நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 26, 2018

எங்க ஊர் தேர்..

இன்று அதிகாலை
யதா ஸ்தானத்தில் இருந்து
5.10 மணியளவில் புறப்பட்ட
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமியும்
ஸ்ரீ அல்லியங்கோதை அம்பிகையும்
5.45 மணியளவில் திருத்தேரில் எழுந்தருள
மகா ஆராதனைக்குப் பின் வடம் பிடிக்கப்பட்டது..


கூத்தொலி பறையொலியுடன்
தஞ்சை ராஜராஜேஸ்வர சிவகணத்தாரின்
திருக்கயிலாய வாத்யங்களும் அதிர்ந்து முழங்கின...

தஞ்சையின் ராஜவீதிகள் நான்கிலும் ஆயிரக் கணக்கான மக்கள் ஆவலுடன் கூடியிருந்தனர்...

எங்கெங்கும்
ஈஸ்வர... ஈஸ்வரா...
ஆரூரா... தியாகேசா... - எனும் திருமுழக்கம்...

திருத்தேரோட்டத்தின் திருக்காட்சிகள்
இந்தப் பதிவில்.....

படங்களை வழங்கியவர்
நண்பர் திரு. தஞ்சை ஞானசேகரன்....

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...

நான் எடுத்த படங்கள் பின்னொரு நாளில்...
ஏனெனில், அவற்றின் அளவை சுருக்க வேண்டியதாக இருக்கின்றது...


முற்பகல் 11.07 அளவில் தேர் நிலையை அடைந்தது..

நகர் முழுதும் நீர், மோர், குளிர்பானங்கள்,
அன்னதானம் என கோலாகலமாக இருந்தது..

தஞ்சை மாநகர் முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
சிறப்பாக செய்யப்பட்டிருந்தன..


இந்தப் பதிவினை மதியமே வெளியிட்டிருக்கலாம்...

வடம் பற்றி இழுத்தததுவும்
தேரோட்ட நெரிசலில் நடந்ததுவும்
சற்று அசதியாகி விட்டது...

எல்லாம் வல்ல
ஐயனும் அம்பிகையும்
எல்லாருக்கும் நலன்களைத் தந்தருள்வார்களாக..
...
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

8 கருத்துகள்:

 1. சித்திரைத் தேரோடும் மதுரை.

  தியாகராஜஸ்வாமி தேரோட்டம் தஞ்சையில்...

  வடம் பிடித்து இழுத்து புண்ணியம் தேடிக் கொண்டீர்கள்.

  படங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. எதை அல்லது யாரை அப்படி உற்றுப் பார்க்கிறீர்கள்?!!

  பதிலளிநீக்கு
 3. தேரோட்டம் என்றாலே ஒரு மகிழ்ச்சி. திருவரங்கத்தில் தேரோட்டம் பார்ப்பது வழக்கமாகி இருக்கிறது. இந்த முறை சித்திரைத் தேர் முடிந்துவிட்டதா தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. தேர் வரும் அழகே தனி.
  அற்புதக் காட்சி. அதிலும் வடம் பிடிக்கத் தனிப் புண்ணியம் வேண்டும்.
  மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அருமை ஜி தங்களது படம் கண்டதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் ஊர்த் தேர் மிக மிக அழகாக இருக்கிறதே!. அருமையான படங்கள்
  இருவரின் கருத்தும்
  கீதா: எங்கள் ஊர் திருவண்பரிசாரம் தேர் 27 இன்று நடந்தது அப்பா தேர் நிலைக்கு வந்ததும் ஃபோன் செய்தார். வடம் கொஞ்சம் பிடித்ததாகவும் சுற்று வந்ததாகவும். தேரும் சிறிது….வீதிகளும் சிறிதுதான். எனவே11 மணிக்குள் தேர் நிலைக்கு வந்துவிட்டது என்று சொனார் இப்போது யானை தடி போடுவதில்லையாம். முன்பெல்லாம் நான் இருந்த வரை யானை தடி இழுத்துவந்து மக்கள் தடி போடுவார்கள் மரசக்கரம் இடையில் கொடுத்து. இப்போது இரும்புச் சக்கரமாம். அதனால் ஸ்பீடாக வந்துவிடுகிறதாம். என்றாலும் எங்கள் ஊர்த் திருவிழாவை ரொமப்வே மிஸ் செய்கிறேன். சித்திரை என்றாலே எல்லா கோயில்களிலும் திருவிழா களை கட்டும்

  பதிலளிநீக்கு
 7. தஞ்சை தியாகராஜசுவாமி தேரோட்டம் படங்களும் பதிவும் சிறப்பு. பயனுள்ள தகவல்.

  பதிலளிநீக்கு
 8. முதல் முறையாகத் தஞ்சைத் திருத்தேர் தரிசனம்.

  பதிலளிநீக்கு