் திருத்தலம். 

திருக்கோயில் தனியானதொரு குன்றின்  மீது உள்ளது. 


குன்றின் உச்சியில் வரப்ரசாதியான ஸ்ரீவிநாயக மூர்த்தி -  உச்சிப் பிள்ளையார் - என கோயில் கொண்டருள்கின்றார். 

 ஈசனின் திருப்பெயர் தாயுமானவர். அம்பிகை மட்டுவார்குழலி.

அது ஒரு மழைக்காலம். 

மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்திருந்த கிராமத்தில் நிறை மாத கர்ப்பிணி.  அவள்  பெயர் ரத்னாவதி . கணவன் வணிகம் மேற்கொண்டு பல ஊர்களுக்கும் சென்று வருபவன். 

பேறு காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. துணைக்கு வரவேண்டிய தாய் காவிரியின் வடகரையில் இருந்து வரவேண்டும். கால சூழ்நிலையில்  - காவிரி நதியில் வெள்ளப் பெருக்கு.  

குறித்தபடி தாய்  அருகிருந்து பராமரிக்க இயலாத சூழல்.

மகள்  தென்கரையிலும் தாய் வடகரையிலும் வேதனையால் துடித்தனர்.  

ஆதரவற்ற ரத்னாவதிக்கு எல்லாம் வல்ல சிவபெருமானே தாயின் வடிவங்கொண்டு வந்து பேறு பார்த்து  அருளியதாக தலவரலாறு.


தாயின் வடிவு கொண்டு ஈசன் வந்ததால் தாயுமானவர் எனும் திருப்பெயர்.

மகேஸ்வரன் மகப்பேறு மருத்துவனாக விளங்கும் ஒப்பற்ற திருத்தலம்.

மேற்கு நோக்கிய திருக்கோயில் . 258 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பாடிப் புகழ்ந்த திருத்தலம்.  

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி 
வேறொன்றறியேன் பராபரனே!..

- என்று பாடியருளிய தாயுமானவ சுவாமிகள் வாழ்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான்.

தமிழகத்தின் நடு நாயகமாகத் திகழும் மாநகரம். திருச்சி மலைக்கோட்டை என மக்களால் அன்புடனும் பெருமையுடனும் புகழப்படுவது. 

நன்றுடையானைத் தீயதில்லானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் 
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!.. (1/98)
                                                                                                    - திருஞான சம்பந்தர்

சிவாய திருச்சிற்றம்பலம்

24 கருத்துகள்:

 1. ஆஹா! இன்றைய பாசுரம் ’ஆழிமழைக்கண்ணா’ மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  தலைப்பினில் ஓர் மிகச்சிறிய எழுத்துப்பிழையுள்ளது. மாற்றி சரி செய்யுங்கோ. மார்கழிப்பனியில் - 04 என்று இருக்கட்டும்.


  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   பிழையை திருத்தி விட்டேன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. எங்கள் ஊராம் திருச்சியையும், தாயுமானவரையும் பற்றி படங்களும் விளக்கங்களும் கொடுத்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

  //நன்றுடையானைத் தீயதில்லானை நரை வெள்ளேறு
  ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
  சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
  குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!.. (1/98)
  - திருஞான சம்பந்தர்//

  அருமையான பாடல்.


  >>>>>>


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   ஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பாடல்.
   கேட்பவர் சிந்தையை உருக்கும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. நானும் இதே தாயுமானவர் கோயில் பற்றி என் ஒருசில பதிவுகளில் படங்களுடன் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.

  http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_27.html
  காது கொடுத்துக்கேட்டேன் ...... ஆஹா குவா குவா சப்தம்

  http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html
  ஊரைச்சொல்லவா ...... பேரைச்சொல்லவா !

  http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html
  ஏழைப்பிள்ளையார்


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   மிகவும் அருமையான பதிவுகளில் தங்கள் கைவண்ணம் கண்டேன்
   தங்கள் வழங்கிய இணைப்புகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ஆலயதரிசனமாக இன்று எங்கள் ஊர் திருச்சியின் சம்பந்தர் பாடிய நன்றுடையானை குன்றுடையானைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி! அய்யா திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொல்லியதை அப்படியே வழிமொழிகின்றேன். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   அன்பின் ஐயா திரு வை.கோ அவர்களின் கருத்தினை தாங்கள் வழிமொழிவது கண்டு மிகவும் மகிழ்ச்சி..
   தங்கள் இனிய வருகைக்கு நன்றி..

   நீக்கு
 6. மிகவும் அருமை ஐயா... பெரியவர்களின் கருத்துரைகளும்... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி
  வேறொன்றறியேன் பராபரனே!..

  - என்று பாடியருளிய தாயுமானவ சுவாமிகள் வாழ்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான்.


  மழைப்பாடலும் பகிர்வுகளும் அருமை..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. திருப்பாசுரத்துடன் குன்றுடையான் புகழ் பாடும்
  திருத்தலச் சிறப்பு மிக மிக அருமை!

  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. ஆழிமழைக் கன்னாவுடன் தாய்மானவனையும் பிரார்த்தித்துக் கொண்டேன்.நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி..
   இனிய வருகைக்கு நன்றி..

   நீக்கு
 10. ஆலய தரிசனத்தில் இன்று எங்கள் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர். பல முறை சென்ற கோவில். இன்னமும் பிரமிப்பு தான் இக்கோவில் பார்க்கும்போது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. எங்கள் திருச்சி மலைக்கோட்டை ஐ காவிரிப் பாலத்திலிருந்து பார்த்தால் அதன் அழகே தனி. திரு வைகோ அவர்களின் ஒரு பதிவில் பார்த்த எண்ணம்.
  ந. பரமசிவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. Paramasivam December 21, 2013 2:53 pm

   வாங்கோ, வணக்கம்.

   //எங்கள் திருச்சி மலைக்கோட்டை ஐ காவிரிப் பாலத்திலிருந்து பார்த்தால் அதன் அழகே தனி. திரு வைகோ அவர்களின் ஒரு பதிவில் பார்த்த எண்ணம்.
   ந. பரமசிவம்//

   மிக்க நன்றி. இதோ இந்தப்பதிவுகளில் மீண்டும் கண்டு களியுங்கள்.

   http://gopu1949.blogspot.in/2011/07/1.html

   http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

   அன்புடன் VGK

   நீக்கு
  2. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் இணைப்புகளும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  3. அன்பின் ந. பரமசிவம் அவர்களுக்கு..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..