நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
வெள்ளிக்கிழமை
மூடிக்கிடந்த கோயில் கதவுகளை திருநாவுக்கரசர் திறக்கவும்
ஞானசம்பந்தப் பெருமான் அடைக்கவும் பாடியருளிய
திருமறைக்காடு தலத்தில் சுந்தரர் பாடியருளிய
திருப்பதிகத் திருப்பாடல்.
யாழைப் பழித்தன்ன மொழி
மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழில் ஊடே சென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக் குரங்கு
உண்ணும் மறைக்காடே... 7/71/1
யாழிசையைப் பழித்த சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போன்ற சடைமுடியில் பிறை நிலவைச் சூடினவனும் ஆகிய இறைவனே...
உனது இருப்பிடத்தை அறிந்து வழிபட வேண்டின்,
அது, எளிய குரங்குகள் தாழம் புதர்களின் இடுக்கு வழியே, வாழைத் தோட்டத்தின் உள்
நுழைந்து, அங்கே கனிந்திருக்கின்ற வாழைப் பழங்களைப் பறித்து உண்கின்றதான திருமறைக்காடு அல்லவா!..
இன்று
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்
க்ருஷ்ணாய வாசுதேவாய
கோவிந்தாய ஹரி ஓம்
ஓம் சிவாய நம ஓம்
***


ஓம் நமச்சிவாய. சர்வம் கிருஷ்ணார்ப்பண நமஸ்து.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்