நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

மங்கலத் திருநாள் 1

கடந்த புதன் (18/4) அன்று காலையில் கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது மாமதுரைச் சித்திரைத் திருவிழா...

18 - 4 - 2018
முதலாம் திருநாள்...
19 - 4 -2018
இரண்டாம் திருநாள்..அன்பின் இனிய 
நிழற்படக் கலைஞர்களுக்கு
மனமார்ந்த நன்றி..
.......

அங்கயற்கண் அமுதே போற்றி
ஆலவாய் ஐயனே போற்றி.. போற்றி...
ஃஃஃ

11 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 2. மதுரையில் இருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. திருவிழா நாட்களில் கோவில் பக்கம் சென்றதில்லை. கூட்டம் என்றால் எப்போதுமே அலர்ஜி எனக்கு. அதற்கு காரணமும் தஞ்சைப் பெரிய கோவில் கும்பாபிஷேக அனுபவம்தான்! கூட்டத்தில் (புதிதாகக் கட்டக் கற்றுக்கொண்டு கட்டிக்கொண்ட) வேட்டியை இழந்த அனுபவம்!!!!!! இன்றுவரை வெட்டி கட்டவும் அலர்ஜி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இன்றுவரை 'வெட்டி' கட்டவும் அலர்ஜி//

   கடவுளே... கூகிள் தவறுகள்.. பார்க்காமல் சடசடவென்று டைப் அடித்துப் போட்டு விடுகிறேன். 'வேட்டி' என்று படிக்கவும் ப்ளீஸ்....

   நீக்கு
 3. பி சுசீலாம்மா பாடிய "ஆலவாய் அழகனே.. ஓம் ஐந்தெழுத்தின் அரசனே..." பாடல் கேட்டிருக்கிறீர்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைக் கேட்காமல்ல் இருந்துவிட முடியுமா? அருமையான பாடல் ஸ்ரீராம்.

   நீக்கு
 4. தகவல்களும், படங்களும் அருமை

  பதிலளிநீக்கு
 5. மதுரையில் இருந்தப்போ ஒவ்வொரு நாளும் மேலமாசி வீதி முக்குக்குச் சென்று அம்மன், சுவாமி வீதி உலா பார்த்துவிட்டு வருவோம். அதுவும் திருக்கல்யாணத்தன்று மேலக்கோபுரத்துக்கு அருகேயே இருந்த எங்கள் தெருவான மேலாவணி மூலவீதி வழியாத் தான் மீனாக்ஷியின் சீர் வரிசைகள்போகும். ஒவ்வொரு வீட்டிலும் ஆரத்தி எடுப்போம். வீட்டுத் திண்ணைகளில் வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்கி இருந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொள்வார்கள். கல்யாணத்தன்று எல்லா வீடுகளிலும் வடை, பாயசத்துடன் எல்லோருக்கும் சாப்பாடு போட்டிருக்கோம். இப்போத் திருநாள் பார்த்தே நாற்பது ஆண்டுகள்! :(

  பதிலளிநீக்கு
 6. மதுரைக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. எனக்கும் படங்கள் என் மாமா பெண் அனுப்பினாள்
  பார்த்து ரசித்தோம். உள்ளூர் என்று பேர் போக முடிவது இல்லை.
  தேர்திருவிழா பார்க்க தங்கை கூப்பிடுவாள் போவேன் இப்போது அவளும் இல்லை பேரனைப் பார்க்க ஊருக்கு போய் இருக்கிறாள். மீனாட்சி கூப்பிடுவாள் அன்று போக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. படங்கள் வெகு அழகு. சித்திரைத் திருநாள் சமயத்தில் ஊரில் இருந்தால் இப்படித் திருவிழாக்கள் பார்க்க நல்ல வாய்ப்பு.

  பதிலளிநீக்கு
 9. முதலாம் திருநாள் சிறப்பு படங்கள், தரிசனம் அருமை..
  இருவரின் கருத்தும்
  கீதா: அந்தக் கடைசிப் படம் செமையா இருக்கு அண்ணா..

  பதிலளிநீக்கு