நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 25
வியாழக்கிழமை
வைகாசி மூலம் -
திருஞான சம்பந்தர் குருபூஜை விழாவை முன்னிட்டு தஞ்சை மேல ராஜ வீதி திருஞான சம்பந்தர் திருமடத்தில் இருந்து சம்பந்தப் பெருமானின் தங்க வண்ண சித்திரத்தை அலங்கார சப்பரத்தில் வீதி வலமாக எழுந்தருளச் செய்வர்..
அது சமயம் தஞ்சையில் அமைந்துள்ள பிள்ளையார் முருகன் கோயில்களில் இருந்தும் வீதியுலா விமரிசையாக நடைபெறும்..
நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிகழும் இந்த வைபவத்தில் அவ்வப்போது தளர்ச்சி ஏற்பட்டாலும் சிறப்புற நிகழ்கின்றது..
இந்த ஆண்டில் விளங்கும் கோயில்கள் ..
1) ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் கோயில், கீழவாசல்..
2) ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயில், குறிச்சித் தெரு..
3) ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில்,
ஆட்டு மந்தைத் தெரு..
4) ஸ்ரீ பழனியாண்டவர் கோயில், அரிசிக்காரத் தெரு..
5) ஸ்ரீ ஜோதி விநாயகர் கோயில், சௌராஷ்டிர தெரு..
6) ஸ்ரீ கல்யாண கணபதி,
உஜ்ஜயினி காளி கோயில், கீழவாசல்..
7) ஸ்ரீ கமல ரத்ன விநாயகர், தெற்கு ராஜவீதி.
8) ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயில், மேல ராஜவீதி..
9) ஸ்ரீ செல்வ விநாயகர், காம்ராஜர் காய்கறி மார்க்கெட்
10) ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயில், வடக்கு வாசல்
11) ஸ்ரீ வெற்றி வேல் முருகன் கோயில், மேலவெளி..
இந்த வைபவம் அந்தந்த கோயிலைச் சார்ந்த இறையன்பர்களால் நடத்தப்படுவதாகும்..
கரந்தை கண்ணாடிப் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தபோது எதிர்பாராத கடுமையான காற்றும் மழைத் தூறலும்..
அன்றிரவு பலத்த மழை.. இரவில் நடக்க இருந்த முத்துப் பல்லக்கு மின் அலங்கார ரத ஊர்வலத்திற்கு தடுமாற்றம்..
மறுநாள் விடியற்காலையில் நடத்தப்பட்ட விழாவின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..
கடும் காற்று மழையின் காரணமாக - இந்த வருடம் தரிசனம் செய்ய இயலவில்லை..
விழாவின்
படங்களுக்கும்
காணொளிக்கும்
நன்றி..
நம்ம தஞ்சாவூர் Fb,
தஞ்சை ஞானசேகரன்..
தஞ்சை திவ்ய தேசத்தின்
புகழ் பெற்ற இருபத்து நான்கு கருடசேவை
நாளை வெள்ளிக் கிழமை
வைகாசி 26 (9/6) காலை ஏழு மணி முதல்
தஞ்சையின் ராஜ வீதிகளில்
நடைபெற உள்ளது..
அனைவரும் வருக..
அருளாசி பெறுக!..
திருஞானசம்பந்தர்
திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***




















































